ஏகாதசி விரத மகிமை
தாய்க்குச் சமமான தெய்வமில்லை;
காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை;
ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது
ஆன்றோரின் அருள்வாக்கு.
இந்து தர்ம சாஸ்திரங்கள், புராணங்களில்
ஏகாதசி விரத மகிமை பற்றி
சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் ஒன்றும்
தேய்பிறையில் ஒன்றும் என இரண்டு ஏகாதசிகள் வரும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து
11- ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது.
வளர்பிறை ஏகாதசி, சுக்லபட்ச ஏகாதசி,
தேய்பிறை ஏகாதசி,கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப்படுகின்றன
வடமொழியில் ஏகாதசி என்பதை தமிழாக்கம் செய்தால்
அதன் அர்த்தம் பதினொன்று ஆகும்.
கர்ம இந்திரியங்கள் - 5
ஞானேந்திரியங்கள் - 5
இதனுடன் மனம் ஒன்று கூடினால் - 11
இந்த பதினொன்றையும் பெருமாளுடன்
ஐக்கியப்படுத்தி இருப்பதே விரதம்.
ஆக இந்த 11இந்திரியங்களால்
தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும்
தீவினைகள் எல்லாம் இந்த 11வது திதி நாளில்
விரதம் இருந்தால், அழிந்து விடுவது உறுதி
ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்துக்கும்
ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி "பாபமோஹினி' என்றும்;
தேய்பிறை ஏகாதசி "காமதா' என்றும் அழைக்கப்படுகிறது.
தேய்பிறை ஏகாதசி "காமதா' என்றும் அழைக்கப்படுகிறது.
சித்திரை விரதம் விரும்பிய பேறு உண்டாகும்.
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி "வருதினி' என்றும்;
தேய்பிறை ஏகாதசி "மோகினி' என்றும் குறிப்பிடப்படுகிறது.
தேய்பிறை ஏகாதசி "மோகினி' என்றும் குறிப்பிடப்படுகிறது.
வைகாசி விரதம் கயிலாய யாத்திரை மேற்கொண்டு
பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். ,
ஆனி மாத வளர்பிறை ஏகாதசி "அபரா' என்றும் ,
தேய்பிறை ஏகாதசி "நிர்ஜலா' என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஆனி விரதம் சொர்க்கம் செல்லும் பாக்கியம்கிடைக்கும்.
ஆடி மாதவளர்பிறை ஏகாதசி "யோகினி' என்றும்
தேய்பிறை ஏகாதசி "சயன' என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஆடி விரதம் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு
அன்னதானம் தந்த புண்ணியம் கிடைக்கும்.
ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி"காமிகை'என்றும்
தேய்பிறை ஏகாதசி "புத்திரதா' என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஆவணி விரதம் மக்கள் செல்வம் உண்டாகும்,
நோய் நொடிகள் நீங்கும்,
புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி "அஜா' என்றும்
தேய்பிறைஏகாதசி "பரிவர்த்தினி' என்றும் குறிப்பிடப்படுகிறது
புரட்டாசி விரதம் நிம்மதி கிட்டும்,
ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "இந்திரா' என்றும்
தேய்பிறை ஏகாதசி "பராங்குசா' என்றும் குறிப்பிடப்படுகிறது
ஐப்பசி விரதம் சகல விஷயங்கள் கூடிவரும்,
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி "ரமா'என்றும்
தேய்பிறை ஏகாதசி "பிரமோதினி' என்றும் குறிப்பிடப்படுகிறது
கார்த்திகை விரதம் மகிழ்ச்சியான வாழ்வு தரும்.
மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி' என
சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும்.
அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும்.
இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலிலிருந்து விழித்தெழும் மாதம்.
ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது.
மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி'எனப்படுகிறது.
தை மாத வளர்பிறை ஏகாதசி "சுபலா' என்றும்
தேய்பிறை ஏகாதசி "புத்ரதா' என்றும் குறிப்பிடப்படுகிறது
தை விரதம் பித்ருசாபம் நீங்கும்.
மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜெயா' என்றும்
தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா' என்றும் குறிப்பிடப்படுகிறது
மாசி விரதம் பாவங்கள், தோஷங்கள் விலகும்,
பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி "விஜயா' என்றும்
தேய்பிறை ஏகாதசி "விமலகி' என்றும் குறிப்பிடப்படுகிறது.
இராமபிரான் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லும்முன்,
விஜயா ஏகாதசி விரதம் அனுஷ்டித்தார் என்பது புராண வரலாறு.
பங்குனி விரதம் தடைகள் நீங்கி வெற்றிகள் குவியும்.
ஏகாதசிகளில் சிறப்பு பெற்றதும், முக்தியை தரவல்லதுமாகிய
மார்கழி மாத ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என வழங்கப்படுகிறது.
பெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கும் நந்நாள்.
பாற்கடலில் இருந்து பெற்ற அமுதத்தை
மோகினி வடிவெடுத்த விஷ்ணு
தேவர்களுக்கு வழங்கிய நாள் வைகுண்ட ஏகாதசி.
கண்ணன், அர்ஜுனனுக்கு கீதையை
உபதேசித்த நாள் வைகுண்ட ஏகாதசி.
முரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக
தனது உடலில் இருந்து மோகினியை
மகாவிஷ்ணு தோற்றுவித்தார்.
முரனை மோகினி சம்ஹரித்த நாளே ஏகாதசி.
அன்றைய தினம் தன்னை வழிபடுபவர்களுக்கு
வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் அருளினார்.
பாற்கடலில் இருந்து பெற்ற அமுதத்தை
மோகினி வடிவெடுத்த விஷ்ணு
தேவர்களுக்கு வழங்கிய நாள் வைகுண்ட ஏகாதசி.
கண்ணன், அர்ஜுனனுக்கு கீதையை
உபதேசித்த நாள் வைகுண்ட ஏகாதசி.
முரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக
தனது உடலில் இருந்து மோகினியை
மகாவிஷ்ணு தோற்றுவித்தார்.
முரனை மோகினி சம்ஹரித்த நாளே ஏகாதசி.
அன்றைய தினம் தன்னை வழிபடுபவர்களுக்கு
வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் அருளினார்.
For more details of Ekadasi :
http://www.tirumaladeva.in/2012/04/june-30-2012-devshayani-ekadashi-sayana.html