Om Vakdeviyai cha Vidhmahe
Virinji Pathniyai cha Dheemahe
Thanno Vani Prachodayath .
Saraswathi Gayatri Meaning
Om, Let me meditate on the goddess of speech,
Oh, wife of Lord Brahma, give me higher intellect,
And let Goddess Vani illuminate my mind.
இந்தியாவில் காலத்தைக் கணக்கிடும்போது ஓர் ஆண்டை சூரியனின் சுழற்சி கதிக்கேற்ப உத்தரா யனம் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) என்றும்; தட்சிணா யனம் (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) என்றும் இரண்டு அயனங் களாகப் பிரித்துள்ளனர். இந்த இரண்டு அயனங்களை ருதுக்கள் எனப்படும் ஆறு பருவங்களாகப் பிரித்துள்ளனர். சித்திரை- வைகாசி வசந்த ருது (இளவேனில்); ஆனி-ஆடி, கிரீஷ்ம ருது (முது வேனில்); ஆவணி- புரட்டாசி வர்ஷ ருது (கார்); ஐப்பசி- கார்த்திகை சரத் ருது (குளிர்); மார்கழி- தை ஹேமந்த ருது (முன் பனி); மாசி- பங்குனி சிசிர ருது (பின் பனி) என்று ஆறு பருவங்கள் உள்ளன. இவற்றில் சித்திரை- வைகாசி மாதங்களுக்குரிய வசந்த ருது அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு பருவ நிலையாக உள்ளது. வசந்தத்தின்போதுதான் மலர்கள் மலர்ந்து, இயற்கை எங்கும் இனிமையாகவும் கண்களுக்கு விருந்தாகவும் காட்சியளிக்கிறது. வட மாநிலங்களில்- குறிப்பாக மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் இந்த வசந்தகாலத் துவக்கத்தில் சரஸ்வதிதேவியை வழிபடும் வழக்கம் நிலவுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 28-01-2012 அன்று வசந்த பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. தென் மாநிலங்களில் இந்த வழக்கம் இல்லை.
இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங் களிலும் குறிப்புகள் காணப்படு கின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப் புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவி யைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது.
வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணா வாதினி, வாணி தையானி என்றும் போற்றப் படுகிறாள் சரஸ்வதிதேவி. நல்லொழுக்கம், அறிவு, ஞானம், இசை, அறிவு, வாக்கு வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள் மக்களுக்குக் கிட்ட இந்த நாளில் வட மாநிலத்தவர் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர்கூட இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலை களைக் கற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் சிவபெருமான் மன்மதனை எரித்த நாளும் இதுதான் என்றும் கருதுகின்றனர்.
தென்மாநிலங்களில் விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்குவது போன்று, மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளன்றுதான் வித்யா ரம்பம் துவக்கப்படு கிறது. சரித்திர காலங்களில் இந்த வசந்த பஞ்சமி நாளில் தான் இலக்கியம் சம்பந்தமான மாநாடுகள், சதஸ்கள், போட்டிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து புலவர்களை அரசர்கள் சிறப்பித்துள்ளனர். இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக, பென்சில், பேனா, சிறிய இசைக் கருவிகள், தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாக ஆவர் என்றும், சங்கீத உபகரணங் களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.
இந்த வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதிதேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படு கிறது. மஞ்சள் சாமந்தி மலர்கள் வட மாநிலங் களில் பூஜைக்கும், மலர் மாலைகளுக்கும் உரிய முக்கிய மலராகத் திகழ்கிறது. சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான்! மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ், துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டாவினால் அலங்கரிக் கப்பட்டு, பளிச்சென்று எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறம் கண்களைப் பறிக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் மிகச் சிறப்பாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்தப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் கடுகுச் செடிகள் மஞ்சள் நிற மலர்களைப் பூத்துச் சொரிய, அதற்குப் பொருத்தமாக மக்கள் மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து பாங்க்ரா நடனம் ஆடுகின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் வசந்தத் திருவிழாவாகக் கொண்டாடப் படும் இந்த வசந்த பஞ்சாமி நாளில் மக்கள் எல்லாரும் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். இந்த மஞ்சள் நிறம் தேவர்களால் விரும் பப்படுவதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்நாளில் வகை வகையான உணவு வகைகளைத் தயாரித்து உண்பதிலும், பொது இடங்களில் பாடி மகிழ்வதிலும் மக்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் பாடும் பாடல்கள் இயற்கையையும் வசந்தத்தையும் போற்றுவதாக அமைந்துள்ளன.
வட கிழக்கு மாநிலங்களில்- குறிப்பாக அசாமில் வசந்த பஞ்சமிக்குத் தனி இடம் உண்டு. மலைவாழ் மக்கள்- குறிப்பாக மலைவாசி இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி, வட்டமாக நின்று ஆடிப்பாடி மகிழ்கின்றனர். அன்று சரஸ்வதிதேவிக்கு மிகச் சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த வசந்தகாலத்தில் ஏராளமாகக் காய்த்துக் குலுங்கும் பேரிக்காய்களும், மூலி எனப்படும் வெள்ளை முள்ளங்கி விதைகளும் தாம்பாளத்தில் வைக்கப்பட்டு சரஸ்வதிதேவிக்குப் பிரசாதமாக நிவேதிக்கப்படுகின்றன.
இவற்றோடு படைக்கப்படும் லட்டு, பர்பி போன்ற இனிப்பு வகைகளும்கூட மஞ்சள் நிறம் சேர்த்தே தயாரிக்கப்படுகின்றன. வீடுகளில் கார்க்கி மீட்டா சாவல் எனப்படும் (பாஸ்மதி அரிசி, சர்க்கரை, நெய், குங்குமப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து செய்யப்படும் இனிப்பு மஞ்சள் பொங்கல்) சிறப்பு இனிப்பு மதிய உணவில் தவறாமல் இடம் பெறுகிறது.
பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர். அன்று பட்டங்கள் விடுவதில் போட்டிகளும் பரிசுகளும் வழங்குவதும் உண்டு. பெரியவர்களும் சிறுவர்களும் போட்டி போட்டிக் கொண்டு வண்ணமயமான பட்டங்களைப் பறக்கவிடுகின்றனர். அன்று சிறுவர்களின் கொண்டாட்டங்களுக்கும் அளவே இல்லை. பெற்றோர்களும் பெரியோரும் அன்று குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக இருக்க விடுகின்றனர்.
"வசந்த பஞ்சமி' என்றாலே வட மாநிலங்களில் இது சரஸ்வதிதேவியை வழிபடும் நாள் என்பதோடு நில்லாமல், ஒரு சமுதாய விழாவாகவே மாறிவிடுகிறது. பங்குனி உத்திர நாளில் வட மாநிலங்களில் கொண்டாடப் படுகின்ற வண்ணமயமான ஹோலிப் பண்டிகைக்குக் கட்டியம் கூறும் ஒரு இனிய விழாவாக இந்த பஞ்சமி விளங்குகிறது.To know about a spl temple of saraswathy click:Shanmuga Kavasam is a powerful hymn of 30 versescomposed by Paamban Swami in 1891 for the benefit ofLord Murugan's devotees to protect them from illness ofbody and mind as well as from foes, wild beasts,poisonous creatures, demons, devils and biting insects.Several instances prove that this Shanmuga Kavacamverses effective in this respect. If you recite it with heartand soul to Lord Murugan, the results will be swift andmiraculous. To read click :ரத சப்தமி என்றால் என்ன?
இன்று ரதசப்தமி. தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் "ரத சப்தமி" வரும். தஞ்சை மாவட்டத்தில் சூரியனார் கோயிலிலும், திருப்பதியிலும் விழா நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கும் சங்கும், சக்கரமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் நாராயணனே சூரியன் என்றும் சொல்லுவார்கள். மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக் கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே சூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த பெருமையும் கண்ணனுக்கு உண்டு. அதனாலோ என்னமோ நாராயணனைச் சூரியநாராயணன் என்று சொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு.
ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. இந்தப் பூமி சுழல்வதை நினைவு படுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன், சொல்வது என்னவென்றால் பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும்.
ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.இன்று எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மபிதாமகர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன் கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. என்றாலும் காலம் போய்க் கொண்டே இருக்கிறது. பீஷ்மர் உயிர் பிரியவில்லை. அனைவரும் வந்து, வந்து அவரைப் பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். பீஷ்மருக்கோ ஒரே ஆதங்கம், அப்போது அங்கே அவரைப் பார்க்க வந்தார் வேத வியாசர்.
அவரிடம் பீஷ்மர், "நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், "பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். பீஷ்மருக்குப் புரிந்தது. "பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?" என வேண்டினார் பீஷ்ம பிதாமகர்.
வியாசர் அதற்கு, "பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டாலும், திரெளபதி, "கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!" என்று சொல்கின்றார். அப்போது," என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்," என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.
வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, "பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சார், அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்," என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், "வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்." என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.
திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி!’ பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். அன்று காலை, 4.30 மணி முதல், 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் மாறி மாறி ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார். 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு. ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். இளைஞர்கள் இந்த நாளில் சூரியனுக்குரிய ஆயிரம் பெயர்களை (சகஸ்ரநாமம்) சொல்லி வழிபட வேண்டும். பெரியவர்கள் மவுன விரதம் இருப்பது சிறப்பு. இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். ஜாதக ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். அவரே, நம் முதல் தந்தை. பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார். இவர் ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள். இந்நாளில் விரதமிருந்தால், எவ்வளவு கொடிய பாவங்களும் அகன்று விடும். இந்த நாளில் துவங்கி, தினமும் சூரியோதய நேரத்தில் குளிப்பவன் செல்வ வளம் பெறுவான். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது நல்ல நாள்.
இந்த விரதம் எளிமையானது. ஏழு எருக்கம் இலைகளை கால்கள், தோள்பட்டைகள், கைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீரை ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது மிகுந்த செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.அஷ்டமி - பைரவர் வழிபாடு - நலம் பெறும் நாட்கள்.
ஒவ்வொரு தமிழ் மாத அஷ்டமியும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் பைரவரை வழிபாட்டால் எல்லா நலமும் பெற்று வாழலாம். பைரவர் மிக சக்தி வாய்ந்தவர்.அஷ்டமி விபரம்.
சித்திரை: - சநாதனாஷ்டமி,
வைகாசி: - சதசிவாஷ்டமி,
ஆணி: - பகவதாஷ்டமி,
ஆடி: - நீலகண்டாஷ்டமி,
ஆவணி: - ஸ்தாணு அஷ்டமி,
புரட்டாசி: - சம்புகாஷ்டமி,
ஐப்பசி: - ஈஸ்வராஷ்டமி,
கார்த்திகை: - ருத்ராஷ்டமி,
மார்கழி: - சங்கராஷ்டமி,தை: - தேவதேவாஷ்டமி,மாசி: - மகேஸ்வராஷ்டமி,பங்குனி: - த்ரயம்பகாஷ்டமி.For bairavar 108 potri, visitFor more details regarding bairavar click:
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
Thursday, 26 January 2012
DAILY CALENDARS 28TH - 31ST JAN. 2012
Friday, 20 January 2012
DAILY CALENDARS 21st JAN. TO 27th JAN.
ஓம் ஆஞ்சநேய சுவாமியே போற்றி
ஓம் அஞ்சனா புத்திரா போற்றி
ஓம் ஆதித்தன் பிரியனே போற்றி
ஓம் அலங்கார வீரனே போற்றி
ஓம் கிஷ்கிந்தை வாழ்ந்தனை போற்றி
ஓம் பீமசேன ன் அண்ணனே போற்றி
ஓம் பாப விமோசனா போற்றி
ஓம் ஸ்ரீ ராம தூதனே போற்றி
ஓம் லங்காதகன தீரனே போற்றி
ஓம் சஞ்சீவிமலை கொணர்ந்தாய் போற்றி
ஓம் சுந்தரகாண்ட நாயகா போற்றி
ஓம் சீதா துயர் துடைத்தாய் போற்றி
ஓம் சீதக்களபம் அணிந்தாய் போற்றி
ஓம் சிவபிரியா போற்றி
ஓம் நவ வியாகரண மாகபண்டிதா போற்றி
ஓம் யோக நரசிம்ம பக்தனே போற்றி
ஓம் சாம்பவந்தர் அன்பனே போற்றி
ஓம் சாஸ்திரம் கற்றாய் போற்றி
ஓம் துர்க்கையின் இனியனே போற்றி
ஓம் தூயவாழ்வளிப்பாய் போற்றி
ஓம் பிரம் ரிஷியே போற்றி
சர்வ ரோகம் தீர்ப்பாய் போற்றி
ஓம் அங்கார தாரை துதிப்பாய் போற்றி
ஓம் லங்கனி பணிந்தாய் போற்றி
ஓம் விபீஷணன் உயிரோய் போற்றி
ஓம் பாரிஜாத தருதந்தாய் போற்றி
ஓம் வாயுபுத்ரா போற்றி
ஓம் வசந்தகால நாயகா போற்றி
ஓம் கந்தர்வ வித்யாகாரகா போற்றி
ஓம் அங்கதன் நண்பனே போற்றி
ஓம் தார்ரையே காத்தோய் போற்றி
ஓம் திரிசடை பகழ்ந்தாய் போற்றி
ஓம் தீவினை அழிப்போய் போற்றி
ஓம் மங்களம் தருவாய் போற்றி
ஓம் மாருதி திருத்தாள் போற்றி
ஓம் வெற்றியின் மைந்தா போற்றி
ஓம் சக்தியின் பிள்ளாய் போற்றி
ஓம் கணையாழி தந்தாய் போற்றி
ஓம் சூடாமணி கண்டாய் போற்றி
ஓம் மதுவனம் திரிந்தாய் போற்றி
ஓம் நிகும்பலை அழித்தாய் போற்றி
ஓம் மைநாகம் பார்த்தோய் போற்றி
ஓம் அணுவென புகுந்தாய் போற்றி
ஓம் ஆசையை வென்றாய் போற்றி
ஓம் கடிகையில் அமர்ந்தோய் போற்றி
ஓம் கங்கையில் நடந்தோய் போற்றி
ஓம் சங்கரன் அருளா போற்றி
ஓம் சாமுண்டி பிரியா போற்றி
ஓம் ராகுவை பிடித்தாய் போற்றி
ஓம் கேதுவே அடித்தாய் போற்றி
ஓம் மகாபல பராக்கிரம வீரா போற்றி
ஓம் கடல்தனை கடந்தாய் போற்றி
ஓம் வைதேகி புகழ்ந்தாய் போற்றி
ஓம் வஜ்ரதோள் உடையோய் போற்றி
ஓம் ராம்பக்த ஹனுமானே போற்றி
ஓம் நவசக்தி அருள்பாலா போற்றி
ஓம் சிரஞ்சீவி போற்றி
ஓம் பிரபுவே போற்றி
ஓம் பலசித்தி பெற்றாய் போற்றி
ஓம் கவி சேனாபதியே போற்றி
ஓம் ரத்னகுண்டல பதயே போற்றி
ஓம் சஞ்சலம் தீர்க்கும் சுவாமியே போற்றி
ஓம் யோக ஆஞ்சனேயா போற்றி
ஓம் மாதங்க வனப்பிரியனே போற்றி
ஓம் அஞ்சனா கர்ப ஹனுமந்தா போற்றி
ஓம் சீதா சோகநிவாரணா போற்றி
ஓம் தசக்கிரிவ கர்வம் அழித்தாய் போற்றி
ஓம் வஜ்ரகாயா போற்றி
ஓம் மஹாத்மா போற்றி
ஓம் ராம்பக்தாயா போற்றி
ஓம் மக்சகந்தி பிரியா போற்றி
ஓம் மருதமரவாசா போற்றி
ஓம் கந்த மதன பர்வதா போற்றி
ஓம் கோதாவரி தீரனே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் வீரனே போற்றி
ஓம் ராமனின் தூதா போற்றி
ஓம் சீதா சமேதராம்பாத சேவகா போற்றி போற்றி போற்றி
\
தை அமாவாசைஇந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம்வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு,கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூசை செய்வர்.
கடல்கூடும் கன்னியாகுமரி, இராமேசுவரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும்.
இராமேசுவரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு இராமேசுவரம்வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். இராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீ நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக - பிரகாச ஜோதியாகவே காணப்படும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.[1]
அமாவாசையை முழு நிலவு ஆக்கிய அன்னை அபிராமியின் பக்தனுக்கு அருளும் மாண்பினை விளக்கும் காட்சி யொன்று எல்லா ஆலயங்களிலும் , திருக்கடவூர் அன்னை அபிராமியின் திரு முன்னும் நடப்பது வழக்கம்
தை திருவோன வழிபாடு தலைமலை திருத்தல வரலாறு
http://www.thalaimalai.com/tamil/history.html
முருகன் வழிபாடு :
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=455
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.
Also see:
http://temple.dinamalar.com/New.php?id=1240
வாஸ்து காயத்ரி
ஒம் வாஸ்து புருஷாய வித்மஹே
யோக மூர்த்தியாய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
௨) ஒம் பிருத்வீ மூல தேவாய வித்மஹே
பூலோக நாதாய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
பொருள்: பூமியை மூலமாக கொண்டு தேவர்களின் இருப்பிடமாகவும் விளங்குபவனும்,பூவுலகின் நாதனாக தோன்றுபவனுமான ஸ்ரீவாஸ்து புருஷன் நம்மை காப்பாற்றுவாராக.
௩)ஒம் அநுக்ரஹ ரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
பொருள்: இல்லத்தில் வாழ்பவருககு சகல ஐஸ்வரியங்களையும் அருள்பவனும்,பூமித்தாயின் புத்திரனாக விளங்குபவனுமான வாஸ்து புருஷனை வணங்குகிறேன். அவர் நம்மை நல் வழியில் அழைத்து செல்வார்.
௪)மான தண்டம் கராப்ஜீயேன
வஹந்த பூமி ஸீதகம்
வந்தே ஹம் வாஸ்து புருஷம்
ததாநம் ஸ்ரியம் மே ஸுகம்.
பொருள்: பூமியின் அளவுகோலை கையில் வைத்திருப்பவரும் எனது வீட்டு
ஐஸ்வரியத்தின் அளவு கோலாக திகழ்பவுனுமான பூமிபுத்திரனாம் வாஸ்து
தேவனை வணங்குகிறேன். அவன் எனக்கு நிரந்தர ஐஸ்வரியத்தையும்
சுகத்தையும் அளிப்பாராக.
தை வெள்ளி அம்மன் வழிபாடு- தமிழ்
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=453
தை வெள்ளிக் கிழமை நாள்களில் இந்த மிக மிக எளிமையான மஞ்சள் பொங்கல் செய்வார்கள். வடை பாயசம் என்று விஸ்தாரமாக சமைக்க முடியாத பண்டிகை நாள்களில் கூட இதை மட்டும் செய்தால் போதும், மங்களகரமானது என்பதால், ‘கல்யாணப் பொங்கல்’ என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு. சிலர் குடும்பங்களில் பெண்கள் வயதுக்கு வந்ததும் முதல் உணவாக தாய்மாமன் பெயரைச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு இந்தப் பொங்கலை செய்துகொடுப்பார்கள் என்பதால் ‘அம்மான் பொங்கல்’ என்றும் பெயர்.
தேவையான பொருள்கள்:
அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணை/நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- அரிசி பருப்பைக் கழுவிக் களைந்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 பங்கு தண்ணீர் வைத்துக் குழைய வேக விடவும்.
- தேங்காய் எண்ணை அல்லது நெய் கலந்து பரிமாறலாம்.
* நெய் கலந்து குழைந்த பொங்கல் சுவையாக இருக்கும். ஆனால் அதைவிட தேங்காய் எண்ணை சேர்த்த உதிரியான பொங்கல் மிகுந்த சுவையாக இருக்கும். பொங்கல் உதிரியாக இருந்தாலும் நன்றாக மென்மையாக வெந்திருக்க வேண்டும்.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
Monday, 16 January 2012
CALENDARS & SLOKAS
இன்பமாய் வாழ
அநந்தாநந்த ஸுகத: ஸுமங்கள ஸுமங்கள:
இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:
ஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய:
காமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித:
இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:
ஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய:
காமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித:
இதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.
M(an) of G(olden) R(od) M.G.R. ,
the great persons's b'day. so visit:
http://allaboutmgr.blogspot.com/
கல்வியில் மேன்மை பெற
ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந: ஸ்ரீநிகேதந:
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர:
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர:
குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.
தோஷம் போக்கும் பிரதோஷம் வழிபாடு :
இரவும் பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு `உஷத் காலம்’ என்று பெயர். உஷத் காலத்தை பகற்பொழுதின் முகம் என்று சொல்வார்கள். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா. அவளது பெயரிலேயே இது உஷத்காலம் என அழைக்கப்படுகிறது.
இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் `பிரத்யுஷத் காலம்’ எனப்படும். சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதி தேவதை என்பதால் அவள் பெயரால் இது அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் “பிரதோஷ காலம்” என அழைக்கப்படுகிறது என்பார்கள்.
பிரதோஷ வேளையை “ரஜ்னிமுகவேளை” எனவும் கூறுவர். இதற்கு `இரவின் முகம்’ என்பது பொருள். இந்த பொழுது சாயும் நேரத்திற்கு அதிதேவதையான பிரத்யுஷாவிற்கு `சாயா’ என்ற பெயரும் உண்டு. இந்த வேளையில் பகல் முழுவதும் உழைத்துக் களைத்த உயிர்கள் அவளால் ரட்சிக்கப்படுகிற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் `சாயரட்சை’ எனவும் அழைக்கப்படுகிறது.
தோஷம் என்றால் குற்றமுடையது என்பது பொருள். அதேநேரம், பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே குற்றமற்ற இந்த பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும்? இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து, வணங்கல் வேண்டும்.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
Wednesday, 11 January 2012
DAILY CALENDARS
சங்கடஹர சதுர்த்தி விரதம்
விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!” எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.
ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் “விப்ரதன்” என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான்.
“ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன்.
விரதத்தின் பலன்கள்:
இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.
விரதம் இருப்பது எப்படி?
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.
அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,
"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்"
எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.
click the below given link to know about thyagaraaja baagavathar -
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=11638
Click to see / listen the gr8 pancha rathna krithis
http://www.youtube.com/watch?v=yFJrnfO9rjE&feature=related
http://www.youtube.com/watch?v=Wtwhb81Pm8E&feature=related
போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இதுநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த வருடத்திற்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை.
அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.
இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கர்ப்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.
போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
தீபாவளியைப் போலவே பொங்கலும் கண்ணபிரான் தொடர்புடைய பண்டிகையே!
இந்திரனுக்கு `போகி' என்ற பெயரும் உண்டு. மழையைப் பெய்யவைக்கும் இந்திரனுக்கு நன்றியாக தை முதல் நாள் புதுப் பயிரைப் படைத்து ஆராதிக்கும் பழக்கம் நிலவி வந்தது.
கிருஷ்ண அவதாரத்தின்போது அவர் அந்தப் படையலை நாராயணனின் அம்சமான சூரியநாராயணனுக்குப் படைக்கும்படி கட்டளையிட்டார். அதனால் கோபம் கொண்ட இந்திரன், பெரும் மழை பெய்யச் செய்தான்.
மக்கள் நிலை குலைந்து தவித்தனர். மாடுகள், கன்றுகளைத் தொலைத்துக் கதறின. அபயம் அளித்து கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மக்களைக் காப்பாற்றினார், கிருஷ்ணன். அன்று முதல் கண்ணபிரான் ஆணையின்படி மக்கள் சூர்ய பூஷை செய்ய ஆரம்பித்தனர். அதுவே பொங்கல் திருநாள்.
இதனால் வெட்கமடைந்த இந்திரன், இறைவனை வேண்ட, இறைவன் சங்கராந்திக்கு முன்னால் அவன் பெயரில் போகிப் பண்டிகை கொண்டாடப் பணித்தார்.
காளிங்க மடுவில் குதித்த கண்ணனுக்கு காளிங்கனின் விஜம் ஏறாதபடி ஆயர்பாடிச் சிறுவர்கள் தீ மூட்டி, பறை கொட்டி இரவு முழுவதும் விழித்திருந்தனர். அதன் காரணமாகவே போகியன்று பறைகொட்டும் வழக்கம் உண்டாயிற்று.
Sri ayyappan pancharathnam :
http://www.tamilhindu.net/t544-topic
தைப்பொங்கல் வரலாறு :
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன்/பரிதி, உதவிய கால்நடை, மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.
நான்கு நாள் திருவிழா :
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். [மார்கழி] கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
போகியன்று, வீட்டின் கூரையில்
செருகப்படும் பூலாப்பூ
தைப்பொங்கல்
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில்
பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு
கொண்டாடப்படும் பொங்கல் விழா
மாட்டுப் பொங்கல்
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
காணும் பொங்கல்
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
Saturday, 7 January 2012
CALENDARS & SLOKAS
சடைய நாயனார்
சைவவளமும், செல்வமும் கொழிக்கும் திருநாவலூர் நகரில் ஆதிசைவர் மரபில் சடையனார் என்னும் சிவத்தொண்டர் பிறந்தார். இவரது மனைவியார் பெயர் இசைஞானியார். தமிழுலகம் செய்த தவப்பயனாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரது மகனாகப் பிறந்தார். தமது மகனை நரசிங்கமுனையார் தம்மோடு அழைத்துப் போக எண்ணிய போது இவர் மன்னரது அன்பிற்குக் கட்டுப்பட்டு குழந்தையை மறுமொழி பேசாது அனுப்பி வைத்த பெருமையயைப் பெற்றவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார். திருதொண்டத் தொகை பாடி உலகையெல்லாம் உய்வித்த தெய்வபுதல்வனை ஈன்ற சடைய நாயனாரும், இசைஞானியாரும் இறைவன் திருவடி நீழலை அடைந்து இன்புற்றனர்.
குருபூஜை: சடையனார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
அரனடியே அடைந்திட்ட சடையனுக்கு அடியேன்.
நீண்ட ஆயுள் பெற, மரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம்
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:
நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.
இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.
நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்
தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.
ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா
தன்வந்திரி ஸ்லோகம்
சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.
Friday, 6 January 2012
ஆருத்ரா தரிசனம் 08.01.2012
தமிழ்மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம்; பரதனுக்கு பூசம்; லட்சுமணனுக்கு ஆயில்யம்; சத்ருக்னனுக்கு மகம்; கிருஷ்ண னுக்கு ரோகிணி; முருகனுக்கு விசாகம். இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.
சேந்தனார் ஒரு விறகு வெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு சிறிய ஊரில் வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான இவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்தான் உண்பார்.
ஒருநாள் அதிக மழை பெய்து விறகுகள் ஈரமானதால், அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு இல்லாததால் வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியார் வரவை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் வராத நிலையில் மனம் நொந்து போனார். அவரது பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெரு மான், ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.
அவரைப் பார்த்து அகமகிழ்ந்த சேந்தனார் கேழ்வரகுக் களியை அவ ருக்கு அளித்தார். அந்த சிவனடியார் களியை விரும்பி உண்டதுடன், எஞ்சி யிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்குத் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் வழக்கம்போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவில் கருவறையைத் திறந்தனர். என்ன ஒரு அதிசயக் காட்சி! நடராஜப் பெருமானைச் சுற்றி களிச் சிதறல்கள்! உடனே இந்த விவரம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதை கனவில் தோன்றி ஏற்கெனவே மன்னருக்குத் தெரிவித்திருந்தார்.
சேந்தனார் எங்கிருக்கிறார் என்று கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார் மன்னர். அன்று நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழா. அதற்கு சேந்தனாரும் சென்றிருந்தார்.
பெருமானைத் தேரில் அமர்த்தியபின் மன்னர் உள்பட எல்லாரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மழை காரணமாக தேர்ச் சக்கரங்கள் சேற்றில் அழுந்தியிருந்ததால் தேர் சிறிதும் நகரவில்லை. இதைக் கண்டு மன்னர் மனம் வருந்தியிருக்கும்போது, "சேந்தா! நீ பல்லாண்டு பாடு' என்று ஒரு அசரீரி கேட்டது.
அங்கிருந்த சேந்தனார் இறைவனை வேண்டி அவர் அருளால், "மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல' என்று தொடங்கி, "பல்லாண்டு கூறுதுமே' என்று முடித்து இறைவனை வாழ்த்தி 13 பாடல்களைப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.
சேந்தனாரை அடையாளம் கண்ட மன்னர், தாம் கண்ட கனவை அவரிடம் கூறினார்.
சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.
இதற்காக ஏற்கெனவே திருமணமானவர்கள், புதுமணத் தம்பதிகள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் வரவேண்டும். இங்குள்ள அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீரங்கம் அரங்கனையே மணப்பேன் என்று உறுதி கொண்டாள்; மணந்தாள். இதேபோல சிவபெருமானையே மணப்பேன் என்று அடம்பிடித்து அவரையே மணந்து கொண்டாள் அறம்வளர்த்த நாச்சியார்.
சுசீந்திரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேரூர் என்னும் சிறிய கிராமம். 550 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரில் பள்ளியறை நாச்சியார் என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். இவளது மகள்தான் அறம் வளர்த்த நாச்சியார். இவள் சிறுமியாக இருந்தபோதே சிவனை வழிபடுவதில் அதிக பற்றுடைய வளாக இருந்தாள்.
தினமும் சுசீந்திரம் வந்து சிவனை வழிபட்டு வந்தாள். இவள் பருவ மங்கை ஆனதும் அக்கால வழக்கப்படி வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இவளுக்கோ சுசீந்திரம் சென்று சிவனை தரிசிக்க ஆசை. ஆனால் வீட்டாரின்
அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சிவனையே நினைத்து நினைத்து, அவர் மீது கொண்ட பக்தி காதலாக மாறியது.
ஒருநாள் குறத்தி ஒருத்தி அவள் கையைப் பார்த்து, "நீ சிவனையே மணப்பாய்' என்று கூற, சிவன் மீதிருந்த காதல் மேலும் அதிகரித்தது.
சிவனை எண்ணி எண்ணியே சாப்பிடாமல், தூங்காமல் பித்து பிடித்தவள் போல் தன் அறையிலேயே சுற்றிச் சுற்றி வந்தாள் அறம்வளர்த்த நாச்சியார். இதைக் கண்ட அவளது தாய் பள்ளியறை நாச்சியார் அவளை ஒரு கூண்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சுசீந்திரம் வந்தாள். வண்டியில் இருந்து இறங்கிய அறம்வளர்த்த நாச்சியார் சிவன் சந்நிதானத்தை நோக்கி ஓடினாள்.
அதே நேரத்தில் அசரீரி ஒன்று, "உன் மகளை சிவனுக்குத் திருமணம் செய்து வை' என்று கட்டளையிட்டது.
அதன்படி ஒரு மாசி மாத மக நட்சத்திர நாளில் நாச்சியார்- சிவன் திருமணம் சுசீந்திரம் கோவிலில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
எனவே, நினைத்தவரையே திருமணம் செய்ய விரும்பும் பெண்கள், தீர்க்க சுமங்கலிகளாக வாழவிரும்பும் பெண்கள் சுசீந்திரம் கோவிலுக்கு வந்து அறம்வளர்த்த நாச்சி யாரை வணங்குகிறார்கள்.
இதற்காக ஆருத்ரா தரிசனம் என்ற விசேஷ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று அதி காலை நான்கு மணிக்கு சுசீந்திரம் கோவிலில் நடக்கிறது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்துகொள்கிறார்கள்.
ஒரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண், பார்வதிதேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். பார்வதிதேவிக்கும் இவள்மீது அன்பு இருந்தது.
திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும். ஆனால் திருமணமான மூன்றாவது நாளி லேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா அலறித் துடித்து, ""பார்வதிதேவியே! உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா? உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன்?'' என்று கூறிக் கதறி அழுதாள்.
அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு, அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இதற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.
உலகை இயக்கும் நடனம்
இந்த உலகமானது, நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. உலக இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது இறைவனின் நடனம்தான். இறைவன் அசைவதால்தான் உலகமே இயங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வுலகின் மூச்சாக இருந்து எப்போது இயக்குபவராக இறைவன் உள்ளார். எனவேதான் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்றனர். நடராஜரின் ஆட்டம் நின்றுவிட்டால் உலகின் இயக்கம் நின்றுவிடும்.
சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் சிவன் மட்டும் தனித்து ஆடியது 48. சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் என்கின்றன புராணங்கள். இதனையே பார்க்க முக்தி தரும் தில்லை என்கின்றனர். நம் ஆன்மாவை சிவகாமியாக எண்ணி, நடராஜனின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம்.
பதஞ்சலி முனிவருக்கு அருள்
பாற்கடலில் ஒரு நாள் மகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைப்பதைக் கண்ட ஆதிசேஷன் அதற்குக் காரணம் கேட்டார். திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் திருமால். பரந்தாமனையே மெய்மறக்கச் செய்த அந்த நாட்டியத்தைத் தானும் காண ஆவல் கொண்டார் ஆதிசேஷன். பெருமாளும் ஆசியளித்தார்.
உடனே ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக் கொண்டு, பூலோகம் வந்து தவம் செய்யத் தொடங்கினான். தவம் உக்கிரம் அடைந்தபோது, பதஞ்சலி முனிவர் திடீரென்று கேட்ட குரலால் கண்விழித்தார். சிவன் தோன்ற, பதஞ்சலி சிவனிடம் திருநடனம் காணவேண்டி, உம்மைப் போலவே வியாகர் பாதரும் காத்திருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார்.
அதன்படி பதஞ்சலி முனிவரும் வியாக்ர பரதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர். எனவே மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து, சிவாலயம் சென்று, நடராஜ தரிசனம் கண்டால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் பெருகும் என்கின்றன புராணங்கள்
மரகத நடராஜர்
ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிப்பார். ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்.
உலகை இயக்கும் நடனம்
இந்த உலகமானது, நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. உலக இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது இறைவனின் நடனம்தான். இறைவன் அசைவதால்தான் உலகமே இயங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வுலகின் மூச்சாக இருந்து எப்போது இயக்குபவராக இறைவன் உள்ளார். எனவேதான் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்றனர். நடராஜரின் ஆட்டம் நின்றுவிட்டால் உலகின் இயக்கம் நின்றுவிடும்.
சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் சிவன் மட்டும் தனித்து ஆடியது 48. சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் என்கின்றன புராணங்கள். இதனையே பார்க்க முக்தி தரும் தில்லை என்கின்றனர். நம் ஆன்மாவை சிவகாமியாக எண்ணி, நடராஜனின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம்.
பதஞ்சலி முனிவருக்கு அருள்
பாற்கடலில் ஒரு நாள் மகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைப்பதைக் கண்ட ஆதிசேஷன் அதற்குக் காரணம் கேட்டார். திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் திருமால். பரந்தாமனையே மெய்மறக்கச் செய்த அந்த நாட்டியத்தைத் தானும் காண ஆவல் கொண்டார் ஆதிசேஷன். பெருமாளும் ஆசியளித்தார்.
உடனே ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக் கொண்டு, பூலோகம் வந்து தவம் செய்யத் தொடங்கினான். தவம் உக்கிரம் அடைந்தபோது, பதஞ்சலி முனிவர் திடீரென்று கேட்ட குரலால் கண்விழித்தார். சிவன் தோன்ற, பதஞ்சலி சிவனிடம் திருநடனம் காணவேண்டி, உம்மைப் போலவே வியாகர் பாதரும் காத்திருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார்.
அதன்படி பதஞ்சலி முனிவரும் வியாக்ர பரதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர். எனவே மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து, சிவாலயம் சென்று, நடராஜ தரிசனம் கண்டால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் பெருகும் என்கின்றன புராணங்கள்
மரகத நடராஜர்
ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிப்பார். ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்.
அஷ்ட சபைகளில் ஆடிய சுவாமி நெல்லையப்பர்
புராண வரலாற்றின் படி நம் தெய்வங்களாகிய திருமால் மல்லாடல் என்ற நடனத்தையும், துர்க்கை மரக்கால் என்ற நடனமும், இந்திராணி கடயம் என்ற நாட்டியத்தையும், முருகப்பெருமான் குடை, துடி போன்ற நடனங்களையும், காமன் பேடியாட்டம் என்ற ஆட்டத்தையும் விநாயகர் விகடக்கூத்து என்ற நடனங்களையும் ஆடி நடனக்களைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இருப்பினும் எல்லாம் வல்ல சிவ பெருமான் ஆடிய திரு நடனங்கள் பல.
திரிகூடமலையாகிய திருக்குற்றாலத்துக்கு வந்த பிரம்மன், திருமால், தேவர்கள் போன்றவர்களுக்காக பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடி காட்டினார். திருவெண்காடு ஸ்தலத்தில் சுவாத கேது மன்னனுக்காக ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். திருநள்ளாறு தலத்தில் இறைவன் பித்தேறியவராக மனம் போன போக்கில் உன்மத்த நடனம் ஆடினார். நாகையில் அலை போல மேலெழுந்து வீடு நடனம் ஆடினார். திருமறைக்காட்டில் சிவபெருமான் அன்னப்பறவை போல ஹம்ச நடனம் ஆடினார்.
கோழி சிறகை விரித்து ஆடுவது போன்ற குக்குட நடனத்தை திருக்காறாயில் என்ற ஸ்தலத்தில் இறைவன் ஆடிக்காட்டினார். திருவாரூரில் சிவபெருமான், திருமாலின் மூச்சு காற்றுக்கு இணையாக அஜபாநடனம் ஆடிக்காட்டினார் மாயூரத்தில் ஈசன் ஆண்மயிலைப் போல மயூரநடனம் ஆடிக் காண்பித்தார். இதுபோன்ற ஏராளமான நடனங்களை ஆடிக்காட்டிய அந்த பரமன், நெல்லையில் காளிக்காக ஆடிக்காட்டிய நடனம் சங்கர தாண்டவம் ஆகும். அது மட்டும் அல்ல. நெல்லையப்பர் ஆடிக்காட்டிய திரு நடனங்கள் பல. அவர் திருநெல்வேலியில் உள்ள தாமிரசபை, ராஜசபை, திருக்கல்யாணசபை, பரப்பிரம்ம சபை, சபாபதி உறையும் சன்னதிசபை, மானூரில் உள்ள ஆச்சார்யசபை, போன்ற அஷ்டசபைகளில் திருநடனம் புரிந்துள்ளார்.
ஆனந்த நடனம்நெல்லை நாதன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் போது, அன்னை வடிவுடையாளாகிய காந்திமதி அவரை வணங்கி போற்றி துதித்து நின் நடனம் காண விரும்புகிறேன் என்றாள். அதே போல தேவர்களும் துதித்து திருநடனம் காண வேண்டும் என்று வேண்டினர். அவர்களுக்காக எல்லாம் வல்ல சிவபெருமான் தாமிரசபையில் ஆனந்த நடனம் ஆடினார். இதை கண்ட அனைவரும் வேண்டும் வரம் பெற்று இன்புற்றனர்.அகோர தாண்டவம்அதே போல சிவ பெருமான் திருமால் உள்ளிட்ட, மற்றய தேவர்களுக்காக, அஷ்டசபைகளிலும் அகோர தாண்டவம் ஆடிக்காட்டி அருளினார்.காளியுடன் நடனம்அன்னையானவள் காளிரூபம் கொண்டு, என்னுடன் ஆடி வெற்றிபெற முடியாது என்று சொல்ல. அதற்கு சிவபெருமான் காளியுடன் வாது பேசி தாமிரசபையில் ஒரு காலைத்தூக்கி சங்கர தாண்டவம் ஆடினார். அதுகண்டு காளி வெட்கம் அடைந்து, காந்திமதியாக கோயிலுக்குள் புகுந்தாள்.ஆச்சார்ய சபையில் ஆச்சரிய நடனம்தாருகா வனத்து ரிஷிகளுக்காக, மானூரில் உள்ள ஆச்சார்ய சபையில் பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் சுந்தரவடிவம் கொண்டு ஆச்சரிய நடனம் ஆடினார்.
இதை கண்ட வடிவாள், திருமால் முதலியோரெல்லாம் போற்றி துதித்தனர். அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் நெல்லை நாதன் வேண்டும் வரங்களைத் தந்து; தேவர்கள் போற்ற ஆலயத்தில் வீற்றிருந்தார். எனவே சித்திரைமாத திருவோண நட்சத்திரதினத்து சபாபதி அபிஷேகம், ஆவணியில் வரும் சதுர்தசியன்று சபாபதி அபிஷேகம், மார்கழி திருவாதிரையில் சூரிய உதயத்தில் ஆருத்ரா தரிசனம், மாசி மாத சதுர்த்தியில் நடராஜரின் அபிஷேகம் போன்றவைகளை காண்போர்களுக்கு முக்தி என்பது விரைவில் கிடைக்கும் என்று திருநெல்வேலி ஸ்தல புராணம் கூறுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரான்
8.1.2012
தாமிரசபையில் திருநடனம் கண்டால் என்ன கிடைக்கும்
மலையாள நாட்டில் அன்னதி என்ற நகரத்தில் கொண்டி என்ற பெயர் கொண்டவன் வாழ்ந்து வந்தான். அவன் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்யவில்லை தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகளிலும் நீராடவில்லை களவு, கொலை, கொள்ளை போன்ற கொடும் பாவங்களை செய்து காலம் கழித்து வந்தான். இதனால் இவனை பிரம்மஹத்தி என்ற தோஷம் பிடித்துக்கொண்டு அவனை விரட்டிக்கொண்டே வந்தது.அவன் ஒரு சமயம் திருநெல்வேலிக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நகர் காற்று பட்டவுடன் அவனுக்கு சிந்தை தெளிவு அடைந்தது. தெளிவு பெற்ற தொண்டி சிந்துபூந்துறையில் நீராடி, நெல்லையப்பர் கோயிலுக்குள் புகுந்து மூலமகாலிங்கத்தையும், வேணுவன நாதரையும் வணங்கி, "வடிவாளை துதித்துப் போற்றி திருவாதிரை தினத்தில் தாமிரசபையில் நெல்லை நாதனின் திரு நடனமும் கண்டான். பின் நகரத்தை விட்டு வெளியேறி வரும் போது அவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாலும், பசியின் காரணமாகவும் படுத்து தூங்கிவிட்டான்.அப்போது நாகன் என்ற கொடும்பாவி, தொண்யிடம் வந்து, இவன் கையில் பொருள் ஏதும் உள்ளதா என பரிசோதித்து, பொருள் இல்லாமையால் தொண்டியை அடித்தான். பிறகு இருவரும் நட்பாயினர். இருவரும் முன் போல வழிப்பறி பண்ணி வாழ்ந்தனர். இருவரின் தொல்லை பொறுக்க முடியாத அரசன் இருவரையும் கொன்றான். அப்போது எமதூதர்கள் இருவரும் செய்த பாவங்களுக்காக தண்டித்தனர். உடனே குறுக்கிட்ட சிவகணங்கள் அவ்விருவரையும் விமானத்தில் ஏற்றி சிவபெருமான் வாழும் கைலாயத்தில் சேர்த்தனர்.தொண்டி தாமிரசபையில் திரு நடனம் கண்டதால் பாவம் நீங்கப்பெற்றான். நாகன் தாமிரசபை தரிசனம் கண்ட தொண்டியை கண்டதால் பாவம் நீங்கப்பெற்றான். ஆக தாமிரசபையில் திரு நடனம் காண்பவர்களுக்கு. திரு நடனம் கண்டவர்களை காண்பவர்களுக்கும் முக்தி உண்டு என்று திருநெல்வேலி ஸ்தல புராணம் கூறுகிறது.
மேலும் எல்லாம் வல்ல சிவபெருமான் தென்தமிழ் நாட்டில் முதன் முதலாக கால்பதித்த இடமாகிய செப்பறையிலும் பஞ்சலோக படிமஸ் தலங்களாகிய கட்டாரி மங்கலம், கருவேலன்குளம், கரிசூழ்ந்த மங்கலம், தருவை போன்ற ஸ்தலங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக திரு நடனம் புரிந்துள்ளார். அகஸ்தியர், லோபா முத்திரை ஹயக்ரீவர், அத்ரி முனிவர், அனுசுயா தேவி போன்ற ரிஷிகளுக்காக, சித்ரகூடசபையில் திரு நடனம் காட்டியும் உள்ளார்.பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் திரு நடனம் புரிந்த பஞ்சசபைகளில் சித்திரசபை (குற்றாலம்) தாமிரசபை (திருநெல்வேலி) ஆகிய இரண்டு சபைகளும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது சிறப்பு. தவிர நெல்லையப்பர் அஷ்ட சபைகளில் திரு நடனம் புரிந்ததும். பஞ்சலோக படிமஸ்தலங்களில் திரு நடனம் புரிந்ததும் தென்மாவட்ட மக்களுக்கு கிடைத்த பெருமை
திரிகூடமலையாகிய திருக்குற்றாலத்துக்கு வந்த பிரம்மன், திருமால், தேவர்கள் போன்றவர்களுக்காக பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடி காட்டினார். திருவெண்காடு ஸ்தலத்தில் சுவாத கேது மன்னனுக்காக ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். திருநள்ளாறு தலத்தில் இறைவன் பித்தேறியவராக மனம் போன போக்கில் உன்மத்த நடனம் ஆடினார். நாகையில் அலை போல மேலெழுந்து வீடு நடனம் ஆடினார். திருமறைக்காட்டில் சிவபெருமான் அன்னப்பறவை போல ஹம்ச நடனம் ஆடினார்.
கோழி சிறகை விரித்து ஆடுவது போன்ற குக்குட நடனத்தை திருக்காறாயில் என்ற ஸ்தலத்தில் இறைவன் ஆடிக்காட்டினார். திருவாரூரில் சிவபெருமான், திருமாலின் மூச்சு காற்றுக்கு இணையாக அஜபாநடனம் ஆடிக்காட்டினார் மாயூரத்தில் ஈசன் ஆண்மயிலைப் போல மயூரநடனம் ஆடிக் காண்பித்தார். இதுபோன்ற ஏராளமான நடனங்களை ஆடிக்காட்டிய அந்த பரமன், நெல்லையில் காளிக்காக ஆடிக்காட்டிய நடனம் சங்கர தாண்டவம் ஆகும். அது மட்டும் அல்ல. நெல்லையப்பர் ஆடிக்காட்டிய திரு நடனங்கள் பல. அவர் திருநெல்வேலியில் உள்ள தாமிரசபை, ராஜசபை, திருக்கல்யாணசபை, பரப்பிரம்ம சபை, சபாபதி உறையும் சன்னதிசபை, மானூரில் உள்ள ஆச்சார்யசபை, போன்ற அஷ்டசபைகளில் திருநடனம் புரிந்துள்ளார்.
ஆனந்த நடனம்நெல்லை நாதன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் போது, அன்னை வடிவுடையாளாகிய காந்திமதி அவரை வணங்கி போற்றி துதித்து நின் நடனம் காண விரும்புகிறேன் என்றாள். அதே போல தேவர்களும் துதித்து திருநடனம் காண வேண்டும் என்று வேண்டினர். அவர்களுக்காக எல்லாம் வல்ல சிவபெருமான் தாமிரசபையில் ஆனந்த நடனம் ஆடினார். இதை கண்ட அனைவரும் வேண்டும் வரம் பெற்று இன்புற்றனர்.அகோர தாண்டவம்அதே போல சிவ பெருமான் திருமால் உள்ளிட்ட, மற்றய தேவர்களுக்காக, அஷ்டசபைகளிலும் அகோர தாண்டவம் ஆடிக்காட்டி அருளினார்.காளியுடன் நடனம்அன்னையானவள் காளிரூபம் கொண்டு, என்னுடன் ஆடி வெற்றிபெற முடியாது என்று சொல்ல. அதற்கு சிவபெருமான் காளியுடன் வாது பேசி தாமிரசபையில் ஒரு காலைத்தூக்கி சங்கர தாண்டவம் ஆடினார். அதுகண்டு காளி வெட்கம் அடைந்து, காந்திமதியாக கோயிலுக்குள் புகுந்தாள்.ஆச்சார்ய சபையில் ஆச்சரிய நடனம்தாருகா வனத்து ரிஷிகளுக்காக, மானூரில் உள்ள ஆச்சார்ய சபையில் பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் சுந்தரவடிவம் கொண்டு ஆச்சரிய நடனம் ஆடினார்.
இதை கண்ட வடிவாள், திருமால் முதலியோரெல்லாம் போற்றி துதித்தனர். அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் நெல்லை நாதன் வேண்டும் வரங்களைத் தந்து; தேவர்கள் போற்ற ஆலயத்தில் வீற்றிருந்தார். எனவே சித்திரைமாத திருவோண நட்சத்திரதினத்து சபாபதி அபிஷேகம், ஆவணியில் வரும் சதுர்தசியன்று சபாபதி அபிஷேகம், மார்கழி திருவாதிரையில் சூரிய உதயத்தில் ஆருத்ரா தரிசனம், மாசி மாத சதுர்த்தியில் நடராஜரின் அபிஷேகம் போன்றவைகளை காண்போர்களுக்கு முக்தி என்பது விரைவில் கிடைக்கும் என்று திருநெல்வேலி ஸ்தல புராணம் கூறுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரான்
8.1.2012
தாமிரசபையில் திருநடனம் கண்டால் என்ன கிடைக்கும்
மலையாள நாட்டில் அன்னதி என்ற நகரத்தில் கொண்டி என்ற பெயர் கொண்டவன் வாழ்ந்து வந்தான். அவன் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்யவில்லை தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகளிலும் நீராடவில்லை களவு, கொலை, கொள்ளை போன்ற கொடும் பாவங்களை செய்து காலம் கழித்து வந்தான். இதனால் இவனை பிரம்மஹத்தி என்ற தோஷம் பிடித்துக்கொண்டு அவனை விரட்டிக்கொண்டே வந்தது.அவன் ஒரு சமயம் திருநெல்வேலிக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நகர் காற்று பட்டவுடன் அவனுக்கு சிந்தை தெளிவு அடைந்தது. தெளிவு பெற்ற தொண்டி சிந்துபூந்துறையில் நீராடி, நெல்லையப்பர் கோயிலுக்குள் புகுந்து மூலமகாலிங்கத்தையும், வேணுவன நாதரையும் வணங்கி, "வடிவாளை துதித்துப் போற்றி திருவாதிரை தினத்தில் தாமிரசபையில் நெல்லை நாதனின் திரு நடனமும் கண்டான். பின் நகரத்தை விட்டு வெளியேறி வரும் போது அவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாலும், பசியின் காரணமாகவும் படுத்து தூங்கிவிட்டான்.அப்போது நாகன் என்ற கொடும்பாவி, தொண்யிடம் வந்து, இவன் கையில் பொருள் ஏதும் உள்ளதா என பரிசோதித்து, பொருள் இல்லாமையால் தொண்டியை அடித்தான். பிறகு இருவரும் நட்பாயினர். இருவரும் முன் போல வழிப்பறி பண்ணி வாழ்ந்தனர். இருவரின் தொல்லை பொறுக்க முடியாத அரசன் இருவரையும் கொன்றான். அப்போது எமதூதர்கள் இருவரும் செய்த பாவங்களுக்காக தண்டித்தனர். உடனே குறுக்கிட்ட சிவகணங்கள் அவ்விருவரையும் விமானத்தில் ஏற்றி சிவபெருமான் வாழும் கைலாயத்தில் சேர்த்தனர்.தொண்டி தாமிரசபையில் திரு நடனம் கண்டதால் பாவம் நீங்கப்பெற்றான். நாகன் தாமிரசபை தரிசனம் கண்ட தொண்டியை கண்டதால் பாவம் நீங்கப்பெற்றான். ஆக தாமிரசபையில் திரு நடனம் காண்பவர்களுக்கு. திரு நடனம் கண்டவர்களை காண்பவர்களுக்கும் முக்தி உண்டு என்று திருநெல்வேலி ஸ்தல புராணம் கூறுகிறது.
மேலும் எல்லாம் வல்ல சிவபெருமான் தென்தமிழ் நாட்டில் முதன் முதலாக கால்பதித்த இடமாகிய செப்பறையிலும் பஞ்சலோக படிமஸ் தலங்களாகிய கட்டாரி மங்கலம், கருவேலன்குளம், கரிசூழ்ந்த மங்கலம், தருவை போன்ற ஸ்தலங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக திரு நடனம் புரிந்துள்ளார். அகஸ்தியர், லோபா முத்திரை ஹயக்ரீவர், அத்ரி முனிவர், அனுசுயா தேவி போன்ற ரிஷிகளுக்காக, சித்ரகூடசபையில் திரு நடனம் காட்டியும் உள்ளார்.பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் திரு நடனம் புரிந்த பஞ்சசபைகளில் சித்திரசபை (குற்றாலம்) தாமிரசபை (திருநெல்வேலி) ஆகிய இரண்டு சபைகளும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது சிறப்பு. தவிர நெல்லையப்பர் அஷ்ட சபைகளில் திரு நடனம் புரிந்ததும். பஞ்சலோக படிமஸ்தலங்களில் திரு நடனம் புரிந்ததும் தென்மாவட்ட மக்களுக்கு கிடைத்த பெருமை
UTHRAKOSA MANGAI NATARAJAR
UTHRAKOSA MANGAI NATARAJAR
UTHRA KOSA MANGAI NATARAJAR WITH ALANKAARAM
VAZHUVOOR GAJA SAMHAARAMURTHY
சிதம்பர ரகசியம்: சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.
To view an amazing Natarajar made with word "NATARAJAR" click :
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
Subscribe to:
Posts (Atom)