Wednesday, 14 January 2015

பொங்கலன்று சொர்க்கவாசல் !

பொங்கலன்று சொர்க்கவாசல் !


 


                         ப்த ரிஷிகளில் ஒருவரான கௌதமர் தீர்த்த யாத்திரை வந்தபோது, ஓரிடத்தில் பெருமாளின் தரிசனம் வேண்டித் தவமிருந்தார். பெருமாள் அவருக்கு அதியற்புதமாக சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்க, மகிழ்ந்த கௌதம முனிவர் அதே கோலத்தில் அங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டாராம். அப்போது அங்கிருந்த ஒரு புற்றைக் காட்டிய பெருமாள், அதில் தனது சயன வடிவ திருவுருவச் சிலை இருப்பதாகக் கூற, அதன்படி அந்த சிலையினைக் கண்ட கௌதமர் அவருக்கு ஸ்ரீரங்கநாதர் என்னும் திருநாமம் சூட்டிப் பிரதிஷ்டை செய்தார். பிரம்மா ரங்கநாதருக்கு பிரம்மானந்த விமானம் அமைத்தார். ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்ட இத்திருத்தலம் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற பெயரும் கொண்டது.

ஆதிரங்கம் என்று சிறப்பித்துப் போற்றப்படும் இத்திருத்தலத்தில் ஸ்ரீரங்கநாதர் யோக சயனத்தில் சாளக்ராமமூர்த்தியாகக் காட்சி தருகின்றார். பெருமாளின் பாதத்துக்குச் சற்று தள்ளி பவ்யத்துடன் கௌதமர் நிற்கிறார். திருவடிகளுக்கு அருகில் காவிரியன்னை வீற்றிருக்கிறாள். இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபிக் கமலத்தில் பிரம்மா என்று யாரும் கிடையாது. வடமேற்கு கோடியில் ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் திருச்சந்நிதி உள்ளது. உற்சவர் ஸ்ரீகஸ்தூரி ரங்கன் என்ற நாமத்துடன் காட்சி தருகிறார். பெருமாள் சந்நிதி முகப்பில் உள்ள இரண்டு தூண்களில் திருமாலின் முக்கியமான இருபத்து நான்கு வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

காவிரியாறு பாயும் வழியில், அதன் நடுவில் தீவு போன்று அமைந்த மூன்று தலங்களில் பெருமாள் ஸ்ரீரங்கநாதராகக் காட்சியருளுகிறார். அதில் முதல் தலம் இதுவானபடியால் ஆதிரங்கம் எனப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அந்தியரங்கம் என்றும்; இவற்றின் நடுவில் உள்ள ஷிவனசமுத்திரம் ஆலயம் மத்யரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக வைணவத் தலங்களில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே பெருமாள் சொர்க்கவாசலைக் கடப்பார். ஆனால் ஸ்ரீரங்கப்பட்டினம் தலத்தில் மகர சங்கராந்தி நாளன்று மாலையில் சொர்க்கவாசலைக் கடக்கிறார். வருடத்தில் அன்றைய ஒரு தினம் மட்டும் மூலவர் வெண்ணெய்க் காப்பில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். மேலும் தை மாதம் ரத சப்தமியையொட்டி இத்தலத்தில் ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அன்று சூரியோதயத்தில் உற்சவர் ஸ்ரீகஸ்தூரி ரங்கன் சூரிய மண்டல வாகனத்தில் திருவீதியுலா வந்து, பின்பு தேரில் எழுந்தருள்கிறார். சித்திரை வளர்பிறை சப்தமி நாளில் நடைபெறும் விழா ரங்கஜெயந்தி விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பூலோகத்திலுள்ள புண்ணிய நதிகள் அனைத்தும் தங்களிடம் சேர்ந்த பாவங்களைத் தீர்க்கும் பொருட்டு ஐப்பசி மாதத்தில், இத்தலத்து காவிரி நதியில் நீராடுகின்றன. இவ்வாறு பாவங்களனைத்தும் தன்னிடம் சேர்ந்ததும் காவிரியன்னை கோரவடிவம் பெற்றுவிடுகிறாள். அதற்கு விமோசனம் கிடைக்க இத்தலத்து பெருமாளை அவள் பூஜிக்க, பெருமாள் அவளுக்கு காட்சி கொடுத்து விமோசனமும் அளித்தாராம். அவரது திருப்பாதங்களை அவள் எப்பொழுதும் தரிசிக்கும் விதமாக சுவாமி பாதத்திற்கு அருகே காவிரியன்னை யின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தனக்கு விமோசனம் அளித்த பெருமாளுக்கு நன்றிக்கடனாக இத்தலத்தில் மட்டும் அவள் ஸ்ரீரங்கநாதருக்கு மாலையிட்டது போன்று இரண்டு பக்கமும் பிரிந்து கோவிலைச் சூழ்ந்து ஓடுகிறாள். காவிரி இரண்டாகப் பிரியும் இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது. இந்த இடம் கௌதம முனிவர் தவம் செய்த இடம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கநாதர் காவிரிக்கு எழுந்தருள்கிறார்.

ஸ்ரீரங்கநாதரின் திருமுக மண்டலம் முன்னர் கிழக்கு நோக்கி இருந்ததாம். நாளாக நாளாக முகம் சற்று திரும்பி தற்போது மேல்நோக்கிக் காணப்படுகிறது. கைக்கும் திருமுடிக்குமுள்ள இடைவெளியும் அதிகமாகிக் கொண்டு வருகிறதாம். இந்த மாற்றத்தை வயது முதிர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் கூறுவதாக ஒரு செவிவழிச் செய்தி உள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில் 125 கிலோமீட்டரிலும்; மைசூரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் ஸ்ரீரங்கப் பட்டினம் உள்ளது. ஆலயம் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment