Sunday, 18 August 2013

DAILY HOLY SLOKAS 19.08.2013 TO 26.08.2013


Om loka rakshakaaya vithmahe sesha kalpaaya dheemahi thanno HARI prahodhayaath.


Pournami. Aavani Avittam. Hayagreevar Jayanthi.
ஶ்ரீ ஹயக்ரீவர் திருமாலின் அவதாரம் ஆகத் தோன்றியவர். தசவதாரங்களுக்கு முற்பட்ட காலத்திலே இவர் மனித உடலுடனும் குதிரை முகத்துடனும் தோன்றியவர்.
பரிமுகன் என்றும் அஸ்வசிரவர் என்றும் குறிப்பிடப்படுவர். ஒருமுறை பிரம்ம தேவர் உறக்கத்தில் இருக்கும் வேளையில் மதுகைடபர் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங்களை திருடிச் சென்று அதள பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டனர். தூக்கம் கலைந்த நான்முகனும் வேதங்களைக்காணாது மகாவிஸ்ணுவிடம் முறையிட அவரும் அவற்றை மீட்டு வருவதற்காக ஹயக்ரீவராக உருவெடுத்துச் சென்றதாக

அதள பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத்தில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உண்டு பண்ணி அதன் வழியே வந்த அரக்கர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தார். பின்னர் வேதங்களை மீட்டு வந்து கல்வியறிவு ஞானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தார். பின்னர் வேதத்தை படைப்புத்தெய்வம் பிரம்மாவிற்கே ஆவணி மாதப் பெளர்ணமி அதாவது (சிரவணப்பெளர்ணமி) நாளில் சுடர்விட்டுப் பிரகாசிக்க கற்றுக்கொடுத்தார் என புராணங்களில் சொல்லப்படுகிறது. ஆக கல்வி கலை ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இந்த ஹயக்ரீவர் உள்ளார் எனவே இவரை போற்றி வழிபடுபவருக்கெல்லாம் கல்வி சிறப்புற அமையும்.

'ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே'

அதாவது தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன். என்று போற்றித் துதிக்கின்றனர்.
அவருடைய குதிரை முகம் சூரியனையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிக்க பேரொளியைப் பெற்றுள்ளதோடு நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, அபயம் என விளங்கும் அவர் லஸ்மி ஹயக்ரீவராக, வரத ஹஸ்த ஹயக்ரீவராக, அபயஹஸ்த ஹயக்ரீவராக, யோகஹயக்ரீவராக பல வித வடிவங்களிலும் விளங்குகிறார். கல்வியின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு தடையில்லாது பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்விகற்று சிறப்புடன் தேர்ச்சி அடைய ஹயக்ரீவர் துதி காயத்திரி முதலியவற்றை தியானித்தல் அவசியமாகிறது.



ஹயக்ரீவர் காயத்திரி

'ஓம் தத் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்'
காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்

                  விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.
விளக்கம் அடியில் இருக்கிறது.

ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்


என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது.

இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். என்று அழைக்கிறார்கள்.

இனி ஓதும் முறையைப் பார்ப்போமா? முதலில் உடல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு தூய இடமொன்றில் நின்றபடியோ அல்லது சப்பாணியிட்டோ அமர்ந்து ஓத வேண்டும்.

தொடங்கும் முன் ஓம்…….ஓம்………ஓம்…… என பிரணவ மந்திரத்தை 3 தரம் சொல்லித் தொடங்க வேண்டும்.
பின் மந்திரத்தை கீழ் சொன்னது போன்று கூற வேண்டும்.

மூச்சை உள்ளெடுத்துக் கொண்டு
ஓம் பூர் புவ: ஸுவ என்ற வரியை சொல்ல வேண்டும்.

பின் மூச்சை தம் கட்டிக் கொண்டு
தத் ஸவிதுர் வரேண்யம் என்ற வரியை சொல்ல வேண்டும்.

பின் மூச்சை வெளிவிட்டபடி
பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற வரியை சொல்ல வேண்டும்

இறுதியாக சுவாசத்தை நிறுத்தி
தியோ யோன: ப்ரசோதயாத் என்ற வரியை சொல்ல வேண்டும்.

இப்படி 108 தரம் சொல்ல வேண்டும். முடிக்கையிலும் பிரணவ மந்திரம் சொல்லித்தான் முடிக்கணும்.

இதன் விஞ்ஞான காரணம் பார்த்தால் முக்கியம் மூச்சு பயிற்சி தான் இங்கு நான் தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா சொன்னதை சொல்கிறேன். “நாம் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக சுவாசிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் அதிகமாக உயிர் வாழலாம். உதாரணமாக ஆமைகள் நிமிடத்திற்கு 4 தரம் சுவாசிப்பதால் தான் 500 ஆண்டுகள் வாழ்கிறது” என்கிறார். இதையும் விஞ்ஞானம் தான் சொல்லியிருக்கிறது.

Also Read:
http://yogicpsychology-research.blogspot.in/2013/01/blog-post_7.html



Om vaasthu purushaaya vithmahe boomiputhraaya dheemahi thanno VAASTHU prachodhayaath.

Om kalaamyai cha vithmahe budhithaayai cha dheemahi thanno SARADHA prachodhayaath.

SANKATA HARA CHATHURTHI
Om thath purushaaya vithmahe vakra thundaaya dheemahi thanno DHANTHI prachodhayaath.


மஹா சங்கடஹர சதுர்த்தி.  ஒவ்வொரு மாதமும் வரும் சுக்ல பட்ச(வளர்பிறை) சதுர்த்தி 'வர சதுர்த்தி' என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி சங்கட ஹர சதுர்த்தி என்றும் போற்றப்படுகிறது. சிராவண மாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை சதுர்த்தி  'மஹா சங்கட ஹர சதுர்த்தி' எனப் போற்றப்படுகிறது. இன்று ஒரு நாள் விநாயக மூர்த்தியை வேண்டி விரதமிருக்க, ஒரு வருடம்  சங்கட ஹர சதுர்த்தி விரதமிருந்த பலன் கிட்டும் என்று கூறப்படுகிறது.

சதுர்த்தியின் சிறப்பு:
ஒரு சமயம் விநாயகர் லோக சஞ்சாரம் செய்யும் வேளையில், தன் அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, "நீ தேய்ந்து மறையக் கடவது" என்று சபித்தார். பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, "பாலசந்திரன்' என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தியாகும். ஆகவே, சதுர்த்தி திதி விநயாகருக்கு உகந்ததாயிற்று.
'சங்கட ஹர' என்றால் சங்கடத்தை நீக்குதல். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து விரதம் துவங்கி ஒவ்வொரு மாதமும் விரதமிருந்து பன்னிரண்டு சதுர்த்திகள் நிறைவுறும் தினத்தன்று, கணபதி ஹோமம் செய்து விரதத்தை நிறைவு செய்ய, எப்பேர்ப்பட்ட துன்பமும் விலகும் என்பது நம்பிக்கை.
பொதுவாக, நாலாம் பிறை எனப்படும் சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்க்கலாகாது. அவ்வாறு பார்க்க நேர்ந்தால், கீழ்வரும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:"
இதன் பொருள்:
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,  நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அதன் பலனாக, சத்ராஜித் எனும் யதுகுலத்தைச் சேர்ந்த குறுநில மன்னனிடம் இருந்த 'சியமந்தக மணி' என்னும் தினந்தோறும் எட்டுப் பாரம் பொன் சுரக்கும் வல்லமை பெற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அபகரித்துக் கொண்டதாக அவருக்குப் பெரும் பழி ஏற்பட்டது. உண்மையில் அந்த ரத்தினத்தை, சத்ராஜித்,  பிரசேனன் என்னும் பெயருடைய தன் தம்பியிடம் கொடுத்து வைத்திருந்தான். ஒரு நாள் பிரசேனன், காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் போது, ஒரு சிங்கம் அவனை கொன்று விட்டு அவனிடம் இருந்த மணியைக் கவர்ந்து கொண்டது. அந்த சிங்கத்தைக் கரடி அரசனான ஜாம்பவான், போரிட்டு வென்று சியமந்தக மணியைத் தனதாக்கிக் கொண்டார்.
இந்த ஜாம்பவான், ஸ்ரீ ராம அவதாரத்தின் போது, சீதாபிராட்டியைக் கண்டடைய உதவி செய்தவர். ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்கு அவரது பலம் பற்றி நினைவூட்டியவர் இவரே. இவருக்கு, ஸ்ரீ ராமபிரானை ஆலிங்கனம் செய்ய வேண்டுமென்று ஆசை. ஆனால் தன் உடல் முழுதும் அடர்ந்திருக்கும் ரோமம் அவரைக் புண்ணாக்கக் கூடுமென்று அஞ்சி தன் ஆவலை வெளியிடவில்லை.
தன் தம்பியை, சியமந்தக மணிக்காக ஸ்ரீ கிருஷ்ணரே கொன்றிருக்கக் கூடுமென்ற அபவாதத்தை சத்ராஜித் பரப்பினார். ஸ்ரீ நாரத மஹரிஷி, ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து, சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு இது என்பதை விளக்கி, விநாயகரை வழிபட, இந்த அபவாதம் நீங்கும் என்று எடுத்துரைத்தார். அதன் படி ஸ்ரீ கிருஷ்ணரும் விநாயகரை வழிபட்டார்.
 பின் அந்த அபவாதத்தை  நீக்குவதற்காக, இந்த சியமந்தக மணியைத் தேடி, ஸ்ரீ கிருஷ்ணர் காட்டிற்கு வந்தார். பிரசேனன் ,சிங்கம் ஆகியோர் இறந்து கிடப்பதை பார்த்துப் பின், கரடியின் காலடித் தடத்தை பின்பற்றி, கானகத்துள் சென்ற போது, ஒரு குகைக்குள்  மட்டும் பெரும் ஒளி தென்பட, உள்ளே சென்றார். அது, ஜாம்பவானின் குகை. அவர் மகள் ஜாம்பவதி, தன் தம்பியின் தொட்டிலின் மேல் சியமந்தக மணியைக் கட்டித் தொங்கவிட்டு, தொட்டிலை ஆட்டியபடி மேற்கூறிய ஸ்லோகத்தைப் பாடிக் கொண்டிருந்தாள்.
"சிங்கம் பிரசேனனைக் கொன்று இந்த மணியை அடைந்தது, அந்தச் சிங்கத்தை உன் தந்தை ஜாம்பவான் கொன்று இந்த மணியை உன்னிடம் அளித்தார்' என்பது அவள் பாடிய இந்த ஸ்லோகத்தின் பொருள்.
இதற்குள் ஜாம்பவான், ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து விட்டதால் அவருடன் போருக்குச் சென்றார். இருபத்தேழு நாட்கள் போர் நடந்தது. மல்யுத்தத்தில் வல்ல ஜாம்பவான் ஒவ்வொரு முறையும் ஸ்ரீ கிருஷ்ணரை யுத்தத்துக்காகத் தழுவிய போது இனம் புரியாத மனமகிழ்வை அடைந்தார். அவரை அறியாமல், அவர் ராம நாமத்தை உச்சரிக்க, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் உருவில் காட்சி தந்தார். தன் பக்தனின் ஆவலை இவ்வாறு இருபத்தேழு முறை ஆலிங்கனம் செய்து பூர்த்தி செய்தார் பகவான். பின், ஜாம்பவான் ஜாம்பவதியை,  ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம் செய்து கொடுத்து, சியமந்தக மணியையும் அளித்தார்.

இந்த மணியை சத்ராஜித்திடம் சேர்ப்பித்துத் தன் அபவாதம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ  கிருஷ்ண பரமாத்மா. சத்ராஜித் தன் மகளான சத்யபாமாவை தான் செய்த தவறுக்குப் பரிகாரமாக, ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம் செய்து கொடுத்தான்.
இந்தப் புராணத்தைப் படிப்பவர்கள்  யாவரும் அவர்களுக்கு நேர்ந்த வீண் பழி நீங்கப் பெறுவர்.

சங்கட ஹர சதுர்த்தி பற்றிய மற்றொரு புராணக் கதை:
முன்னொரு சமயத்தில், தண்டகா வனத்தில் வசித்து வந்த, 'விப்ரதன்' என்னும் பெயருடைய வேடன் ஒருவன், கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாத தீய குணங்கள் கொண்டவனாக இருந்தான். நல்வழிப்படுத்த எண்ணிய "முத்கலர்" என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். முனிவர் கூறிய வழிமுறைகளின் படி, விநாயகரை இடைவிடாது உபாசித்ததன் பலனாக, அவனின் நெற்றி நடுவில்  இருந்து துதிக்கை  தோன்ற ஆரம்பித்து,  விநாயகரைப் போன்ற வடிவமே அடைந்தார். நாம் எதை எண்ணுகிறோமோ அதையே அடைகிறோம் அல்லவா?.
'புருகண்டி முனிவர்' என்றழைக்கப்பட்ட அவருக்கு விநாயகப் பெருமானின் தரிசன பாக்கியம் கிடைக்கிறது. அவர் சொற்படி, முனிவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து, அதன் பலனை விநாயகப் பெருமானுக்கே அர்ப்பணம் செய்கிறார். அதனால், பல காலமாக, நரகத்திலிருந்த தன் முன்னோர்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார். புருகண்டி முனிவர், தம் ஆசைகளை நிறைவேற்றிய விநாயகப் பெருமானுக்கு 'ஆஷாபூரன்' என்னும் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார்.

ஒவ்வொரு பூஜையின் முடிவிலும் அந்தப் பூஜைப் பலனை இறைவனுக்குச் சமர்ப்பிக்கும் வழக்கம் இதனாலேயே ஏற்பட்டது. இதனால் இரண்டு விதப் பலன் ஏற்படுகிறது.
முதலாவது, நமக்கு சித்த சுத்தி ஏற்படுகிறது. 'நான் பூஜை செய்கிறேன்' என்ற அகங்காரம் அகன்று, 'அவனருளால் அவன் தாள் பணிகிறோம்' என்ற எண்ணம் தோன்றுகிறது. நாம் செய்த நல்வினையின் பலனை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் போது, கர்ம வினையின் தளையிலிருந்து நம் விடுவிக்கப்படுகிறோம்.
நாம் செய்த புண்ணியச் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்தால் அவை பன்மடங்காக, நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. ஆகவே, புண்ணியச் செயல்களை மட்டுமே இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். இதையே, மஹாபாரதத்தில், ஸ்ரீ யுதிஷ்டிரரும் அறிவுறுத்துகிறார்.
புருகண்டி முனிவரின் மகிமை அறிந்து அவரைத் தரிசனம் செய்ய, தேவேந்திரன் வருகை புரிகிறார். அவர், தரிசித்து முடித்துக் கிளம்பும் போது, விதி வசத்தால்,அவர் விமானம் மண்ணில் புதையுண்டு போக, முனிவர், தமது சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனை அவருக்குக்  கொடுத்து, விமானத்தை மீட்க வழி செய்கிறார்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருளால் நன்மைகள்  கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் ஆகும்.

மற்றொரு புராணக் கதையைப் பார்க்கலாம்.
அங்காரக பகவான், விநாயகரைப் பூஜித்தே கிரக பதவி அடைந்தார். ஆதலால், செவ்வாய்க்கிழமையன்று வரும் சங்கட ஹர‌ சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்றே போற்றப்படுகிறது.
'கிருத வீர்யன்' எனும் மன்னனுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறில்லை. ஒரு நாள் அவன் கனவில் அவன் தந்தை தோன்றி, 'இந்த ஓலைச் சுவடியில் குறிப்பிட்டிருக்கும் விரதத்தைச் செய்தால் குழந்தைப்பேறு அடைவாய்' என்று சொல்லி மறைந்தார்.விழித்துப் பார்த்தால் அவன் கையில் ஒரு சுவடிக்கட்டு இருந்தது.
மறு நாள், வேத பண்டிதர்கள் அதைப் படித்து,'மன்னா, இந்த விரதம் விநாயகரை வழிபட்டுச் செய்ய வேண்டிய அங்காரக சதுர்த்தி எனும் விரதம். இதன் விவரங்களைப் பற்றி பிரம்மதேவர் அருளிய விஷயங்கள் இந்தச் சுவடியில் இருக்கின்றன' என்று கூறி விவரிக்க, மன்னனும் அங்காரக சதுர்த்தி அன்று விரதம் துவங்கி விரதம் இருந்தான்.
விரதப் பலனாக, அவனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கு கைகளோ, கால்களோ இல்லை. ஆனால் மனம் தளராமல் 'கார்த்த வீர்யன்' எனப் பெயரிட்டு, அக்குழந்தையை வளர்த்த கிருத வீர்யன், உரிய வயதில் அக்குழந்தைக்கு ஸ்ரீ கணேச மூல மந்திரத்தை  உபதேசம் செய்தான்.
இடைவிடாது அந்த மூல மந்திரத்தை, பன்னிரு ஆண்டுகள் கார்த்த வீர்யன் ஜபிக்க, அதன் பலனாக, விநாயக மூர்த்தி அவனுக்கு தரிசனம் தந்து, ஆயிரம் கை கால்களையும் அர்ஜூனனுக்கு நிகரான பலத்தையும் அருளினார். அதனால் அவனுக்கு 'கார்த்த வீர்யார்ஜூனன்' என்றே பெயர் ஏற்பட்டது. பின், ஸ்ரீ தத்தாத்ரேயரின் அருளால், அனுக்கிரக சக்தியையும் பெற்றான். இன்றும் ஏதேனும் பொருட்கள் காணாமல் போனால், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனரை வேண்டி, ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூன மந்திரம் ஜபிக்க, அவை திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


சூரசேனன் எனும் மன்னன், தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்ததோடு தன் நாட்டு மக்களையும் விரதம் அனுஷ்டிக்கச் செய்து எல்லா வளங்களையும் நலங்களையும் பெற்றான்.
விநாயகப் பெருமான, ஞானகாரகனான, கேது பகவானுக்கு அதிதேவதையாதலால், சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வணங்க, கேதுகிரகத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
அளவில்லாத‌ மகிமை வாய்ந்த சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை;
அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகப் பெருமான் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்தின் முன் நெய் விளக்கேற்றி, விரதம் துவங்கச் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். ஸ்ரீ கணேச மூல மந்திரத்தை 108 முறை ஜபித்தல் விசேஷம். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, மாலை சந்திரோதய சமயத்தில், மீண்டும் நீராடி, விநாயகரை மனதாரப் பூஜித்து, சந்திர பகவானையும் பூஜிக்க வேண்டும். அருகம்புல்லால் ஆனை முகனை அர்ச்சிப்பது நலம் பல தரும். நான்காம் பிறையை அறியாமல் பார்க்க நேர்ந்தால், சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பிக்க அந்த தோஷம் நீங்கும்.

இருபத்தோரு முறைகள் ஸ்ரீ கணேச‌ அதர்வசீர்ஷம் ஜபம் செய்வது மிகச் சிறந்தது. இயலாவிடில் தகுந்தவர்களைக் கொண்டு இந்த ஜபம் செய்விக்கலாம்.
'ஸ்ரீ கணேச‌ அதர்வசீர்ஷ உபநிஷத்' துக்கு இங்கு சொடுக்கவும்.
விநாயகருக்கு நிவேதனம் செய்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாகக் கொள்வது சிறப்பு. விநாயகருக்கு, 21 மோதகங்கள் நிவேதனம் செய்வது சிறந்தது. நாள் முழுவது உபவாசம் இருக்க இயலாவிடில், பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
கோவிலுக்குச் சென்று விநாயகரை தரிசித்தல் சிறப்பு. பார்க்கவ புராணமாகிய விநாயக புராணம் படிப்பது அளவில்லாத நன்மை தரும்.
சங்கடங்களை நீக்கி அளவில்லாத நன்மைகளைத் தரும் சங்கட ஹர சதுர்த்தி விரதமிருந்து

Om baaskaraaya vithmahe mahadhyudhikaraaya dheemahi thanno SOORYA prachodhayaath.


 
Today Sashti.
Om kaarthikeyaaya vithmahe sakthi hasthaaya dheemahi thanno SKANDHA prachodhayaath.

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God




Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Saturday, 10 August 2013

கருட பஞ்சமி விரதம் 11.08.2013

கருட பஞ்சமி விரதம் 11.08.2013

 ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர். போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான். தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள்தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God




Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Friday, 9 August 2013

DHOORVAA GANAPATHI VIRATHAM 10.08.2013

Sraavana maatham sukla paksha chathurthiyandru dhoorvaa ganapathi viratham.

Ganapathi padathirku pushpangalaal alankaaram seidhu arukampul kondu keezh kaanum mandhirangalai solli indru (KAALAIYILO MAALAIYILO) vazhipaduvadhu vishesham.


Om Ganapathaye namaha

Om umputhraaya namaha

Om aga naasanaaya namaha

Om Eka dhanthaaya namaha

Om ibavakthraaya namaha

Om mooshika vaayanaaya nama

Om vinaayakaaya nama

Om eesaputhraaya nama

Om sarva sidhi pradhaayakaaya namaha

Om kumaaragurave namaha


Praarthanai slokam :

GANESHWARA  GANAADHYAKSHA  GOWREEPUTHRA  GAJAANANA
VRATHAM SAMPOORNAATHAAM  YAADHU DHWATH PRASAADHAATH IBAANANA



DHOORVAA GANAPATHI POOJAI ARULAAL
INDRU MUDHAL UNGAL VAAZHVIL THADAIGAL NEENGI VETRIYE UNDAAGUM.....


KAALA AVAKAASAMUM  DHOORVAA (ARUGAMPUL) ADHIGAMAAGA KIDAIKUM PATHCHATHIL KEEZHKANDA MANDHIRANGALAI SOLLI POOJIPPATHUM SAALA CHIRANDHADHU....

ஏகவிம்சதி தூர்வாயுக்ம பூஜை
தூர்வா என்றால் அருகம்புல். யுக்மம் என்றால் இரட்டை, ஆகவே இரண்டிரண்டு அருகம்புல்லாக கொண்டு பூஜிக்க வேண்டும்.
ஓம் கணாதிபாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் பாசாங்குசதராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஆகுவாஹநாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் விநாயகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஈசபுத்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஏகதந்தாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் இபவக்த்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் மூஷிகவாஹநாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் குமாரகுரவே நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கபிலவர்ணாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ப்ரஹ்மசாரிணே நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் மோதகஹஸ்தாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுரச்ஷ்ரேஷ்ட்டாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கஜநாஸிகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கபித்தபலப்ரியாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கஜமுகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுப்ரஸந்நாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுராக்ரஜாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் உமாபுத்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸ்கந்தப்ரியாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God




Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Wednesday, 7 August 2013

மூன்றாம் பிறையை பார்க்கலாமா ? 08.08.2013




மூன்றாம் பிறையை  பார்க்கலாமா ?


மூன்றாம் பிறையை தாராளமாக பார்க்கலாம். இதையே சந்திரதரிசனம் என்பர். இதனால், செல்வவளம் பெருகும் என்பர். சிவன் மூன்றாம்பிறையைத் தன் தலையில் சூடிக் கொண்டிருப்பதை சுந்தரர், பித்தா பிறைசூடி என்றே சுந்தரர் தேவாரத்தில் போற்றுகிறார். நான்காம் பிறையைத்தான்(சதுர்த்தி திதியன்று) பார்க்கக்கூடாது. ஒருவேளை அன்று கண்ணில் சந்திரன் பட்டு விட்டாலும், விநாயகரை வணங்கி விட்டால் தோஷம் நீங்கிவிடும்.





ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷ த்விதீயையன்று அமாவாசைக்கு அடுத்த இரண்டாம் நாள்] இரவில் மூன்றாம் பிறை சந்திரனை, கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி தரிஸனம் செய்வது மிகச்சிறந்தது. 


 ஸ்வேதாம்பர ஸ்வேதவிபூ ஷணஸ்ச
ஸ்வேத த்யுதிர் தண்டதரோ த்விபாஹூ
சந்த்ரோ அம்ருதாத்மா வராத கிரீடி மயி பிரசாதம் விததாதுதேவ

தூய வெண்மையாலான ஆடையும் வெண்மை ஆபரணங்களும் அணிந்து கொண்டு , வெள்ளை வெளேர் என கிரீடத்துடன் ஒரு கையில் தண்டம் மற்றொரு கை வரத ஹஸ்தமுமாக பிரகாசிக்கும் அம்ருதமயமான சந்திர தேவன் எனக்கு அருள்தந்து அனுக்ரஹிக்கட்டும்.


த3தி4 ஸங்க2 துஷாராப4ம் க்ஷீரோதா3ர்ணவ ஸம்ப4வம்
நமாமி ஸஸிநம் ஸோமம் ஸம்போ4ர் மகுட பூ4ஷணம்

இவ்வாறு மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிஸிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.



இந்த மூனறாம் பிறைச்சந்திரனை நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டு தேடிக்கண்டுபிடித்து தரிஸிக்கும் படியாக இருக்கும்.  மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.
 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God



Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Sunday, 4 August 2013

DAILY HOLY SLOKAS


09.08.13 (Fri.) :  Aadi velli - Amman darisanam.  Incl. Nemili Bala and kanchi kamakshi etc. Rs.540/-

15.08.13 (Thu.) :  Anusham - Mahaperiyava Adhishtaanam darshan and Puraadhana shiva temples of kanchipuram. Rs.540/-

15.09.13 (Sun. ) :  Thirumazhisai , Thirumanam , thirunindravur , perumalpattu pandurangan, kaakkalur, jalanarayana perumal , thiruvalloor etc. Rs. 540/-

28.09.13 (Sat. ) :  Purattasi sani - Kanchi divya desa perumal temples darshan. Rs. 540/-

02.10.13 (Wed.) :  Pradhosham.  Puraadhana shiva temples darshan.  Kaattur, kaayarambedu , paandur, kottamedu etc. Rs. 540/-

18,19,20 Oct. 2013 :  Fri, Sat., Sun. :  Gangai konda cholapuram Annaabhishega darshan, navagraha temples and some spl. temples of kumbakonam. Rs.1,500/- (Excl. food.  Dormitory Accmdn. only )

30th Oct. to 6th Nov. 2013 :  Diwali Ganga Snaanam - Kasi yathra.  (G)olden temples of Kasi , Laddu ther of vishwanathar,  Golden annapurani etc. Rs.3,600/-(Excl. Train Fare). (Incl. Food , Dormitory accmdn. etc.)

For further details , Contact immediately :  99404 47 437  , 98847 18 324.  (b4 and after office hours pls.)



சிவதூதி

ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்


Sivadhoothi

Om siva dhoothiyai cha vithmahe
sivangaryai cha dheemahi
thanno NITHYA prachodhayaath.
அம்ருதேஸ்வரி தேவி
(
ஆயுள் ஆரோக்கியம் பெற)

ஓம் சௌ த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்


Amrutheswari devi

Om sow thripuradevi cha vithmahe
saktheeswaree cha dheemahi
thanno AMRUTHA prachodhayaath.


அன்னபூரணி தேவி
(
நித்தியான்ன பிராப்திக்காக)

ஓம் பக்வத்யை வித்மஹே
மஹேஸ்வர்யை தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்

Anna poorna devi

Om bagavathyai vithmahe
maheswaryai dheemahi
thanno ANNAPOORNA prachodhayaath.

கன்னிகா பரமேஸ்வரி

(
மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)

ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

KANNIKAA PARAMESWARI

Om baala roopini vithmahe
parameswari dheemahi
thanno KANYA prachodhayaath.



பூமா தேவி
(
வீடு, நிலம் வாங்க)

ஓம் தநுர்தராயை ச வித்மஹே
சர்வஸித்தைச தீமஹி
தன்னோ தரா ப்ரசோதயாத்

Booma devi

Om dhanur dharaayai cha vithmahe
sarva sidhiyai cha dheemahi
thanno THARA prachodhayaath.



காளிகா தேவி
(
கேட்ட வரம் கிடைக்க)

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

Om kaalikaayai cha vithmahe
smasaana vaasinyai dheemahi
thanno gora prachodhayaath.


சந்தோஷி மாதா
(
திருமண தடை நீங்க)

ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்

Om roopaa devi cha vithmahe
sakthi roopini dheemahi
thanno SANTHOSHI prachodhayaath.



 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God


- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Monday, 29 July 2013

DAILY HOLY SLOKAS





जानामि शब्दं जानामि चार्थं
जानामि पद्यं जानामि गद्यम्
चिदेका षडास्या हृदि द्योतते मे
मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ॥२॥
Na Jaanaami Shabdam Na Jaanaami Ca-Artham
Na Jaanaami Padyam Na Jaanaami Gadyam |
Cid-Ekaa Ssaddaasyaa Hrdi Dyota-Te Me
Mukhaan-Nihsarante Girash-Ca-Api Citram ||2||

Meaning:
2.1: (Salutations to Sri Subramanya) I know neither Words, nor their Meanings O Lord,
2.2: And I know neither Poetry, nor Prose, but ...
2.3: ... within the Core of my Heart, I see the Conscious Effulgence of Your Six Faces, ...
2.4: ... which is making these various Words pour forth through my Mouth.


मयूराधिरूढं महावाक्यगूढं
मनोहारिदेहं महच्चित्तगेहम्
महीदेवदेवं महावेदभावं
महादेवबालं भजे लोकपालम् ॥३॥
Mayuura-Adhiruuddham Mahaa-Vaakya-Guuddham
Manohaari-Deham Mahac-Citta-Geham |
Mahii-Deva-Devam Mahaa-Veda-Bhaavam
Mahaa-Deva-Baalam Bhaje Loka-Paalam ||3||

Meaning:
3.1: (Salutations to Sri Subramanya) Whose Form Mounted on a Peacock represents the deepest Secret of the Upanishadic Maha Vakyas,
3.2: Whose Heart-Stealing Beautiful Body Dwells within the Great Heart of Spiritual Consciousness,
3.3: Who is the Great God of the Devas and represents what the Great Vedas convey,
3.4: I Worship that Son of Mahadeva (another name of Shiva) Who is the Protector of the World.



मौनव्याख्या प्रकटित परब्रह्मतत्त्वं युवानं
वर्षिष्ठांते वसद् ऋषिगणौः आवृतं ब्रह्मनिष्ठैः
आचार्येन्द्रं करकलित चिन्मुद्रमानंदमूर्तिं
स्वात्मारामं मुदितवदनं दक्षिणामूर्तिमीडे
Mauna-Vyaakhyaa Prakattita Para-Brahma-Tattvam Yuvaanam
Varssisstthaam-Te Vasad Rssigannauh Aavrtam Brahma-Nisstthaih |
Aacaarye[a-I]ndram Kara-Kalita Cin-Mudram-Aananda-Muurtim
Sva-[A]atmaaraamam Mudita-Vadanam Dakssinnaamuurti-Miidde ||

Meaning:
1: (Salutations to Sri Dakshinamurthy) Whose Exposition through Profound Silence is Awakening the Knowledge of the Supreme Brahman in the Hearts of His Disciples; Who is Himself Youthful ...
2: ... but is Sitting Surrounded by Old and Great Sages who are Devoted to Brahman,
3: The Hands of the Supreme Spiritual Teacher is Forming the Cin-Mudra (gesture of the Knowledge of Brahman) and Whose Appearance is Still and Blissful,
4: Who is Rejoicing in His Own Self which is reflected on His Blissful Face; Salutations to Sri Dakshinamurthy.



 TODAY EKAADASI.

कायेन वाचा मनसेन्द्रियैर्वा
बुद्ध्यात्मना वा प्रकृतिस्वभावात्
करोमि यद्यत्सकलं परस्मै
नारायणयेति समर्पयामि
Kaayena Vaacaa Manase[a-I]ndriyairvaa
Buddhy[i]-Aatmanaa Vaa Prakrteh Svabhaavaat |
Karomi Yad-Yat-Sakalam Parasmai
Naaraayannayeti Samarpayaami ||

Meaning:
1: Whatever I do with the Body, Speech, Mind or the Sense Organs,
2: Either by discrimination of the Intellect, or by the deeper feelings of the Heart, or by the existing Tendencies of the Mind,
3: I Do them All (i.e. Whatever work is to be done) without Ownership,
4: And I Surrender them at the feet of Sri Narayana.





लोकाभिरामं रणरङ्गधीरं राजीवनेत्रं रघुवंशनाथम्
कारुण्यरुपं करुणाकरंतं श्रीरामचंद्रं शरणं प्रपद्ये
Lokaabhi-Raamam Ranna-Rangga-Dhiiram Raajiiva-Netram Raghu-Vamsha-Naatham |
Kaarunnya-Rupam Karunnaa-Karantam Shriiraamacamdram Sharannam Prapadye ||


Meaning:
1: (I take Refuge in Sri Rama) Who is Pleasing to the People, Who is Calm and Composed in the Battle Field, Whose Eyes are like Blue Lotuses, and Who is the Lord of the Raghu Dynasty,
2: Who is an Embodiment of Compassion and Shower His Compassion to All; I take Refuge in the Lotus Feet of Sri Ramachandra.






TODAY PRADHOSHAM.

नमामीशमीशान निर्वाणरूपं
विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम्
निजं निर्गुणं निर्विकल्पं निरीहं
चिदाकाशमाकाशवासं भजेऽहम् ॥१॥
Namaam-Iisham-Iishaana Nirvaanna-Ruupam
Vibhum Vyaapakam Brahma-Veda-Svaruupam |
Nijam Nirgunnam Nirvikalpam Niriiham
Cidaakaasham-Aakaasha-Vaasam Bhaje-[A]ham ||1||

Meaning:
1.1: (Salutations to Sri Rudra) I Salute the Lord Ishana (another name of Sri Shiva) whose Form represents the state of the highest Nirvana (extinction of all desires and passions leading to the highest bliss),
1.2: Who Manifests taking a Form though in essence He is Pervading everywhere; and His Form embodies the Highest Knowledge of Brahman present in the core of the Vedas.
1.3: Who remain absorbed in His Own Self which is Beyond the three Gunas (Sattva, Rajas and Tamas), which is Beyond any Vikalpas (Change and Manifoldness), and which is Free from any Movement (due to desires etc),
1.4: Who Abides in the Sky of the Chidakasha (Spiritual Sky); I Worship that Ishana.


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God


- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪