Oct 24 Wed. : Dhasami till 10.58pm. Avittam till 9.46pm.
Spl. Devi : Vijaya , flowers
: malligai, roja. Neivedyam sakkarai pongal, sweets.
Sloka for the day : Om vijayaa deviyai vithmahe mahaa nithyaayai
dheemahi thanno devi prachodhayaath.
Oct 25 Thu. : Ekaadasi till 10.32 pm. Sadhayam till 9.57pm.
Om damodharaaya vithmahe
rukmani vallabaaya dheemahi thanno KRISHNA prachodhayaath.
சிறப்பு: விஜயதசமி, பூதத்தாழ்வார் திருநட்சத்திரம், குழந்தைகளுக்கு
எழுத்துப்பயிற்சி அளிக்க நல்ல நாள்
வழிபாடு: அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி
வழிபடுதல்
Oct 26 Fri. : Dwadasi till 10.35pm. Poorattadhi till 10.34
pm.
Om bagavathiyai cha vithmahe
maaheswariyai cha dheemahi thanno ANNAPOORANI prachodhayaath.
சிறப்பு: ஏகாதசி, பேயாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து
வழிபடுதல்
Oct 27. Sat : Thrayodasi (SANI PRADHOSHAM) till 11.08pm.
Uthirattadhi till 11.43pm.
Om veera dhehaaya vithmahe
vrushabeswaraaya dheemahi thanno NANDHI prachodhayaath.
சிறப்பு: பக்ரீத், சனிப்பிரதோஷம், வாஸ்து நாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6
மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல், மனை, மடம், ஆலயம் வாஸ்து
செய்ய நல்ல நேரம்: காலை 7.44 - 8.20 மணி
Oct 28 Sun : Chathurdasi till mid nit 12.11. Revathi till mid nit 01.20 am.
Om aadhithyaaya vithmahe
maarthaandaaya dheemahi thanno SOORYA prachodhayaath.
சிறப்பு: சூரிய வழிபாட்டு நாள், முகூர்த்த நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சூரிய பகவானுக்கு
சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
Oct 29 Mon. Pournami till
mid nit 1.41 am. Ashwini till mid nit
3.22 am.
Om Chandra soodaaya vithmahe
pinaaga hasthaaya dheemahi thanno SHIVA prachodhayaath.
சிறப்பு: சிவாலயங்களில் அன்னாபிஷேகம், பவுர்ணமி, திருமூலர்
குருபூஜை
வழிபாடு: சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
தரிசித்தல், திருவண்ணாமலையில் நள்ளிரவு 1.41 மணி வரை கிரிவலம்
வருதல்
"அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று சொல்வது மரபு. அதாவது, அன்னம் வேறு; ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்று தான் இதையே "சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் என்றும் குறிப்பிடுவர்.
அன்னம்
இட்ட கை சின்னம் கெட்டுப் போகாது.
ஐப்பசி மாதப்
பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான
லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.
.
அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு
அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
சுவாமியின்
மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம்.
ஐப்பசி பௌர்ணமியன்று சந்திரன்
தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண
சோபையுடன் விளங்குகின்றான்.
அறுவடையான புது
நெல்லைக் கொண்டு அமுது படைக்கும் அந்த
ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.
For lot of annabhishega photos , click :
http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_08.html
Oct 30 Tue. Pradhamai till
mid nit 3.35 am. Barani till next day
early mrng 5.45 am.
Om kaarthikeyaaya vithmahe sakthi hasthaaya
dheemahi thanno SKANDHA prachodhayaath.
சிறப்பு: நெடுமாற நாயனார் குருபூஜை
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு
சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் நின்றசீர் நெடுமாற நாயனார் அரசு புரிந்து வந்தார். இவர் சோழ மன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியார் என்னும் சிவக்கொழுந்தைப்
பட்டத்தரசியாகக் கொள்ளும் பெரும் பேறு
பெற்றார். இவர் சமணர்களது மாய வலையில் சிக்கிப் பின்னர் ஆளுடைப்
பிள்ளையாரின் திருவருளால் சைவ சமயம் சார்ந்து சைவ ஆகம நெறிப்படி ஒழுகினார். சங்கத்தமிழ் வளர்த்ததோடு,
சைவத்தையும் வளர்த்து,
வான்புகழ் பெற்றார். ஒரு சமயம்,
வடபுலத்துப் பகை
மன்னனை திருநெல்வேலியில் நடந்த கடும்போரிலே
தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். திருநெல்வேலி களத்திலே வெற்றி கண்ட
நெடுமாறனைக் கன்னித் தமிழ்த் தெய்வப் புலவர்கள்,
திருநெல்வேலி வென்ற நெடுமாறர் என்று சிறப்பித்தார்கள். இத்தகைய தமது
சிறந்த வெற்றிக்குக் காரணம் சிவனாரின் திருவருள் ஒன்றேதான்
என்பதை உணர்ந்த நெடுமாறன் ஆலயப் பணிகள் பல
புரிந்து ஆலவாய் அண்ணலின் அருளோடு அரசாண்டார். உலகில் வீரத்தோடு,
திருநீற்று
பெருமையை ஓங்கச் செய்த புகழோடு நெடுங்காலம் அரசாண்ட நின்றசீர் நெடுமாற நாயனார் சிவபாதமடைந்து இன்புற்றிருந்தார்.
குருபூஜை: நின்றிசீர் நெடுமாற நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில்
கொண்டாடப்படுகிறது.
Oct 31 Wed. : Thvidhiyai till next day ealy mrng
5.35am. Karthigai star full day.
Om aathreyaaya vithmahe
indhu puthraaya dheemahi thanno BUDHA prachodhayaath.
சிறப்பு: கார்த்திகை விரதம், இடங்கழி நாயனார் குருபூஜை
To know about the history of this naayanar , click
:
வழிபாடு: முருகன் கோயில்களில் அபிஷேகம் செய்து
வழிபடுதல்