Wednesday 26 July 2017

கயிலையே மயிலை, மயிலையே கயிலை ஏன் ???



மயிலாப்பூர் என்பதே மயிலை என்றும் மருவியது. மயிலையே கயிலை கயிலையே மயிலை என்றும் அழகுறச் சொல்வார்கள், இந்தத் தலத்தை! மயில், ஆர்ப்பு, ஊர் என்பதே மயிலாப்பூர் என்றானதாம்! அதாவது, மயில்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடம் என்று அர்த்தம். மயில்கள் ஆரவாரம் செய்த ஊர் என்றும் கொள்ளலாம். 
  அதுமட்டுமா? மயூராபுரி, மயூராநகரி என்றெல்லாம் இந்தத் தலம் குறித்து பிரம்மாண்ட புராணம் விவரிக்கிறது. ஸ்ரீபார்வதிதேவி, மயிலாக வந்து சிவனாரை வழிபட்ட அற்புதமான திருத்தலம். எனவே மயூராபுரி, மயிலை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

  சோமுகாசுரன் என்பவன் வேதங்களை களவாடிச் செல்ல, மகாவிஷ்ணு அவனை அழித்து, வேதங்களைக் காத்தருளிய தலம் இது. எனவே புராணத்தில் வேதபுரி என்று மயிலாப்பூருக்குப் பெயர் உண்டு. 

சுக்ராச்சார்யர், இங்கே உள்ள சிவலிங்கத்திருமேனியை தினமும் வழிபட்டு, தவம் இருந்தாராம். இதனால் சிவனருளைப் பெற்று, உமையவள் சகிதமாக சிவனாரின் திருக்காட்சியைத் தரிசிக்கும் பாக்கியத்தையும் பெற்ற திருத்தலம். எனவே, சுக்ராபுரி என்றும் மயிலாப்பூருக்குப் பெயர் இருந்திருக்கிறது என்கிறது ஸ்தல புராணம்! 
ஏழுக்கும் மயிலைக்கும் தொடர்பு! 
     பொதுவாகவே, ஏழு என்ற எண்ணுக்கும் இந்து மதத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. ஏழு ஜென்மம் என்பார்கள். ஏழு புண்ணிய நதிகள் என்பார்கள். ஏழு ஸ்வரங்கள் என்று இசையைச் சிலாகிப்பார்கள். சப்த முனிவர்களுக்கு புராணத்தில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. 

  தஞ்சைக்கு அருகில் சப்த ஸ்தான ஸ்தலங்கள் என்று உள்ளன. அதேபோல் சப்த மங்கை திருத்தலங்கள் என்று அமைந்திருக்கின்றன. திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தியாகாராஜர் குடிகொண்டிருக்கும் தலங்களை, சப்த விடங்க தலங்கள் என்று போற்றுவார்கள். 

 அதேபோல், ஏழுக்கும் மயிலாப்பூர் தலத்துக்கும் தொடர்புகள் பல உண்டு. ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ்வரர், ஸ்ரீகாரணீஸ்வரர், ஸ்ரீமல்லீஸ்வரர், ஸ்ரீவிருபாட்சீஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய சிவாலயங்கள் இங்கே அமைந்துள்ளன. இந்த ஏழு சிவன் கோயில்களும் அருகருகே உள்ளன. இந்தக் கோயில்களை முறையே ஒரேநாளில் தரிசிக்கலாம். அப்படித் தரிசித்தால், சகல வினைகளும் தீரும். முக்தி பெறலாம் என்பது ஐதீகம்! இத்தனைப் பெருமைக்கு உரிய தலம் என்பதால்தான், கயிலையே மயிலை, மயிலையே கயிலை எனும் பெருமை பெற்றது இந்தத் திருத்தலம். அதாவது திருக்கயிலாயத்துக்கு இணையானது மயிலாப்பூர் தலம்! 

  அதேபோல் மயிலாப்பூரில் ஏழு பெருமாள் கோயில்கள் உள்ளன. மயிலாப்பூர் கோயிலுக்கு அருகில் உள்ள திருக்குளம் உட்பட ஏழு திருக்குளங்களும் உள்ளன. கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடல் தீர்த்தம் (கடவுள் தீர்த்தம் என்பார்கள்), ராம தீர்த்தம் என ஏழு தீர்த்தங்களைக் கொண்டது மயிலாப்பூர்.
மட்டிட்ட புன்னையின் கானல் மடமயிலைஎன்று திருஞான சம்பந்தராலும் மாட மாமயிலை திருவல்லிக்கேனி கண்டேனேஎன திருமங்கை ஆழ்வாராலும் படப் பெற்றுள்ளதால் இத் தலம் பல நூற்றாண்டுகள் முன்பாகவே புகழ்பெற்ற தலமாகும். 63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார், 12 ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் ஆகியோர் அவதரித்த தலமாகும். இவ்வளவு ஏன் உலகப்பொது மறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் கூட இங்கே தான் பிறந்ததாக சொல்வோரும் உண்டு.

திருமயிலையின் பெருமைகளை ஒரு நாள் முழுதும் எடுத்துறைக்கலாம் அத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த ஊர் இத்திருமயிலை. இப்போது நாம் கான இருப்பது தனி சிறப்புகள் பல கொண்ட மயிலையின் ஒன்றான ஏழு சிவாலயங்கள். இந்த ஏழு சிவாலயங்களை தனித்தணியாக ஒவ்வோர் நாள் தரிசிப்பதை விட ஒரே நாளில் ஏழு ஆலயங்களையும் தரிசிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய தரிசனம் கயிலை யத்திரைக்கு சமம் என பெரியோர்கள் நம்பிக்கை. ஆதலால் மயிலையே கயிலை கயிலையே மயிலை.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnU696aklVFm8qjnxqbTeGMgXFyTqZjYVJHBVfFWScDgztVwei7KnGJnV3f0Fwpu-uUw14tn2ua6kwJOKpJqPr1OVVQ0D1KYL-_hE5LRR0vcjj6uEp3Wo-XUKwVt7VsWF_xme8YM902PM/s320/7+Sivan+kovil.JPG
 சப்த சிவாலயங்களுக்கும் செல்லும் வழி வரைப்படம்

தீர்தபாலீஸ்வரர் கோவில்

கால மாற்றத்தினால் இன்றைய கால கட்டத்தில் மேதை நடேசன் சாலை, கிருஷ்ணாம்பேட்டை,திருவல்லிக்கேனி பகுதியில் இருந்தாலும், திரிபுரசுந்தரி உடனுறை தீர்தபாலீஸ்வரர் கோவில் திருமயிலையிலேயே இருந்தது முன் காலத்தில். இந்த கோவிலை சுற்றி 64 தீர்த்த குளங்கள் இருந்தனவாம் அக்காலத்தில், மிகப்பெரிய தீர்த்தமாக வங்க கடலும் கோவிலுக்கு சற்று தொலைவிலேயே இருப்பதால் தீர்த்தங்களை பாரிபாலனம் செய்யும் ஈஸ்வரர்= தீர்த்தபாலீஸ்வரர். சூரியனை நோக்கி நீர் விடுவதான அர்கியம்இங்கு முன் காலத்தில் முனிவர்களாலும் சித்தர்களாலும் செய்யப்பட்டதாக நம்பிக்கை. சிறிய கோவில் தான் ஆனால் மிகவும் பழமையானது அமைந்திருக்கும்சுற்றுபுறத்திற்கு மாறாக கோவிலின் உள்ளே அமைதி தவழ்கிறது. திருபுரசுந்தரி அம்மன் பெயருக்கு ஏற்றவாரே அருளும் அழகும் பொங்க காட்சி அளிக்கிறார். நீர் சார்ந்த உணவுகளான பாயசம், பானகம் போன்ற உணவுகளை இறைவனுக்கு படைத்து வழிபட்டு எல்லோருக்கும் பகிர்ந்தால் நலம் பல பெறலாம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkH2EUIi_pyLu3bvGFFJQsjdSccJBqhsv-G_XRMP_fQQdqSduGlyKIx6ouLnn3uM5Q1HPHQ9K0RYJfACBlrg95e5q9bO2IdU1G8Z5p5fhVF7CGX6dnnc7tTctRgZnr8HcoOuLX4I-hk6A/s320/1+Theertha+baleeshwarar.jpg
தீர்த்தபாலிஸ்வரர் கோவில் முகப்பும் சன்னிதியும்  
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVoinF5L8U0f6TBOOO78FVO6vL3Dkr4zha3demwv8YBOXUV4-7xBWPXUZk-bkM0YRELTLICbTMgg7qx1LOSqhgqTqsaG2vB37hJUNNE1gU6T6zaWkZVYdCsrXhpTaBkpGf5zv7XGWOw-Y/s320/1+Theertha+baleeshwarar+1.jpg

விருப்பாக்ஷீஸ்வரர் கோவில்


வேண்டும் வரம் அளிக்கும் விருபாக்ஷீஸ்வரர்என பாபநாசம் சிவன் அவர்களால் பாடப்பெற்றவர் இந்த ஈஸ்வரர். விருப்பங்களை தன் கண் பார்வையலேயெ தீர்த்து வைக்கும் ஈஸ்வரர் ஆகையால் விருப்பாக்ஷீஸ்வரர். அம்மன் விசாலாக்க்ஷி. அக்ஷம் அன்பது கண் என பொருள், அப்பனும் அம்மையும் தங்கள் கண் பார்வையாலேயே எல்லா துயர்களையும் தீர்ப்பவர்கள். என் கருத்துப்படி இந்த ஏழு சிவாலயங்களில் மிகவும் பழமையானதாக காணப்படுவது இந்த கோவில் தான். பெரிய ஆவுடையாரில் அமைந்த பெரிய லிங்க திருமேனி. கோவில் அக்கிரமிப்பாளர்களிடம் அகப்பட்டு சற்றே மோசமான நிலையில் கானப்படுகிறது. ஏதோ கட்டுமானப்பனிகள் வேறு நடைபெற்று வருகிறன. விவரங்கள் தெரியவரும்போது மேலும் எழுதுகிறேன்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwT-jCW1iFiMnOWXGNDgXp5SYSy7Elkvfw3CsabcfDQItrs8fiSvvwY8d6BjHT9G9S22pFdcVg9KSOJP6jw7VTwcffZowpiUacvDhL6yliK7xfhaXAx5fg2yS53j_gyKOFCnT-x3vYgss/s320/2+Virupaksheeswara.jpg
விருப்பாக்ஷீஸ்வரர் கோவில் 



மல்லீஸ்வரர் கோவில்


முன் காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடத்தில் அமையப்பெற்றதால் மல்லீஸ்வரர் என்பது அர்ச்சகர் சொன்ன செய்தி. மரகதாம்பிகை சமேதராக அழகிய சிறிய கோவிலில் காட்சியளிக்கிறார் மல்லீஸ்வரர். மல்லிகையின் வாசம் போல பக்த்தர்கள் மனதில் பரவசம் ஏற்படுத்தும் ஈஸ்வரர். நமது
மனமாகிய மலரை நற்சிந்தனையோடு இறைவன் திருவடியில் சமர்பித்தால் நமக்கு ஏற்படும் நன்மைகள்பல. அது அகவழிபாடு. புறவழிபாடாக மனம் மிகுந்த மலர்களையும் உணவு வகைகளையும் தாமரை இலையில் படைத்து வழிபட்டு பகிர்வது இந்த கோவிலில் சிறப்பு.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLkCMysR28WlvnT3pyI4NTqei-cAw1AFzKM80vNOi_WFponx35u-SVyjbxnkspbkK9gM4TiWdwD2GMFSxL5GIrOqtMIhikFTJxfIWPPsOzDujAg8ch1JFw1I_N2yQAKYgiyubYqbvujdU/s320/3+Maleeshwarar1.jpg
மல்லீஸ்வரர் சந்நிதானமும்  கோபுரமும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmHGgOirxEglfPy3smXScXnMb8rzU_N-r_UE20wE3d9ivc0h0iMO2eKFlHZXXJ-sMF0pQaZn_ZNUpzEit0d4O7bxZ56GuBgooUh5fRCrAIglRl-sOrWGGfbHmMyiigOac_tkfGp2sgpqg/s320/3+Maleeswarar.jpg

காரணீஸ்வரர் கோவில்


ஸ்வர்ண லதாம்பிகை என்றழைக்க பட்ட பொற்கொடி அம்மன் உடனுறை காரணீஸ்வரர். காரணம்+ஈஸ்வரர் = காரணீஸ்வரர், எளிதிலேயே பொருள் விளங்குஙிறது, எல்லாவற்றுகும் காரணமான ஈஸ்வரர் என்பது. உலகில் நடக்கும் ஒவ்வோர் விஷய்த்திற்கும் ஓர் காரணம் உண்டல்லவா? அத்தனை காரணத்திர்கும் இறைவன் தான் காரணம் என்பதை உனர்த்தும் ஈஸ்வரன். குடும்ப உறவுகள் பினி இன்றி நலமாக வாழ இந்த திருத்தலத்தில் தேங்காய் எண்ணை, நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணை ஆகியவற்றை சம அளவில் கலந்து 6,12,18,24 ஆகிய அறு வரிசைவில் ஏற்றி இறைவனை வலம்
வந்து வழி படுதல் நலம்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8wqt2mbYkuM0ff4Du0o8GMdVYSg0U4eHtpph6YgJOTeU5NbiffM1Ir3BXF5Bm6Mz1vxcXPuuLHg_CIMaVSDKBXuVNbs-VrNBSIbxZuIgUweT-FbKaT10Qj83bkdfFg5u4d08m40BATJQ/s320/4+Karaneshwarar.jpg
காரநணீஸ்வரர் கோபுரமும் கொடி மரமும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaMlQfOToMoaQLFBbXcUJWC5_BMXgtZsTb3ExEbeIK5oTESd30VY0sOLrM2ZZFqMU6d5JpiyxIIAVN_BUs9ZZPRY01VuBIsxfenqK0LdPMAUug21x1no2ERFHEtxvQK_-Xw_HxDD7Kzjc/s320/4Karanesh.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkr0pZT7O7pvyAJEwBb1AsFts-efy6FaEZnFHUEPXsNHhAIqELTkZ8ZB2ZoRHxtq5y26YVR8VvHEB7k9NzwZtcE0Hf829CrFhC-HcPLcupDsq3hi_mGF9wK9j5qRKnrPBtPxTmjXzQso8/s320/4Karaneshwar+in+side.jpg
காரணீஸ்வரர் கோவில் உள்ளிருந்து



வாலீஸ்வரர் கோவில்

பெரிய நாயகி அம்மன் உடனுறை வாலீஸ்வரர் திருக்கோவில் அமைவிடம் தெரியாத படி அக்கிரமிப்பாளர்களால் மறைக்கபட்டிருக்கும் முக்கியமான திருத்தலம். புராண கதைகளின் படி வாலி மிகவும் பலம் வாய்ந்த வானரன். தன்னை எதிர்பவர்களின் பலத்தின் பாதியை தனக்கிகொள்ள வரம் பெற்றவன், அத்தகைய வாலி தனது ஆன்ம பலத்திற்காக இறைவனை வழிபட்ட தலம் இது. இறைவன் சந்நிதியிலே கைகூப்பி வனங்கியபடி வாலி இருக்கிறார். வாலி வழிபட்டதாக சொல்லப்படும் தலங்கள் எல்லாம் ஹனுமான் தனது சாபம் நீங்க வழிபட்ட இடங்களே என்ற கருத்தும் உள்ளது. இங்கே அமைந்துள்ள பஞ்ச லிங்கங்கள் சந்நிது விஷேசமானது, சித்தர் ஒருவரின் ஜீவ சமாதியின் மேலே இந்த பஞ்ச லிங்க சந்நிதி அமைந்துள்ளதாக தகவல். உடல், மன பலம் பெற இத்தலம் வந்து வழிபட சிறந்தது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_oBaLC7D6SJVc4-cS-qsON3yIicPnQemy0U8grKYhFWfP8TlAMeOMiwuZ1jrCvZZV2i0mK0OxzlS9PIeHixa2FrjkMdUjaHRbuIZ0_K7ZaMJY3ZER5X4ERo34CiC4071HnsmdCcAemk4/s320/5Vaaleshwarr.jpg
வாலீஸ்வரர் கோவில்

வெள்ளீஸ்வரர் கோவில்


வெள்ளி= நவ கிரகங்களில் ஒருவரான அசுர குரு சுக்கிராசாரியார்.

அசுர குருவான சுக்கிரன் வாமனரால் பரிபோன தன் ஒரு கண் பார்வையை திரும்ப பெற இறைவனை வழிபட்ட தலம். சுக்கிராச்சாரியார் வனங்கி வழிபடும் வகையில் இருக்கும் இலிங்க திருமேனியை இன்றுன் இங்கே காணலாம். காமாக்ஷி அம்மன், சைவ வைணவ சண்டையால் உருவாக்க பட்ட சரபேஸ்வரரின் புதிதாக அமைக்கப்பட்ட சந்நிதி ஆகியவையும் இங்கே உண்டு. கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க இங்கே வழிபடலாம். சித்திரக்குளம் என அழைக்கப்படும் குளம் ஆதியில் சுக்கிரக்குளம் என ஒரு தகவல் உண்டு. கண் த்ரிஷ்ட்டி நீங்க இந்த பெருமானை வழிபட வேண்டியது அவசியம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0WhMKmjIlNJhVDHKuI18qiXHai6VvqZcDWFa93vU6b9D_J8n4u6lpDlQNSIWlFiwTbNzhvBtIT4WlC3W4i1WMHJtL_JPEqy_OurCZuUp7LyP2P30coE7vJMr2FiLOpZVSU7lGshd7AIQ/s320/6+Velleshwarar.jpg
வெள்ளீஸ்வரர் கோவில்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT0-rKrMLCfFH5RvR_J4lj_Q5tEbLVDg55OQaZaPU0uQFiHRUZHblahZGQ8eiQXt7vLIJCTLM0BgPI3dwqFbS2Odgq_GVXWPMBvNzMavbTAD7jJYjt7UxTYgHpxHHbdP597A_YyuuHgzo/s320/Kabali+1.jpg
கபாலீஸ்வரர் கோவில்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigcruQUhOG6QFBV-l-O8OAUbRjUaUXJ4FgwYWCXQqRXE359KeTpZDGOazICbflvXqKYJPmTeY4nJt7qmS5JpME1GfxDnECS6J-rHt1Y6xoDUch__rpvy-u96peCN8OzTCVgNPdTvE6USI/s320/Kabali+2.jpg
கபாலீஸ்வரர் கோவில்


இந்த கோவிலின் பெருமைகளை சுருக்கமாக சொல்ல இயலாது  இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.  நினைப்பதெல்லம் தரும் கற்பக விருட்ச்சம் போல வரங்களை அள்ளி தரும் கற்பகாம்பாள், நர்த்தன வினாயகர்,சிங்கார வேலர், சந்நிதிகளுடன், பெரிய அழகிய திருகுளத்துடன் அழகிய பெரிய கோவில்.  
இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.
இத்தலம் வாயிலார் நாயனார் அவதாரத் தலம்[1]
திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் பழ நம்பிக்கை. இன்றைய கபாலீசுவரர் கோயிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருப்பதைக் காணமுடியும். இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான சிலைகள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றது.