தினசரி ஸ்லோகங்கள் 01.09.13 முதல் 08.09.13 வரை
ஆவணி16 (செப்டம்பர்1)
மதியம் 12.31 வரை ஏகாதசி . பின்னர் த்வாதசி . புணர்பூசம் நள்ளிரவு 2.01 வரை
சிறப்பு: ஆவணி மூன்றாம் ஞாயிறு,ஏகாதசி விரதம், முகூர்த்தநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தல்,நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தல்,நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்
இன்றைய சுலோகம் :
ஓம் பிரஜாவ்ருதியை ச வித்மஹே
அதிதி புத்ராய தீமஹி
தன்னோ புணர்வசு பிரசோதயாத்.
ஆவணி17 (செப்டம்பர்2)
பிற்பகல் 2.23க்கு மேல் திரயோதசி . பூசம் மறுநாள் அதிகாலை 4.24 வரை
சிறப்பு: பிரதோஷம், செருத்துணைநாயனார் குருபூஜை,சொத்து வாங்க நல்லநாள், முகூர்த்தநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு அருகம்புல், வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.
இன்றைய சுலோகம் :
ஓம் பிரமம வர்ச்சாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய பிரசோதயாத்.
செருத்துணை நாயனார்
அறம் வழுவாத நெறியினைக் கொண்ட பழங்குடி பெருமக்கள் வாழும் சீரும், செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றது தஞ்சாவூர். இத்தலத்தில் வீரமிகும் வேளாண் மரபில் செருத்துணை நாயனார் என்னும் சிவத்தொண்டர் வந்தார். இவரது தூய வெண்ணீற்று உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை எல்லாம் எம்பெருமான் பாதகமலங்களின் மீது செலுத்தினார். ஆராக்காதலுடன் சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களைக் காப்பதில் பணிவோடு மிக்கத் துணிவையும் பெற்றிருந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அறிந்தோ அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார். ஆலயத்துள் நடைபெறும் இறைவழிபாடு எவ்வித இடையூறுமின்றி நடைபெற அரும் பாடுபட்டார். அடியார்களின் நலனுக்காகத் தம் <உடல்பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யவும் துணிந்த நெஞ்சுரம் படைத்தவர். இச்சிவனடியார் திருவாரூர்த்த தியாகேசப் பெருமானுக்கு இடையறாது எத்தனையோ வழிகளில் அருந்தொண்டாற்றி வந்தார். ஒருமுறை ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்து செருத்துணை நாயனார், பகவானுக்காக பூ தொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆலய வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவப் பேரரசன் காடவர்கோன் கழற்சிங்கனுடைய பட்டத்து ராணி மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அம்மண்டபத்தருகே அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த செருத்துணை நாயனார் அரசியாரின் செயலைக் கவனித்துச் சினங்கொண்டார். அரசியாயிற்றே என்றுகூடப் பார்க்காமல் அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காக பட்டத்துப் பெருந்தேவியாரின் கார்குழலைப் பற்றி இழுத்துக் கீழே தள்ளினார். வாளால் மூக்கை சீவிவிட்டார். அங்கு வந்த அரசரிடம் அஞ்சாமல் நடந்தவற்றைப் பற்றி உரைத்து தமது செயலின் திறத்தினை விளக்கினார். ஆண்டவன் மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலைவணங்கினான். ஆண்டவர் அடியார்களின் பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும், அடியார்க்கும் அருள் செய்தார். இவ்வாறு வால்மீகிநாதரின் தூய திருவடிகளுக்கு இடையறாது திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த செருத்துணை நாயனார் எம்பெருமானின் திருவடி நீழலில் ஒன்றினார்.
குருபூஜை: செருத்துணையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
மன்னவனாம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்.
ஆவணி18 (செப்டம்பர்3)
பிற்பகல் 3.59 வரை திரயோதசி . பின்னர் சதுர்த்தசி. ஆயில்யம்.
சிறப்பு: மாதசிவராத்திரி, அதிபத்தநாயனார், புகழ்த்துணைநாயனார் குருபூஜை
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.
இன்றைய சுலோகம் :
ஓம் சர்ப்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆஸ்லேஷ பிரசோதயாத்.
ஓம் சர்ப்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆஸ்லேஷ பிரசோதயாத்.
புகழ்த்துணைநாயனார்
செருவல்லிப்புத்தூர் என்னும் தலத்திலே தோன்றியவர் தான் புகழ்த்துணையார் என்னும் சிவத்தொண்டர். இவர் செருவல்லிப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதி சிவாகம முறைப்படி வழிபட்டு வந்தார். ஒருமுறை நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட மக்கள் கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் எங்கே? என்று தேடித் தேடி அலைந்தனர். ஆனால், ஈசனடியில் நேசம் வைத்த புகழ்த்துணையார் மட்டும், பஞ்சத்தைப் பெரிதாக எண்ணாமல், எம்பெருமானை எப்பொழுதும் போல் பூசித்து வரலானார். ஒருநாள் இவ்வடியார் சிவலிங்கத்துக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகையில் உடல் தள்ளாமையினால் குடத்தைத் தவறவிட்டார். சிவலிங்கத்தின் மீது விழுந்தார். சிவலிங்கத்தின் மீது நாயனார் தலை மோதியதால் வலி தாங்காமல் மயக்கமுற்றார். எம்பெருமான் இவரது மயக்க நிலையை உறக்க நிலையாக்கினார். எம்பெருமான் நாயனாரது கனவிலே எழுந்தருளினார். பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் துறந்து சென்றபோதும் நீ மட்டும் எம்மையே அணைந்து எமக்காக வழிபட்டு பணியாற்றியமைக்காக யாம் உமக்கு பஞ்சம் நீங்கும்வரை எமது பீடத்தில் உமக்காகப் படிக்காசு ஒன்றை வைத்து அருள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார் அரனார். துயிலெழுந்த தொண்டர் பீடத்திலிருந்த பொற்காசு கண்டு சிந்தை மகிழ்ந்து, சங்கரரின் சேவடியைப் பணிந்தார். முன்போல் இறைவனுக்குத் திருத்தொண்டு புரியலானார். பஞ்சம் வந்த காலத்தும் பக்தியில் நின்றும் சற்றும் வழுவாமல் வாழ்ந்த நாயனார், பல்லாண்டு காலம் பூவுலகில் வாழ்ந்து பகவானின் திருவடியைச் சேர்ந்தார்.
பொன்னடிக்கே மனம் வைத்த புகழ் துணைக்கும் அடியேன்.
அதிபத்தநாயனார்
கடல் நாகை அதிபத்தர்க்கு அடியேன்.
ஆவணி19 (செப்டம்பர்4)
மாலை 5.11 வரை சதுர்த்தசி . காலை 6.19 க்கு பிறகு மகம் .
சிறப்பு: இளையன்குடிமாறர் குருபூஜை
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
இன்றைய சுலோகம் :வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மக பிரசோதயாத்.
இளையன்குடிமாறர்
இளையான்குடி என்னும் நந்நகரம் இயற்கை வளத்தோடு, இறைவனின் அருள் வளமும் பரிபூரணமாக நிறையப் பெற்றிருந்தது. இந்நகரில் வேளாளர் மரபிலே உதித்தவர்தான் மாறனார். இளையான்குடியில் பிறந்த காரணத்தால் இளையாங்குடி மாறனார் என்று அழைக்கப் பெற்றார். இவர், பெருத்த வயல் வளம் உடையவராய் விளங்கினார். எந்நேரமும் எம்பெருமானின் நமச்சிவாய மந்திரத்தையே நினைத்துக் கொண்டிருப்பார் இளையான்குடி மாறனார். மாறனாரும், அவர் மனைவியாரும் வள்ளுவர், கூறும் விருந்தோம்பல் அறத்தை நன்கு உணர்ந்து, வாழ்ந்து வந்தனர். அடியார் தம் வீடு நோக்கி வரும் அன்பர்களை இன்முகங்காட்டி இன்சொல் பேசி வரவேற்பர். அடியார்களைக் கோலமிட்ட பலகையில் அமரச் செய்து, பாதபூஜை செய்து வணங்குவர். அடியார்களுக்கு அறுசுவை அமுதூட்டி உளம் மகிழ்வதையே தங்களது வாழ்க்கை பணியாகக் கொண்டிருந்தனர். இவர்கள் இல்லத்தில் இலக்குமி தேவி நிரந்தரமாய்க் குடியிருந்தாள். மாறனாரின் உயர்ந்த தன்மையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவனார். மாறனார், வளம் கொழிக்கும் காலத்து மட்டுமின்றி வறுமை வாட்டும் காலத்தும் அடியாரைப் போற்றி பேணும் உணர் நோக்குடையார் என்பதை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி, ஒரு சமயம் அவ்வள்ளலார்க்கு வறுமையை உண்டாக்கினார் எம்பெருமான் !
ஆவணி20 (செப்டம்பர்5)
அமாவாசை 5.57 வரை. காலை 7.54க்குப் பிறகு பூரம்
சிறப்பு: அமாவாசை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல். தக்ஷினாமூர்த்தி , ராகவேந்திரர் மற்றும் ஷீரடி சாயி பாபா போன்ற குருமார்கள் வழிபாடு .
இன்றைய சுலோகம் :
ஓம் அரியம்னாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வ பால்குனி பிரசோதயாத்.
ஆவணி21 (செப்டம்பர்6)
பிரதமை மாலை 6.12 வரை. காலை 9.01 வரைபூரம். பிறகு உத்திரம் .
சிறப்பு: மறைஞானசம்பந்தர் குருபூஜை
வழிபாடு: அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
இன்றைய சுலோகம் :
ஓம் மஹா பகாயை வித்மஹே
மஹா ஸ்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்திர பால்குனி பிரசோதயாத்.
மறைஞானசம்பந்தர்
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரை சமயக்குரவர் நால்வர் என அழைக்கப்படுவார்கள். அதேபோல் சந்தானக்குரவர்கள் என அழைக்கப்படுபவர்கள் மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர்.
மெய்கண்ட (உண்மை) சாத்திரங்கள் என்று போற்றப்படும், சைவசித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இதை எழுதியவர் மெய்கண்டார். இவரைச் சார்ந்தே சந்தான குரவர் என்னும் சைவ மரபு தோன்றியது. மெய்கண்டாரின் மாணவர் அருணந்தி சிவாச்சாரியார். அவரது மாணவர் மறைஞானசம்பந்தர். வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் (கடலூர் மாவட்டம்) ஆவணி உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த இவர், அருணந்தி சிவாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றார். சிவதர்மம் என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். இவருடைய வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு. ஒருமுறை சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றிய உமாபதி சிவாச்சாரியார் என்பவர் பூஜைகளை முடித்துக் கொண்டு, மேளதாளத்துடன் வீட்டுக்கு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். (அக்காலத்தில், கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை பல்லக்கில் கொண்டு சென்று வீட்டில் விடுவதும், பகலாக இருந்தாலும் தீவட்டி பிடித்துச் செல்வதும் வழக்கம்) உச்சிவேளை... வெயில் நன்கு காய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பட்டப்பகல் நேரத்தில், பல்லக்கின் முன்னே ஒருவன் தீவட்டி பிடித்துச் சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார் மறைஞானசம்பந்தர். உமாபதியின் பல்லக்கையும், முன்னே தீவட்டியும் செல்வதைக் கண்ட அவர், பட்ட மரத்தில் பகல்குருடு போகுது பார் என்று அவருடைய காதில் படும்படி உரக்க சத்தமிட்டார். உமாபதி சிவாச்சாரியாரின் காதுகளில் இது கேட்டது. கற்பூரத்தில் பற்றிய நெருப்பு எப்படி கொழுந்து விட்டு எரியுமோ, அதுபோல அவரது மனதில், இந்த வார்த்தைகள் ஞானக்னியாக பற்றிக் கொண்டது.
சிவஜோதி அவருள் தனலாய் எழுந்தது. பல்லக்கிலிருந்து கீழே குதித்தார். மறைஞான சம்பந்தரிடம் ஓடினார், என்னை சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள், என்று அவரது திருவடிகளில் பணிந்தார். மறைஞானசம்பந்தர், அவரிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. திண்ணையில் இருந்து எழுந்தார். அப்படியே நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவமும் விடுவதாக இல்லை. அவரைப் பின்தொடர்ந்தார். மறைஞானசம்பந்தர் ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீட்டில் இருந்தவர்கள், காய்ச்சிய கூழை அவரது கைகளில் பிச்சையாக வார்த்தனர். சிவபிரசாதம் என்று சொல்லிக் கொண்டே மறைஞானசம்பந்தர் அதை அண்ணாந்து குடித்தார். அப்போது அவரது கையிடுக்கு வழியாக கூழ் ஒழுகத் தொடங்கியது. குருவாக ஏற்றுக் கொண்ட உமாபதி, சிந்திய கூழை குரு பிரசாதம் என்று சொல்லிக் குடித்தார். அதுமுதல் உமாபதிசிவாச்சாரியார், மறைஞானசம்பந்தரின் சீடரானார். உமாபதி சிவாச்சாரியாரோடு சந்தானக்குரவர் என்னும் மரபு முற்றுப்பெற்றது. சிந்தாந்த அட்டகம் என்னும் எட்டு நூல்களை எழுதினார். இதில் குருவின் மீது கொண்ட ஈடுபாட்டால் எழுதிய நூல் நெஞ்சுவிடு தூது என்பதாகும். சரி...உமாபதி சிவாச்சாரியாருக்கு ஞானத்தை ஏற்படுத்திய பட்டமரத்தில் பகல் குருடு போகுது பார் என்ற சொற்றொடரின் சூட்சுமம் தெரிய வேண்டாமா!பட்டமரத்தின் கட்டைகளால் செய்யப்பட்டது பல்லக்கு. அந்தப் பல்லக்கில் சென்றவர் <உமாபதி. பகலில் தீவட்டி ஏந்திச் சென்றதால், அவர் குருடாகிறார். அதாவது, பல்லக்கு, பரிவாரம் ஆகிய வசதிகளெல்லாம் தற்காலிகமானவை. இவை இறைவனை அடைவதற்குரிய சாதனங்கள் அல்ல. அதாவது, இறைவன் அருகில் இருந்து பூஜை செய்தால் மட்டும் ஆண்டவனை அறிய முடியாது. நிஜமான பக்தி இருந்தால், இறைவனை பாமரன் கூட அடைய முடியும் என்பதே இதன் சூட்சுமம்.
ஆவணி22 (செப்டம்பர் 7)
துவிதியை மாலை 5.56 வரை . காலை 9.37 வரை உத்திரம். பிறகு ஹஸ்தம்.
சிறப்பு: சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
இன்றைய சுலோகம் :
ஓம் பிரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா பிரசோதயாத்.
ஆவணி23 (செப்டம்பர்8)
திரிதியை மாலை 5.11 வரை. ஹஸ்தம் காலை 9.44 வரை. பிறகு சித்திரை.
சிறப்பு: ஆவணி நான்காம் ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தநாள், சுவாமி சிவானந்தர் பிறந்தநாள்.
இன்றைய சுலோகம் :
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
பிரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா பிரசோதயாத்.
பூஜ்யஸ்ரீ சுவாமி சிவானந்தர் (1887- 1963) ‘இமயஜோதி’ என்று புகழப்படுபவர்; ரிஷிகேஷத்தில் 1936-ல் ‘தெய்வீக வாழ்க்கை சங்கம்’ என்ற ஆன்மிக அமைப்பை நிறுவியவர். தமிழகத்தின் பத்தமடையில் பிறந்தவர்; மகத்தான ஆன்மிக சாதனைகளை நிகழ்த்தியவர். அவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர். அந்த காலத்திலேயே மருத்துவ படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராக பணிபுரிந்தார். அவர் கைராசியான டாக்டராக திகழ்ந்தார். நிறைய ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில வருடங்களில் ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவ பணியை துறந்து இந்தியா திரும்பி, கடுமையான தவத்திற்கு பிறகு ரிஷிகேஷத்தில் (Rishikesh) Divine Life Society (DLS) என்ற ஆஷ்ரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்கு, தன்னுடைய கருத்துக்களை புத்தகங்கள் வாயிலாகவும், சொற்பொழிவு மற்றும் சுற்றுபயணங்கள் மூலமாகவும் பரப்பினார்.
அந்த இமாலய சோதி, 1964-ம் வருடம் இறைவனோடு இரண்டறக் கலந்தது. இன்றும்
DLS, சுவாமிஜி விட்டு சென்ற ஆன்மீக பணிகளை, அவர் காட்டிய வழியில் தொடர்ந்து
செய்து வருகிறது. For More details, please visit http://www.sivanandaonline.org/
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
visit my other blogs:
www.shivsaitours.blogspot.in
www.chennaisidhargal.blogspot.in
www.chennaishivatemples.blogspot.in
www.songsbyshanks.blogspot.in
www.pondysidhargal.blogspot.in
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪