Friday, 30 June 2017

DAILY HOLY SLOKAS - JULY 2017

 
Kindly forward to all your contacts....
Those who wish to get this daily slokas in Whatsapp
kindly send a whatsapp request on 30th of every month @ 99404 47 437.

Tuesday, 6 June 2017

சங்கரானந்தம் - 8 08.06.2017






சங்கரானந்தம் - 8 08.06.2017

பாதி கடல் தாண்டியாகிவிட்டது.

63 Face book Group களிலும் 17 whatsapp Group களிலும் கீழ்காணும் செய்தியை படித்து 7 பேர் 200/- ரூபாயும் , 3 பேர் 1000/- ரூபாயும் ஒருவர் 108/- ரூபாயும் ஒருவர் 25000 ரூபாயும் அனுப்பியுள்ளனர். அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை 08.06.2017 அன்று
காலை 7 மணிக்கு அயோத்யா மண்டபத்திலும் (மற்றும் 11.06.17 ஞாயிறு அன்று இரவு 7 மணிக்கும்) ,
மயிலை அனுஷ வழிபாட்டிலும்,
மடிப்பாக்கம் ஸ்ரீ மட camp-லும் ,
தேனம்பாக்கத்தில் (10.30-11.30) , காஞ்சி ஸ்ரீ மடத்தில் (12-1.30)
சங்கரானந்த புத்தகங்களை நேரில் பெற்று மகிழலாம்.

சங்கரானந்தம் - 7 மற்றும் 8வது தொகுப்பின் பாடல்களை கேட்து மகிழ, சொடுக்கவும் :
www.soundcloud.com/lakshmikanthan-shankar 
 
 
மஹா பெரியவாளின் அருட்கடாட்சத்தினால் 30.12.2012 முதல் இன்று வரை இச்சிறியேனுக்கும்  அருள் செய்யும் பொருட்டு என்னை எழுதுகோலாக பயன்படுத்தி 700க்கும் மேற்பட்ட பாடல்களை மஹா  ஸ்வாமிகளின் பக்தர்களுக்காக  எழுத அருள் புரிந்துள்ளார். (மற்ற தெய்வங்களுக்கு 1500 பாடல்களுக்கு மேல் மலர்ந்துள்ளது.) இப்பாடல்களை  சங்கரானந்தம்  என்னும் தலைப்பில் மஹாஸ்வாமிகளின் பேரருளால் இது நாள் வரை  மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மற்றும் ஆராதனையின் போது  90,000 பிரதிகளுக்கு மேல் பதித்து இலவசமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு வழங்கி மகிழும் நல்வாய்ப்பினையும் அளித்துள்ளார் .

தற்போது மஹாஸ்வாமிகளின்   124வது ஜெயந்தி நாளான வைகாசி அனுஷத்தில் (ஜூன் 8 ), மகா பெரியவாளை போற்றும்  27 பாடல்களை கொண்ட சங்கரானந்தம் - 8வது தொகுப்பினை புத்தக வடிவில் 15,000 பிரதிகள் பதித்து இலவசமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு  வழங்கி மகிழ மஹாஸ்வாமிகளின் பாதார விந்தங்களை பணிந்து ஆசி கோருகிறேன்.
  
மஹா பெரியவாளின் பக்தர்களாகிய தாங்களும் இப்பெரும் புண்ணிய பணியில் ஈடுபட விரும்பினால் குறைந்த பட்சம் தலா ரூ.108/- அனுப்பினால் கூட போதும்.     தங்களுக்கு இது வரை வெளிவந்துள்ள சங்கரானந்தம் புத்தகத்தில் (இருப்பில் உள்ள) 3 தொகுதிகளுடன் இந்த தொகுப்பையும் சேர்த்து தபாலில் சேர்ப்பிக்கிறேன். 11 மகா பெரியவாளின் பக்தர்களின் பூஜை அறையில் சங்கரானந்த பாடல்கள் புத்தகத்தை சேர்த்த புண்ணியம் உங்களுக்கு உரியதாகும்.  ரூ. 200க்கு மேல் குரு காணிக்கை அளிக்கும் அன்பர்களுக்கு 50 சங்கரானந்த பாடல்கள் கொண்ட ஒரு Vocal CDயும் Courier ல் அனுப்பி வைக்கப்படும்.  

ஊர் கூடி தேர் இழுத்தல் போல தமிழ் சொற்களால் அக்ஷர மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சங்கரானந்தத் தேரை அனைத்து இல்லங்களுக்கும் சென்றடைய தங்களால் இயன்ற பொருளுதவியை செய்து குருவருள் பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சங்கரானந்தம் - 7  மற்றும் 8வது தொகுப்பின் பாடல்களை கேட்து மகிழ, சொடுக்கவும் :
www.soundcloud.com/lakshmikanthan-shankar


 மேலும் சில அனைத்து தெய்வங்களை பற்றிய அடியேனின் பாடல்களை கேட்க , சொடுக்கவும் :
www.soundcloud.com/madambakkamshanks

உங்களுக்குத் தெரிந்த மஹா பெரியவாளின் பக்தர்களின் முகவரிகளை தெரிவித்தால் அவர்களுக்கும் சங்கரானந்தம் - 8 வது தொகுப்பினை தபாலில் அனுப்பி வைக்க கடமை பட்டுள்ளேன்.
மகாபெரியவாளின் 15,000 பக்தர்களுக்கு இப்புத்தகம் சென்றடைய தங்களின் குரு காணிக்கைகளை  கீழ் காணும் முகவரிக்கு  M.O. செய்யலாம். 
Smt. S. Thanuja Shankar,
104 Aravind Nagar , Madambakkam, Chennai - 600 126.
Those who wish to transfer through bank for this Guru Kainkaryam,  kindly
whatsapp or SMS to 99404 47 437.
I will send the bank account details.

Please see my songs at :  www.songsbyshanks.blogspot.in

For daily Holy slokas(posted on 1st of every month) visit : www.aanmeegaula.blogspot.in


இறைப்பணியில் என்றென்றும்  ,

தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்                  
மாடம்பாக்கம்.