Sunday 24 March 2013

DAILY HOLY SLOKAS 25.03.13 TO 31.03.13

 


ஸர்வமங்களா

இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்னங்களும் இழைக்கப்பட்ட வைடூர்ய மகுடம் துலங்கப் பொலிகிறாள். இந்த நித்யா தேவியின்  கடைக்கண் பார்வை அனவரதமும், அன்பரைக் காக்கின்றது. தன் நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டுடுத்தி ஸர்வாலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள். இந்த நித்யா தேவியைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன.

மந்திரம்:

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
சந்த்ராத்மிகாயை திமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ திரயோதசி, கிருஷ்ண பக்ஷ த்ரிதியை.

வழிபடு பலன்கள்:
பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.






Today PANGUNI UTHIRAM. For more details , click :

http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=2004


ஜ்வாலா மாலினி


இந்த நித்யா தேவி நெருப்பு ஜ்வாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது. வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜ்வாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள். பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும் முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சதா சூழ்ந்துள்ளனர்.

மந்திரம்:

ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ சதுர்த்தசி, கிருஷ்ண பக்ஷ த்விதியை

வழிபடு பலன்கள்:
எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.




சித்ரா

திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திருமேனியள். பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள்.

மந்திரம்:

ஓம் விசித்ராயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
பௌர்ணமி, கிருஷ்ண பக்ஷ பிரதமை.

வழிபடு பலன்கள்:  திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.




Om gnaana roopaaya vithmahe avathoothaaya dheemahi thanno SAI prachodhayaath.



51 சக்தி பீடங்களில் முதல் சக்தி பீடமாகத் திகழும் பெருமை பெற்றது, திருவாரூர் கமலை பீடம். இத்தலத்தில் உள்ள அட்சரபீடத்தில் சக்தியின் 51 அட்சரங்களும் இடம்பெற்றுள்ளன. இத்தலத்தை தரிசித்தாலே 51 சக்தி பீடங்களையும் தரிசித்த பலனைப் பெறலாம். தேவேந்திரனால் ஆராதிக்கப்பட்ட தியாகராஜ மூர்த்தி அருளாட்சி புரியும் இத்தலத்தில் தேவியும் கமலாம்பிகையாக திருவருள்பாலிக்கிறாள். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், இத்தேவியைக் குறித்து கமலாம்பாள் நவாவரணம் எனும் அற்புத கீர்த்தனைகளை இயற்றியருளியுள்ளார். அந்த கீர்த்தனைகள் ஸ்ரீவித்யா உபாசகர்களால் வழி வழியாக இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.

பொதுவாகவே கமலாம்பிகை அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் கிட்டாதது எதுவும் இல்லை என்பது பெரியவர்களின் அனுபவம், நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கீழ்காணும் அஷ்டகத்தைப் பாராயணம் செய்து, அம்பிகை அருளால் அனைத்து நலன்களும் பெறுவோம். இத்துதி நாராயண தீர்த்தர் எனும் யதியின் சிஷ்யரால் இயற்றப்பட்டது.

பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம்
ப்ருந்தாரகைர்வந்திதாம்
மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம்
மந்தஸ்மிதாம் ஸுந்தரீம்
பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம்
போகாபவர்கப்ரதாம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்


செம்பருத்தி மலர் போன்ற செவ்வொளி பூண்டவளே, ஒளிமிகு சந்திரன் போன்ற முகம் கொண்டவளே, தேவர்களால் வணங்கப்பட்டவளே, மந்தாரம் முதலான மலர்களால் பூஜிக்கப்பட்டவளே, மனதிற்கு எப்போதும் சந்தோஷம் அளிப்பவளே, நிலைத்த புன்சிரிப்புடன் திகழ்பவளே, அழகின் இலக்கணமே, கர்மபந்தத்தை போக்குகிறவளே, முக்கண்களை உடையவளே, இவ்வுலகில் எல்லா சுகங்களையும் அளித்து, நிரந்தர சந்தோஷமான மோட்சத்தையும் அளிப்பவளே, பக்தர் விரும்பியனவெல்லாம் நிறைவேற்றித் தருபவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.










"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment