Wednesday 7 August 2013

மூன்றாம் பிறையை பார்க்கலாமா ? 08.08.2013




மூன்றாம் பிறையை  பார்க்கலாமா ?


மூன்றாம் பிறையை தாராளமாக பார்க்கலாம். இதையே சந்திரதரிசனம் என்பர். இதனால், செல்வவளம் பெருகும் என்பர். சிவன் மூன்றாம்பிறையைத் தன் தலையில் சூடிக் கொண்டிருப்பதை சுந்தரர், பித்தா பிறைசூடி என்றே சுந்தரர் தேவாரத்தில் போற்றுகிறார். நான்காம் பிறையைத்தான்(சதுர்த்தி திதியன்று) பார்க்கக்கூடாது. ஒருவேளை அன்று கண்ணில் சந்திரன் பட்டு விட்டாலும், விநாயகரை வணங்கி விட்டால் தோஷம் நீங்கிவிடும்.





ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷ த்விதீயையன்று அமாவாசைக்கு அடுத்த இரண்டாம் நாள்] இரவில் மூன்றாம் பிறை சந்திரனை, கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி தரிஸனம் செய்வது மிகச்சிறந்தது. 


 ஸ்வேதாம்பர ஸ்வேதவிபூ ஷணஸ்ச
ஸ்வேத த்யுதிர் தண்டதரோ த்விபாஹூ
சந்த்ரோ அம்ருதாத்மா வராத கிரீடி மயி பிரசாதம் விததாதுதேவ

தூய வெண்மையாலான ஆடையும் வெண்மை ஆபரணங்களும் அணிந்து கொண்டு , வெள்ளை வெளேர் என கிரீடத்துடன் ஒரு கையில் தண்டம் மற்றொரு கை வரத ஹஸ்தமுமாக பிரகாசிக்கும் அம்ருதமயமான சந்திர தேவன் எனக்கு அருள்தந்து அனுக்ரஹிக்கட்டும்.


த3தி4 ஸங்க2 துஷாராப4ம் க்ஷீரோதா3ர்ணவ ஸம்ப4வம்
நமாமி ஸஸிநம் ஸோமம் ஸம்போ4ர் மகுட பூ4ஷணம்

இவ்வாறு மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிஸிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.



இந்த மூனறாம் பிறைச்சந்திரனை நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டு தேடிக்கண்டுபிடித்து தரிஸிக்கும் படியாக இருக்கும்.  மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.
 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God



Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment