Thursday, 31 October 2013

ஆரோக்கியம் தரும் தன்வந்திரி ஜெயந்தி , தன திரயோதசி 01.11.2013


 ஆரோக்கியம் தரும் தன்வந்திரி ஜெயந்தி , தன திரயோதசி





ஆரோக்கியம் தரும் தன்வந்திரி ஜெயந்தி
 


            ல்லோரைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம். மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்கள் தசாவதாரங்களாகும். இவற்றைத் தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்து மக்களுக்கு நல்லுபதேசங் களைச் செய்துள்ளார். ஸ்ரீதன்வந் திரி அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாக வதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத் தில் குறிப்புகள் உள்ளன.

ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந் திரன் தனது செல்வங்களை இழந்தான். மீண்டும் அவற்றைப் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டனானார். தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனித மான பொருட்கள் வந்தன. பாற்கடலிலிருந்து கடைசி யில் திருமாலே தன்வந்திரி யாக அம்ருத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். தேவேந்திரன் சாவா மருந் தான அமிர்தத்தையும் தான் இழந்த பிற பொருட் களையும் பெற்று தேவலோகம் சென்றான்.

திருமால் தன்வந்திரி யாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி நாளா கும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக "தன்திரேயாஸ்' என்று வட மாநில மக்கள் அனுஷ் டிக்கின்றனர். திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது.

இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகி றது.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் அமிர்த கலசத்தை ஏந்திய வாறும் காட்டப்படுவது வழக்கம். அல்லது முன் இடக்கையில் அமிர்த கலசமும், வலக்கை யில் அட்டைப் பூச்சியை ஏந்தியும் தன்வந்திரி காட்சி அளிப்பதும் உண்டு. அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது.

முக்கியமான வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கென்று தனிச் சந்நிதி இருப்பதைக் காணலாம். திருவரங்கம் ஆலய தன்வந்திரி சந்நிதி பிரசித்தமானது.

வேலூர் அருகேயுள்ள வாலாஜாபேட்டை யில் தன்வந்திரிக்கென்று தனி ஆலயமே அமைந் துள்ளது. அனைத்து நோய்களுக்கும் நிவாரண மளிக்கும் ஹோமங்களும் இங்கு சிறப்பாகச் செய்யப்படுகின்றன.


கோவையில் தன்வந்திரி ஆலயம் உள்ளது. ஆயுர்வேத மருத்துவ முறை மிகப் பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் கேரள மாநிலத்தில் தன்வந்திரி பகவானுக்கு பல ஆலயங்கள் உள்ளன. ஆலப்புழை மாவட்டம், சேர்த்தலா வட்டத் திலுள்ள- மருதோர் வட்டம் ஸ்ரீ தன்வந்திரி ஆலயம் மிகப் பெரியதும் பிரபலமானதும் ஆகும். சேர்த்தலாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளூடு மூஸ் என்ற ஆயுர்வேத வைத்தியர் இப்பகுதியில் பிரபலமான அஷ்ட வைத்தியர்களில் ஒருவரா கத் திகழ்ந்தவர். நோயாளிகள் அவரிடம் வந்து ஒரு வட்டம் (ஒரு முறை) மருந்து அருந்தினாலே நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அவரால் பூஜிக்கப்பட்ட தன்வந்திரி விக்கிரகமே இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. இங்கே வட்டவடிவமான கருவறையில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கி றார் தன்வந்திரி. அவருக்கு எதிரே கருடன் சந்நிதியும், திருச்சுற்றில் பகவதி, கணபதி, சாஸ்தா, சிவன் சந்நிதிகளும் உள்ளன. இங்குள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட கொடிமரம் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது

இந்த ஆலயத்தில் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பாக தினமும் மோர்க்குழம்பும் கீரைக் கூட்டும் நிவேதனம் செய்யப்படுகின்றன. இதை பக்தர்கள் சாப்பிட்டால் தீராத வயிற்று வலி தீருமென்று நம்புகின்றனர். வல்லாரை இலை, மாந்தளிர், புளியாரை இலை, நல்ல மிளகு, மல்லி, சீரகம், சுக்கு, ஓமம் போன்ற மருந்துச் சரக்குகளைச் சேர்த்து தயிரில் கலக்கி மோர்க்குழம்பும்; உப்பு, புளி, மிளகு மற்றும் கொத்தமல்லி விதை சேர்த்து தயாரித்த கீரைக் கறியும் பிரசாதமாகத் தயாரிக்கப்படு கின்றன. வைக்கம் மகாதேவருக்கும் இதுவே பிரசாதமாகும்.

ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்ச திரயோதசி, ஹஸ்த நட்சத்திரம் தன்வந்திரியின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. தன்வந்திரி ஜெயந்தியன்று கோதுமை மாவும் வெல்லமும் சேர்த்து தயாரித்த அவலேகம் (அல்வா) முக்கிய நைவேத்தியமாகப் படைக்கப்படுவது வழக்கம். இதிலிருந்தே வீடுகளில் தீபாவளிக்கு அல்வா தயாரிக்கும் பழக்கம் வந்திருக்கலாம். தீபாவளி லேகியம் தயாரிக்கும் வழக்கமும் தன்வந்திரி வழிபாட்டிலிருந்தே தொடங்கிய தென்பர்.

வட மாநிலங்களில் தீபாவளி ஐந்து நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் திரயோதசி நாளன்றே தீபாவளித் திருவிழா துவங்கிவிடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும், தன்திர யோதசி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் 13 வெள்ளி அல்லது தங்கக் காசுகள் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது வடமாநில மக்களின் நம்பிக்கை. இதே தன்திரேயாஸ் நாள் எமனுக் குரிய நாளாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, அன்றி ரவு யமதீயா என்ற யம தீபம் ஏற்றப்படுகிறது.

ஹிமா என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது. இதை அறிந்த அவன் மனைவி அந்த நாள் (தன்திரேயாஸ்) இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்குகளை ஏற்றி, நடுவே ஆபரணங்களையும் வைத்து, கணவனுக்கு புராணக் கதைகளைக் கூறி தூங்காது பார்த்துக் கொண்டிருந்தாளாம். பாம்பு உருவில் வந்த எமன் தீப ஒளியில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கண்கள் கூசவே, காலை வரை காத்திருந்துவிட்டுத் திரும்பினான் என்றும்; மன்னன் யமனிடமிருந்து காப்பாற்றப் பட்டான் என்றும் ஒரு கதை உள்ளது.

தன்வந்திரி அவதார நாளன்று தன்னைச் சுற்றிலும் யம தீபங்கள் ஏற்றி, தன்னை தன் மனைவி காப்பாற்றியதற்கு தன்வந்திரி கடவுளே காரணமென்று மன்னன் நம்பினான். மக்கள்  அனைவரும் தன்திரேயாஸ் நாளைக் கொண்டாட வேண்டுமென்றும்; அன்று இரவில் யம தீபம் ஏற்ற வேண்டுமென்று  மன்னன் உத்தரவிட்டானாம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தன்திரேயாஸ்  அன்று கொத்தமல்லி விதை மற்றும் வெல்லத்தை இடித்து வீடுகளில் பிரசாதமாக இறைவனுக்குப் படைப்பது வழக்கம். தன்திரேயாஸ் நாளை அடுத்தநாள் சோடி தீபாவளி,  மூன்றாவது நாள் (தீபாவளி) லட்சுமி பூஜை, அடுத்த நாள் கோவர்த்தன பூஜை, கடைசி நாளன்று சித்ரகுப்த பூஜை, கோதான் என்று ஐந்து நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

திருமால் மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் கீழுள்ள சுலோகத் தைக் கூறி வழிபடலாம். இதை 16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல பலன்கள் கிட்டும்.

"ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.'

பொருள்: ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்; அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி, அனைத்து பயங் களைப் போக்குபவரும்; எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்; மூன்று உலகங் களுக்குத் தலைவராக விளங்குபவரும்; அனைத் துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்கு பவருமான ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                   
 
 
 

திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...

தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டாடப்படும் இது, வடநாட்டில் ஐந்து நாள் பண்டிகை!!!. தனதிரயோதசி துவங்கிக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை, நரகசதுர்த்தசி, லக்ஷ்மி பூஜை, பலிபிரதிமா, பாய்தூஜ்(யமதுவிதியை) அன்று நிறைவுறுகிறது.

கோவத்ஸ் துவாதசி துவங்கி, பண்டிகைகள் கொண்டாடுவதும் உண்டு..இன்றைய தினம் கோவத்ஸ துவாதசி..

கோவத்ஸ துவாதசி விரதம் பற்றிய செய்திகளுக்கு, என் பதிவொன்றின் சுட்டி தருகிறேன். இது சென்ற வருடம் பதிவிட்டது..

கோவத்ஸ துவாதசி விரதம்
பொருட்செல்வம் உலக வாழ்வுக்கு இன்றியமையாதது. திருமகளின் கருணை நிரம்பிய பார்வை அனைத்து செல்வங்களையும் தர வல்லது. இப்பதிவில் தனதிரயோதசி குறித்த செய்திகளையும், திருமகளின் அருள் சேர்க்கும் எளிய முறை பூஜையையும் காணலாம்.
திருமகள் அருள், மன்னுயிர்கள் வாழ்வில் நலமெல்லாம் பெருக, பொங்கிப் பிரவகிக்கும் தினம் தன திரயோதசி . இன்றைய தினம் 'அக்ஷய திருதியை' தினத்திற்குச் சமமாகப் போற்றப்படுகின்றது.
ஸ்ரீலக்ஷ்மி பூஜை, தன்வந்திரி பூஜை, யமதீபம்,  கோத்ரிராத்ரி விரதம் என திரயோதசி தினத்தன்று கொண்டாடப்படும் பண்டிகைகள் அணிவகுக்கின்றன.
தனமாகிய செல்வத்துக்கு அதிபதியாம் லக்ஷ்மி தேவியைப் பூஜிக்க உகந்த தினம் தன திரயோதசி. தொழிற்கூடங்கள், வியாபார நிலையங்கள், இல்லங்கள் அனைத்தும் அன்றைய தினம் அலங்கரிக்கப்பட்டு விளங்குகின்றன. அல்பனா, ரங்கோலி முதலியவை வரையப்பட்டு, அன்னையின் நல்வரவைக் குறிக்கும் வகையில் ஸ்ரீபாதங்கள் எழுதப்பட்டு விளங்குகின்றன. மாலையில் தீபங்கள் ஏற்றப்பட்டு, அன்னையின் திருவருளை வேண்டி பூஜைகள் செய்யப்படுகின்றன...
தன திரயோதசி அன்று வாங்கும் பொருட்கள் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம். எனவே, தங்கம், வெள்ளி துவங்கி, எவர்சில்வர், இரும்பு வீட்டு உபயோகப்பொருட்கள் வரை வாங்குகிறார்கள். முதலீடுகள் செய்வதும் மிக நல்லது என்பதால், சிறிய அளவிலேனும், பங்குகள், வியாபாரங்கள், டெபாசிட்களில் முதலீடுகள் செய்கிறார்கள்..
தன திரயோதசி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்.
1.வெள்ளியினால் ஆன லக்ஷ்மி தேவி, பிள்ளையார் உருவங்கள் வாங்குவது வீடுகளிலும் தொழிலகங்களிலும் வெற்றி, விருத்தி முதலியவை அளிக்கும்.
2.வெள்ளி நாணயங்கள், பித்தளை பூஜைப் பொருட்கள், மரத்தாலான கடவுளர் உருவங்கள் வாங்குவது வளம் பெருக்கும்.  இவற்றை அன்பளிப்பாகப் பிறருக்குத் தருவது விசேஷம்.
3. எவர்சில்வர், இரும்பு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது, சனீஸ்வரபகவானின் அதிதேவதையான எமதர்மராஜரை திருப்திப்படுத்தும். நீண்ட ஆயுளை நல்கும்.
4.  சமையலறையில் உபயோகிக்கும் பாத்திரங்கள் . தன்வந்திரி பகவான், தன் கையில் அமுதம் நிரம்பிய கலசப் பாத்திரத்துடன் தோன்றியதால், பாத்திரங்கள் வாங்குவதை அதிர்ஷ்டமாக நினைக்கிறார்கள்.
5.தானிய விதைகள். இவற்றை உழவு நிலங்களில் தூவுகிறார்கள். இது தானிய விருத்தியையும் நீர் வளத்தையும் பெருக்கும்.
6. கண்/காது சொட்டு மருந்துகள், பிற மருந்துகள். இவற்றை வாங்கி, கட்டாயம் எளியோருக்கு தானம் செய்ய வேண்டும்.  இது நோயற்ற வாழ்வை நல்கும்.
7. புது கணக்குப் புத்தகங்கள் வாங்குகிறார்கள். அதில் தீபாவளி தினத்தன்று லக்ஷ்மி குபேர பூஜை செய்து,புதுக்கணக்கு எழுதத் துவங்குகிறார்கள்.
கூர்மையான முனையுடைய கத்தி, கத்தரிக்கோல் இன்ன பிற பொருட்கள் வாங்குவதைக் கட்டாயம் தவிர்க்கிறார்கள்.
தன திரயோதசி தினத்தன்று பாற்கடலில் இருந்து அபூர்வப் பொருட்களுடன் திருமகள் வெளிவந்ததாகக் கருதி, லக்ஷ்மீ தேவியைப் பூஜிக்கிறார்கள். மேலும், அன்றைய தினம் பெண்குழந்தை பிறந்தால், லக்ஷ்மீ தேவியே பிறந்ததாகக் கருதி, அதிர்ஷ்டக் குழந்தை என்று போற்றுகிறார்கள். அந்தப் பெண், திருமணமாகி, கணவன் வீடு செல்லும் போது, ஒரு தட்டில் குங்குமத்தை நிரப்பி, அதில், அவளது பாதச்சுவடுகளைப் பதிக்கச் சொல்லி வாங்குகிறார்கள். இதனால், இல்லத்தில் என்றென்றும் லக்ஷ்மீ தேவி நீங்காது நிலைத்திருப்பாள் என்று நம்புகிறார்கள்..
தன திரயோதசி தினம் குறித்த கதைகள் பெரும்பாலும் அனைவரும் அறிந்தவையே.. அவற்றைச் சுருக்கமாகத் தருகிறேன்.
தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைந்த போது, தன்வந்திரி பகவான் அமுதம் நிரம்பிய கலசத்துடன் தோன்றிய தினம் தன திரயோதசி.. ஆகவே அன்றைய தினம் தன்வந்திரி பகவானுக்கும் பூஜைகள் செய்கிறார்கள்.
ஹிமா என்ற அரசனின் 16 வயது மகன், திருமணமான நான்காம் நாள் இரவு பாம்பு கடித்து இறப்பான் என்று அவன் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் சொல்ல, அவன் இளம் மனைவி, அந்த நாளில், வீடெங்கும் தீபமேற்றி, நடுவில் ஒரு குவியலாக, தன் ஆபரணங்களை வைத்து, தன் கணவனைத் தூங்க விடாது, பாடல்களைப் பாடியும், புராணக் கதைகளைச் சொல்லியும் பார்த்துக் கொண்டாள். பாம்பு உருவில் வந்த யமதர்மராஜா, தீபங்கள் மற்றும் ஆபரணங்களின் பிரகாசம் கண்களை கூசச் செய்யவே, விடியும் வரை காத்திருந்து பின் திரும்பி விட்டாராம். இவ்வாறு அந்தப் பெண், தன் கணவனைக் காத்தாளாம். ஆகவே, யம பயம் நீங்க, யமதீபம் ஏற்றப்படுகின்றது. 
இதே கதை சிறு மாற்றத்துடனும் சொல்லப்படுகின்றது.
ஹிமாவின் மகனின் உயிரைப் பறிப்பதற்காக, யமதூதன் வந்த போது, அவன் இளம் மனைவி அழுது, தன் கணவன் உயிரைக் காக்க ஒரு உபாயம் சொல்லுமாறு வேண்டியதாகவும், உடனே யமதூதன் அவள் மீது இரக்கம் கொண்டு, யமதர்மராஜரை அணுகிக் கேட்க, அதற்கு தர்மராஜர், கார்த்திகை கிருஷ்ண பக்ஷ திரயோதசியில், தெற்கு நோக்கி தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவோரை, அகால மரணத்திலிருந்து தாம் காப்பதாகக் கூறினார்.
யம‌தூதனும் இதை இளவரசியிடம் உரைத்தார். அவ்வாறே அவளும் தென் திசை நோக்கி தீபங்கள் ஏற்றி, தொழுது வணங்கி, தன் கணவனைக் காத்தாள்.
தன திரயோதசி குறித்த மற்றொரு கதை:
'தந்தெரஸ்' என்ற சொல்லுக்கு, செல்வத்தை மழை போல் வர்ஷிக்கும் தினம் எனவும் பொருள் சொல்லப்படுகிறது. திருமளை அன்றைய தினம் வழிபாடு செய்ய வேண்டியதன் காரணத்தைச் சொல்லும் ஒரு கர்ணபரம்பரைக் கதை..
இது மனதால் ஒன்றுபட்ட திவ்ய தம்பதிகள் நடத்தும் லீலைகளுள் ஒன்று..
திவ்ய தம்பதிகள் நடத்தும் லீலைகள் எல்லாம் மானிடர்களாகிய நமக்கு நல்வழி புகட்ட அல்லவா?!!.
ஸ்ரீமஹாவிஷ்ணு ஒரு முறை லோக சஞ்சாரம் செய்யப் புறப்பட்டார். அப்போது, ஸ்ரீலக்ஷ்மீ தேவி, தானும் உடன் வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாள்.  
அன்னையின் வேண்டுகோளைக் கேட்ட திருமால், இரண்டு  நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் தன்னுடன் வர இயலும் என்று கூறினார். ஒன்று, தேவி உலகாயத விருப்பங்களுக்கு ஆட்படக்கூடாது. இரண்டு, தென் திசை நோக்கி தன் பார்வையை செலுத்தக் கூடாது.
அன்னை இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, உடன் வர ஒப்புக் கொண்டாள்.
ஆனால் அன்னையால் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற இயலவில்லை. லோக சஞ்சாரம் செய்யும் வேளையில், தற்செயலாக, தன் பார்வையை தென் திசை நோக்கி செலுத்திய தேவி, அங்கு அழகு கொஞ்சும் மஞ்சள் வண்ண மலர்கள் மலர்ந்திருந்த தோட்டத்தைக் கண்டாள். மலர்களின் அழகில் மயங்கி, அவற்றைப் பறித்துச் சூடிக் கொண்டு, வயல்வெளிகளில் நடனமிடத் துவங்கினாள். அருகிருந்த கரும்புத் தோட்டத்தின் கருப்பஞ்சாறையும் அன்னை ருசிக்கத் துவங்கினாள்.
தன் நிபந்தனைகளை தேவி மீறிவிட்டதைக் கண்டு, ஸ்ரீமஹாவிஷ்ணு கோபம் கொண்டார். தேவியிடம்,' இந்த மலர்ச்செடிகளுக்கும் கரும்புகளுக்கும் உரிமையாளனான விவசாயியிடம், நீ பன்னிரண்டு ஆண்டுகள் சாதாரண கூலியாளாக இருந்து வேலை செய்ய வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின், என்னை வந்து அடைவாய்' என்று கூறிவிட்டு வைகுண்டம் ஏகினார்.
தேவி லக்ஷ்மி, தான், நிபந்தனைகளை மீறி, லோகாயத விருப்பங்களுக்கு ஆட்பட்டதை எண்ணி வருந்தினாள். இருப்பினும், தன் மணாளனின் கட்டளைப்படி, அந்த விவசாயியிடம் கூலியாளாகப் பணியாற்றலானாள்.
அன்னையின் வரவால், விவசாயி, மிக அதிக அளவிலான விளைச்சலை அடைந்தான். பன்மடங்கு லாபத்தின் காரணமாக, வாழ்வில் அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்தான் அவன். 
பன்னிரண்டு ஆண்டுகள் விரைவாகச் சென்றன. பன்னிரண்டாம் ஆண்டு முடிவில், தேவி, விவசாயியிடம் சென்று, தான் விடைபெற்றுக் கொள்வதாகக் கூறினாள். ஆனால் அவனோ, ஒரு நல்ல கூலியாளை அனுப்பத் தயாராக இல்லை. தான் அதிக அளவு சம்பளம் தருவதாகக் கூறினான். தேவி மறுக்க, அவன் மீண்டும் மீண்டும் சம்பளத்தை அதிகரித்து, வற்புறுத்தலானான்.
இறுதியில் தேவி ஒரு வேண்டுகோள் வைத்தாள். விவசாயியை கங்கைக்குச்  சென்று நீராடி வருமாறும், அச்சமயம், தான் தரும் சங்குகளை கங்கை ஆற்றுக்குச் சென்று சேர்ப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாள். விவசாயி திரும்ப வரும் வரை,  தான் அங்கேயே தங்கி இருப்பதாகவும் வாக்களித்தாள். நான்கு சிறிய சங்குகளையும் விவசாயியிடம் தந்தாள்.
விவசாயி, சங்குகளோடு புறப்பட்டான். கங்கைக் கரையை அடைந்து, சங்குகளை நீரில் சேர்க்கும் சமயம், நான்கு கரங்கள் நதியில் இருந்து, விரைந்து வந்து அவற்றைப் பெற்றுக் கொண்டன. 
விவசாயி, சங்குகளை தன்னிடம் அளித்தவர் சாதாரண மானிடப் பெண் இல்லை என்பதை உணர்ந்தான். அவர் யாரென தனக்குக் காட்டுமாறு, கங்கா மாதாவிடம் பிரார்த்தித்தான். 
கங்கா தேவியின் பெருங்கருணையால், வந்திருப்பது திருமகளே என உணர்ந்து, விரைந்து இல்லம் சேர்ந்தான். திருமகளை, தன் இல்லம் விட்டுப் போக வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொண்டான்.
அன்னை, விவசாயியிடம், தான் அங்கேயே இருக்க இயலாதென்பதைக் கூறி, தான் ஒவ்வொரு வருடமும் தனதிரயோதசி தினத்தன்று அவன் இல்லம் வருவதாகவும், அச்சமயம், இல்லத்தைத் தூய்மைப்படுத்தி, வாசற்படியில் அகல் தீபங்களை ஏற்றினால்,  என்றென்றும் அவன் இல்லத்தை சுபிட்சமாக வைத்திருப்பதாகவும் வாக்களித்தாள்.
அன்று முதல், தன திரயோதசி தினத்தன்று, இல்லங்களைத் தூய்மை செய்து, அகல் தீபங்களை ஏற்றி ஸ்ரீலக்ஷ்மி தேவியை வழிபடும் வழக்கம் உண்டானது.
தன திரயோதசி  எளிய முறை  பூஜை விதிகள்
1. இல்லத்தை சுத்தமாக வைக்கவும். கோலங்கல் முதலியவற்றால் அலங்கரிக்கவும். 
2. பூஜை செய்யும் இடத்தில், ஒரு சுத்தமான துணியை விரித்து, அதில் அரிசியைப் பரப்பி வைக்கவும்.
 3. ஒரு தாமிர/பித்தளை செம்பில், முக்கால் பாகம் நீர் நிரப்பி, பாக்கு, மலர்கள், ஒரு நாணயம், சிறிதளவு அரிசி இவற்றை இடவும்.
4. செம்பில், மாவிலைக் கொத்தை வைத்து, அதன் மேல் ஒரு சுத்தமான தட்டை வைக்கவும். தட்டின் மேல் மஞ்சள் பொடி கொண்டு, தாமரை மலரை வரைந்து, அதன் மேல் ஒரு சிறிய லக்ஷ்மி தேவி விக்ரகம் அல்லது படம் வைக்க வேண்டும். கலசத்தின் அருகில்  சிறு விநாயகர் விக்ரகம் வைக்கவும். பிற தெய்வத் திருவுருவங்களையும் வைக்கலாம். 
5.திருவிளக்கை ஏற்றிக் கொள்ளவும்.
6. மனதில் லக்ஷ்மி தேவியின் திருவுருவை  ஆழ்ந்து தியானிக்கவும்..
7.கலசத்திற்கு, குங்குமத்தாலோ, மலர்களாலோ அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டவும்.
8. இயன்றால் ல‌க்ஷ்மீ தேவியின் விக்ரகத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். ஷோடசோபசார பூஜையும் செய்யலாம். தேவியின் திருவுருவிற்கு, மணி பிளான்ட்டின் இலைகள், சந்தன உருண்டைகள் இவற்றால் ஆன மாலைகள் சாற்றுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
9. இனிப்புகள், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு முதலியவற்றை சமர்ப்பிக்கவும். குறைந்தது, ஐந்து வகை இனிப்புகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
10. பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, புஷ்பாஞ்சலி சமர்ப்பிக்கவும்.
அமைதியாக, ஆரத்தி காண்பிக்கவும். க்ஷமா பிரார்த்தனை நிறைவுற்ற பின், சிறிது நேரம் லக்ஷ்மீ தேவியைத் தியானிக்கவும். 
பிரசாதங்களை சிறிதளவு உண்டுவிட்டு, பின் விநியோகிக்கவும்.
மேற்கண்ட விதிகளில், அவரவர் சௌகரியப்படி பின்பற்ற முடிந்ததைப் பின்பற்றலாம். இருப்பிடத்தைச் சுத்தமாக வைப்பது மட்டும் முக்கியம். பூஜை செய்ய இயலாதவர்கள், அன்னையை மௌனமாக தியானிக்கலாம்.. 
சிலரது இல்லங்களில், குபேரனுக்கும் தனதிரயோதசி அன்று பூஜை செய்யப்படுகின்றது. பதிமூன்று தீபங்கள் ஏற்றி, தூப தீப ஆராதனைகளுடன், குபேர அஷ்டோத்திரம் சொல்லி வழிபாடு செய்யப்படுகின்றது.
யம தீபம் பூஜிக்கும் முறை:
1. மாவினால் ஆன தீபம் ஒன்று செய்து கொள்கிறார்கள். தீபத்தில் நான்கு திரிகள் போட்டு, நெய் அல்லது எண்ணை ஊற்றுகிறார்கள்.. 
2. இதுவே யம தீபம். யமதர்மராஜரின் திருப்திக்காகவும், முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகவும்  இதை ஏற்றி வழிபாடு செய்கிறார்கள்.
3. பெரும்பாலும் பூஜையை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்தே செய்கிறார்கள். பூஜைக்கு அமர்பவர்கள் அனைவருக்கும், குடும்பத்தில் மூத்த பெண்மணி அல்லது மணமாகாத கன்னிப் பெண், நெற்றியில் திலகமிட்டு அக்ஷதை போடுகிறார்.
4. திருவிளக்கையும் யமதீபத்தையும் ஏற்றுகிறார்கள்.
5. யமதீபத்தைச் சுற்றிலும் புனித நீர் தெளித்து, அக்ஷதை, மலர்கள், காசுகள் கொண்டு பூஜை செய்கிறார்கள்.
6. நான்கு திரிகளுக்காக, நான்கு வித இனிப்புகள் படைக்கிறார்கள். வேறு நிவேதனங்களும் செய்கிறார்கள்.
7.பெண்கள், யம தீபத்தை நான்கு முறை சுற்றி வந்து வணங்குகிறார்கள்.
8.குடும்பத்தின் மூத்த ஆண், தன் தலை மீது சுத்தமான துணியை அணிந்து கொண்டு, யம தீபத்தை எடுத்துச் சென்று, தலைவாயிலின் வலப்புறத்தில் வைக்கிறார்.
இதன் பிறகு, மூத்தவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுகின்றனர்.
இவ்வாறு செய்வதால், யமதர்மராஜரின் ஆசியும், முன்னோர்கள் ஆசியும்,  கிடைக்கும். நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்வும் பெறலாம் என்பது நம்பிக்கை.
தன திரயோதசி தினத்தில், நம் இல்லங்களிலும் இயன்ற அளவு திருமகளைப் பூஜித்து, எல்லா வளங்களும் நலங்களும் பெற்று,
வெற்றி பெறுவோம்!!!


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God



Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Sunday, 6 October 2013

NAVARAATHRI

Navarathri  Day 1
Devi : Maaheswari
Flower :Malligai
Neivedhyam :Ven pongal
Thithi  : Pradhamai
Kolam :Arisi maavaal (rice flour) pottu kolam poda vendum.(Draw rangoli by using rice flour.)
Raagam  : Thodi Raagam
Slokam   : Om swethavarnaayai  vidhmahe
                         soola hasthaayai dheemahi
                         thanno Maaheshwari Prachodayaath

Navarathri  Day 2
Devi: Kowmaari
Flower:Sevvarali
Neivedhyam: Puliyodharai
Thithi: Dwitheeyai
Kolam:maavinal kolam . (Draw rangoli by using wet flour.)
Raagam:kalyaani
Slokam: Om Siki vaahanaaya vidhmahe
                      Sakthi Hasthaayai Dheemahi
                      Thanno kowmaari Prachodayaath
Navarathri  Day 3
Devi: Vaaraahi
Flower:Champangi
Neivedhyam:Sakkarai pongal
Thithi:thrutheeyai
Kolam:malar  kolam poda vendum . (Draw rangoli by using flowers-pookolam.)
Raagam:kaambhodhi
Slokam: Om Magishathvajaaya vidhmahe
                      Thanda Hasthaaya Dheemahi
                      Thanno Vaaraahi Prachodayaath

Navarathri  Day 4
Devi:  Lakshmi
Flower: JaathiMalli
Neivedhyam:Kadhamba Saadham
Thithi:chathurthi
Kolam:Atchadhai kondu padikattu pola kolamida vendum (Draw rangoli in shape of steps by using atchatai (mix of rice,turmeric,ghee.))
Raagam:bhairavi
Slokam: Om Padma Vaasinyai cha Vidhmahe
                      Padmalochanee sa Dheemahi
                      Thanno Lakshmi prachodayaath

Navarathri  Day 5
Devi:  Vaishnavi
Flower: Paarijaatham & Mullai
Neivedhyam: Curd Rice
Thithi: panchami
Kolam: kadalai maavaal paravai kolam poda vendum (Draw a bird like rangoli by using Bengal gram flour.)
Raagam:panchamaavaranai  keerthanai paada vendum.bandhuvaraali
Slokam: Om Syaamavarnaayai  Vidhmahe
                     Chakra Hasthaayai Dheemahi
                     Thanno Vaishnavi Prachodayaath

Navarathri  Day 6
Devi : Indraani
Flower:Semparuthi
Neivedhyam:Coconut rice
Thithi:sashti
Kolam:kadalai maavinaal Devi naamathai kolamida vendum  (Write the name of the goddess  using Bengal gram flour.)
Raagam:Neelaambari
Slokam: Om Kajathvajaayai vidhmahe
                     Vajra Hasthaaya Dheemahi
                     Thanno Iyndree Prachodayaath


 
Navarathri  Day 7
Devi: Saraswathi
Flower:Malligai & mullai
Neivedhyam:Lemon rice
Thithi:Sapthami
Kolam:Narumana malargalaal kolamida vendum (Draw rangoli by using  fragrant flowers-pookolam.)
Raagam:Bilahari
Slokam: Om Vaakdevyai  vidhmahe
                     Vrinji pathnyai sa Dheemahi
                     Thanno Vaani Prachodayaath



Navarathri  Day 8
Devi: Durga
Flower:Roja
Neivedhyam: Paayasaannam
Thithi:ashtami
Kolam:padma kolam  (Draw traditional lotus shaped rangoli)
Raagam:punnagavaraali
Slokam: Om Magisha mardhinyai vidhmahe
                     Durga devyai Dheemahi
                     Thanno Devi Prachodayaath

Navarathri  Day 9
Devi: Saamundaa
Flower:Thaamarai
Neivedhyam:Akaaravadisil
Thithi:navami
Kolam:Vaasanai podigalal aayudham pola kola mida vendum (Draw weapon shaped rangoli  by using fragrant  powder.)
Raagam:vasantha raagam
Slokam: Om Krishna varnaayai vidhmahe
                     Soola Hasthaayai Dheemahi
                    Thanno Saamundaa Prachodayaath

Vijaya dasami
Devi: Vijaya
Flower: Malligai,Roja
Neivedhyam: sakkarai pongal,sweets
Thithi: dasami
Slokam: Om Vijayaa devyai  vidhmahe
                     Mahaa Nithyaayai Dheemahi
                    Thanno DEVI Prachodayaath

Thanks for all the resources which constituted this compilation.
Lets all pray for a healthy,peaceful & perfect life for one and all.
Wish you all an auspicious & blissful navaraathri ! ! !

Sunday, 8 September 2013

விநாயக சதுர்த்தி



  விநாயக சதுர்த்தி




விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக  விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா  முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம்  கேள்' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு  வரமளித்தார். 


இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித்திதியன்று  விநாயக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபாடி, உண்ணா நோன்பிருந்து,  தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம். 

இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார  விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது  மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

அதன் பிறகு சுதந்திர போராட்டக்காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில்  ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில்  விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் எல்லாம் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து  கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர். வெகுகாலத்தின் பின்னரே  தமிழகத்தில் இவ்விழா அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.


    
ஆதி விநாயகர் - செதலபதி.

எப்படி வந்தது யானை முகம் ?

விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா  தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான்.  கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது  அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு.  அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.

தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில்  பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர்  சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை  நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை  வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம்.  அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து,  உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை  கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத்தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே  தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது.  தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது. விநாயகருக்கு, சுமுகர் என்ற  பெயருண்டு. ச என்றால் மேலான அல்லது ஆனந்தமான என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள்  ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார். விநாயகர் சதுர்த்தி  நன்னாளில், ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.


For the  seventh year in succession, a private construction firm is organising an exhibition of Ganesha idols in connection with the Vinayaga Chathurthi at Chromepet.

More than 2,500 exhibits idols and paintings form part of the exhibition. organised by Vinayaga Builders.
 
Different types of materials with thematic presentations form part of the exhibition that is open to all and currently underway at

Sri Ram Nivas, No. 18 Krishnamachari Street,
Radha Nagar, Chromepet.

For details, call 93810 41018.

For those who are not fortunate enough to visit, see the video and get HIS blessings :

http://www.youtube.com/watch?v=IrBr1ISUNU0

 






See  
rajandraws.wordpress.com

for lot more amazing drawings of Ganapathi....   

விநாயகரை கரைப்பது ஏன்?
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

குட்டு என்றால் என்ன?

விநாயகர் முன்னால் நின்று குட்டுகிறோம் அல்லவா! குட்டு என்பது தமிழ்ச்சொல் அல்ல. இந்த கன்னடச் சொல்லுக்கு ரகசியம், மர்மம், புதிர் என்று பொருள். மறைத்து வைத்த விஷயம் வெளிப்படும் போது குட்டு உடைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. வியாசர் பாரதக்கதையைச் சொல்லச்சொல்ல விநாயகர் எழுதினார். அவரது எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத வியாசர், இடையிடையே சிக்கலான ஸ்லோகங்களைச் சொல்லி விநாயகரை யோசனையில் ஆழ்த்தினார். அந்த ஸ்லோகங்களுக்கு பாரத குட்டு என்று பெயர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி அடுத்த ஸ்லோகங்களைச் சொல்ல தன்னைத் தயார்படுத்திக் கொள்வார் வியாசர். விநாயகனே! நான் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்திருக்கலாம். அந்தக் குட்டு (ரகசியம்) உடையாமல், என் தன்மானத்தைக் காப்பாற்று, என்ற பொருளிலும் தலையில் குட்டி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள்.

முதன் முதலில் தோப்புக்கரணம் போட்டவர்
தோப்புக்கரணம் என்ற சொல் தோர்பிகரணம் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து ஏற்பட்டது. தமிழில் ஒன்றைக் குறிப்பதை ஒருமை என்றும், ஒன்றுக்கு மேற்பட்டதை பன்மை என்றும் கூறுகிறோம். சமஸ்கிருதத்தில் ஏகவசனம், த்வி வசனம், பஹு வசனம் என்று மூன்றாக இதைப் பிரித்துள்ளனர். ஏகவசனம் என்பது ஒன்று. த்வி வசனம் என்பது இரண்டு. பஹு வசனம் என்றால் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பது. கை என்பதை சமஸ்கிருதத்தில் தோஸ் என்பர். தோஷா என்றால் ஒரு கை. தோர்ப்யாம் என்றால் இரண்டு கைகள். மனிதனுக்கு மட்டுமே இரண்டு கைகள். தெய்வங்கள், தேவர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் உண்டு. அப்படியானால், தோப்புக்கரணத்தை தோர்ப்யாம் கர்ணம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், தோர்பி என்ற சொல்லுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் என்று பொருள். அப்படியானால், நான்கு கைகளையுடைய திருமால் தான் முதன்முதலில் தன் மருமகனான விநாயகருக்கு காதுகளை மாற்றிப்பிடித்து தோப்புக்கரணம் போட்டு வேடிக்கை காட்டி சிரிக்க வைத்தார்.

நமக்கு கிடைத்த பாக்கியம்
கலாசாரத்தில் பாஷை மிக முக்யம். அதை வைத்துத்தானே சமய சம்பந்தமான நூல்கள், அறிவை வளர்த்துக் கொள்ளும் நூல்கள், மனசுக்கு விருப்பமான மற்ற கதை, கவிதை, காவ்யம் எல்லாமே? அப்படியிருக்கப்பட்ட தமிழ் பாஷைக்கு விக்னேச்வரர் ரொம்ப முக்யம். எது ஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு சாமான் லிஸ்ட் எழுதினால் கூட சரி, முதலில் என்ன பண்ணுகிறோம்? பிள்ளையார்சுழி என்று தானே போடுகிறோம். எடுத்துக் கொண்ட கார்யம் சுழித்துப் போகாமல் ரக்ஷித்துக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார்சுழி! பிள்ளையார்சுழி என்ற அர்த்தத்தில், ஸம்ஸ்கிருதம் உள்பட இந்ததேச பாஷைகளில் வேறே எதிலும் இப்படி மங்களாரம்ப ஸிம்பலாக ஒன்று இல்லை. இது நம் தமிழ்மொழியின் பாக்யம். பிள்ளையாருக்கென்று ஏகப்பட்ட கோயில்கள் கட்டி வைத்திருப்பதும் தமிழ்நாட்டில் தான். வேறு எந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு பிள்ளையாருக்குத் தான் மூலைக்கு மூலைகோயில்! காணபத்யத்துக்கு (விநாயகர் வழிபாட்டிற்கு) மகாராஷ்டிரம் தான் ராஜதானி(தலைநகர்) என்று சொல்வார்கள். ஆனால், கோயில் கணக்குப் பார்த்தால் அது, தமிழ் நாட்டுக்கு ரொம்பவும் பின்தங்கி எங்கேயோ தான் நிற்கும். -காஞ்சிபெரியவர்

விநாயகரின் திருமணம்
பிரம்ம தேவனுக்கு புத்தி, சித்தி இரண்டு புத்திரிகள் இருந்தனர். பிரம்ம தேவர் அவர்களை விநாயகருக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். உடனே அவர் நாரதரைக் கூப்பிட்டு விஷயத்தைக் கூறி விநாயகரிடம் தூது அனுப்பினார். நாரதரும் விநாயகரிடம் சென்று தன் இயல்பான கலகமூட்டும் வேலையைச் செய்யாமல் ஒழுங்காக வந்த விஷயத்தைக் கூறினார். பிள்ளையாரும் மணமுடிக்க சம்மதித்தார். நாரதர் நேராகச் சென்று விஷயத்தை பிரம்மனிடம் கூறிவிட்டார். பிரம்மனும் முறைப்படி சிவபெருமானையும் பார்வதியையும் பார்த்து விஷயத்தைக் கூறவே அவர்களும் தங்களது சம்மதத்தைத் தெரிவித்து விட்டனர். திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. விஸ்வகர்மா (தேவதச்சன்) திருமணத்துக்கு என்று சொர்க்க லோகத்தை விட சிறப்பான ஒரு நகரத்தை நிர்மாணித்தான். திருமணத்தைக் காண அனைத்து லோகங்களிலிருந்தும் கூட்டம் கூடிவிட்டது. அவர்களின் பசியைத் தணிக்க காமதேனு அவர்களுக்கு உணவு அளித்துக் கொண்டே இருந்தது. திருமண நாளும் வந்தது. சித்திக்கு லட்சுமி தேவியும், புத்திக்கு இந்திராணியும் அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். நூறாயிரம் கோடி தேவர்கள் மந்திரம் முழங்க சித்தி, புத்தி இருவரின் கழுத்திலும் விநாயகர் மங்கள நாண் பூட்டினார்.

விநாயகரின் பெண்வடிவம்
விநாயகரின் பெண் வடிவமே விநாயகி. யானைமுகம், கழுத்துக்குக் கீழ் பெண் வடிவம், 12 கரங்கள், 3 கண்கள் கொண்டு, தலையில் பிறைசூடி, நாகாபரணம் தரித்துக் காணப்படும் இந்த விநாயகியை வணங்கி வந்தால் கலை ஞானம், அறிவு ஆகியவைகள் கிட்டும்.

பூமியில் சிறந்த பூ எந்த பூ?

விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ. இதனை அர்க்க புஷ்பம் என்பர். அர்க் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போலவே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது. சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயருண்டு. சூரியனார் கோயிலின் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடி தான். எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவித்தால் விக்னங்கள் (தடைகள்) நீங்குவதோடு சூரியனின் அருளால் ஆத்மபலம், ஆரோக்கியம் உண்டாகும்.

வீட்டில் பிள்ளையார் சிலை இருக்கிறதா?

பெரும்பாலான வீடுகளில் விநாயகர் சிலை வைத்து உள்ளனர். அது அளவில் பெரிதோ, சிறிதோ...அதுபற்றி கவலையில்லை. அந்தப் பிள்ளையாருக்கு கட்டாயம் ஏதாவது ஒரு நைவேத்யம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பழமாவது வைக்க வேண்டும். சதுர்த்தி திதிகளில் முடிந்தவரை மோதகம், கோதுமை அப்பம், பழவகைகள், பொரி ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். அப்பா சிவனுக்கு அபிஷேகம் என்றால் பிரியம். மாமா திருமாலுக்கு அலங்காரம் என்றால் பிரியம். அதுபோல, விநாயகருக்கு நைவேத்யம் என்றால் பிரியம். பானை வயிற்றோனுக்கு பசித்துக் கொண்டே இருக்குமல்லவா! அவர் போஜனப்பிரியர் என்பதற்கு அவ்வையாரும், அருணகிரியாரும் சான்று கூறியுள்ளனர். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்று ஆரம்பிக்கிறாள் அவ்வையார். இவையெல்லாம் கலந்த நைவேத்யத்தை உனக்கு நான் தருகிறேன். எனக்கு நீ முத்தமிழ் அறிவையும் தா, என வேண்டுகிறாள். தமிழில் அதிகமார்க் பெற விரும்பும் மாணவர்கள் இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். அருணகிரியார் தனது பாடலில் கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி என்று விநாயகருக்கு பிடித்த நைவேத்யத்துடன் தான் திருப்புகழை ஆரம்பிக்கிறார்.

வலம் வந்தால் பலம்: குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் இடுவது, சிதறுகாய் உடைப்பது, எருக்கம்பூ மாலைஅணிவது, அருகம்புல்லால் அர்ச்சிப்பது, கொழுக்கட்டை படைப்பது அனைத்தும் விநாயகருக்கு உகந்த வழிபாடுகள். ஆனால், இதையெல்லாம் விட மிக எளிய வழிபாடு விநாயகரை வலம் வருவதாகும். அவரே இதற்கு உதாரணமாக நடந்து பலன் பெற்றார். அம்மையப்பரே உலகம்! உலகமே அம்மையப்பர்! என்று சொல்லி பெற்றோரை வலம் வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். குறைந்தபட்சம் மூன்றுமுறை விநாயகரை வலம் வரவேண்டும். 21முறை, 108முறை விநாயக மந்திரமாகிய ஓம் சக்தி விநாயக நம என்று ஜெபித்தபடி வலம் வந்தால் தேகபலம், புத்திபலம், பணபலம் என்று வாழ்விற்குத் தேவையான எல்லா பலங்களையும் பெற்று வாழலாம்.

ஜ்யேஷ்டராஜ சுவாமி: ரிக்வேதம் பழமையானது. இதில், விநாயகரைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. வேதகாலம் முதல் வழிபடப்பட்டு வரும் பழமையான கடவுள் இவர் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. ரிக்வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில் கணபதீம் என்ற குறிப்பு உள்ளது. இப்பெயரோடு ஜ்யேஷ்ட ராஜன் என்ற பெயரும் இவருக்குண்டு. இதற்கு முதலில் பிறந்தவன் என்பது பொருள். பார்க்கவபுராணத்தில் லீலா காண்டத்தில் விநாயகரின் அவதாரங்களும் அவருடைய திருவிளையாடல்களும் கூறப்பட்டுள்ளன. கடவுள் மறுப்பு கொள்கை உடைய புத்த, சமண கோயில்களிலும் இவருக்கு இடமுண்டு. தைத்ரீய ஆரண்யகம் இவரை தந்தி என்ற சொல்லால் அழைக்கிறது. தந்தோ தந்தி ப்ரசோதயாத் என்றே காயத்ரி மந்திரம் விநாயகரை குறிப்பிடுவதைக் காணலாம்.

உலகின் முதல் குமாஸ்தா: மகாபாரதக்கதையை வியாசர் சொல்ல விநாயகர் எழுதினார். பழங்காலத்தில் ஒரு நூலை உருவாக்கும் கிரந்தகர்த்தா ஒருவராகவும், அதனை எழுதுபவர் வேறொருவராகவும் இருப்பதுண்டு. ஓங்கார வடிவமாகவும், உலக இயக்கத்திற்கு காரணமாகவும், சிவசக்தி தம்பதியரின் மூத்த பிள்ளையாகவும் விளங்கிய விநாயகர் தன் நிலையில் இருந்து இறங்கி ஒரு குமாஸ்தாவைப் போல வியாசர் முன் அமர்ந்து, பாரதக்கதையை எழுதினார். தன் யானை முகத்துக்கு அழகு சேர்க்கும் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி கொண்டார். மகாபாரதம் ஒரு தர்ம காவியம். உலகில் தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக இந்த தியாகத்தைச் செய்தார். அலுக்காமல் சலிக்காமல் பாரதத்தின் லட்சம் ஸ்லோகங்களையும் எழுதி முடித்தார்.

குழந்தைகளின் தெய்வம்
வீதியில் மணியோசை கேட்டால், ஆஹா! யானை வருது! என்று பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் ஓடுவர். யானையின் கம்பீரமான தோற்றம், வளைந்த துதிக்கை, நீண்ட பெரிய காதுகள் காண்பவரை ஈர்க்கும். விநாயகருக்கு வெள்ளை மனமும், பிள்ளை குணமும் மிகவும் பிடிக்கும். குழந்தை முதல் பெரியவர் வரை யாவரும் விரும்பும் ஒரே தெய்வம் இவர். படிக்கும் குழந்தைகளின் இஷ்ட தெய்வமாகவும் விளங்குகிறார். தேர்வை தடையின்றி எழுத உதவுபவர். குழந்தைகளுக்கு பிடித்த மோதகத்தை (கொழுக்கட்டை) விரும்பிச் சுவைப்பவர்.

பத்தடி உயர கடுகு! இருபதடி உயர கடலை!
அணுவுக்கு அணுவாகவும், அகிலாண்ட கோடியாகவும் இருப்பவர் விநாயகர். விநாயகர் அகவலில் அவ்வையார், அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்று அவரது தன்மையை குறிப்பிடுகிறார். விநாயகரின் உருவம் மிகப்பெரிதாக இருப்பதால்,மகாகாய என்ற பெயர் அவருக்கு உண்டு. பெரிய உருவத்தைக் காட்டும் விதத்தில் கர்நாடக மாநிலம் ஹம்பியில் இரண்டு விநாயகர் சிலைகள் உள்ளன. ஒருசிலை பத்தடி உயரம் கொண்டது. இதை சசிவுகல்லு என்பர். கடுகளவு ஆனவர் என்று பொருள். இருபது அடி உயரம் கொண்ட மற்றொரு விநாயகருக்கு கடலைக்கல்லு என பெயர். கடலை பருப்பு அளவுகொண்டவர் என்று பொருள். விநாயகரின் நிஜவடிவத்தோடு ஒப்பிட்டால், இச்சிலைகள் கடுகாகவும், கடலையாகவும் இருக்கும் என்று நமக்கு இந்தச்சிலைகள் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இவர் இருக்கும் இடம் மிக உயரம்
உலகிலேயே மிக உயரத்தில் இருக்கும் பிள்ளையார் எங்கிருக்கிறார் தெரியுமா? இமயமலைத் தொடரில் லடாக் பகுதியில் இருக்கும் லே என்ற இடத்தில் தான். லே லடாக் பகுதியில் உள்ளது. இங்கு பணியாற்றிய ஒரு குடும்பத்தினரின் கனவில் யானை அடிக்கடி துரத்துவது போல இருந்தது. ஒருமுறை அவர்கள் அங்குள்ள ஸபித்துக் காளிமாதா கோயிலுக்கு சென்றபோது, பிள்ளையாருக்கு கோயில் கட்டும் எண்ணம் உதித்தது. அதன்பின், யானை கனவில் துரத்துவது நின்றுவிட்டது. பின் காஞ்சிப் பெரியவரின் ஆசி பெற்று கோயில் திருப்பணியைத் துவக்கினர். கட்டுமானப் பொருட்களும், விக்ரஹமும் சென்னையில் இருந்து சென்றது. கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி உயரம் உள்ள இக்கோயிலை ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டுமே தரிசிக்க முடியும். 2006 ஆகஸ்ட் 4ல் இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கமிஷன் கணபதி
மதுரையிலிருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் அப்பன் திருப்பதி கிராமத்திலுள்ள விநாயகர் தரகு விநாயகர் எனப்படுகிறார். இப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்கள் தங்கள் விளைநிலங்களில், விளைச்சல் சிறந்த இருந்தால் ஒரு குறிப்பிட்ட அளவு தானியத்தை கமிஷனாக (தரகு) தருவதாக வேண்டிச் செல்வர். விளைச்சலுக்கு பின் தாங்கள் வேண்டியபடி இங்கு வந்து காணிக்கை செலுத்துவர்.

பாலச்சந்தருக்கு அர்த்தம் தெரியுமா?
பாலச்சந்தர் என்ற பெயருக்கு அர்த்தம் கேட்டால், குழந்தை சந்திரன் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், உண்மையில் இந்தப் பெயருக்குரியவர் விநாயகர். விநாயகருக்குரிய பதினாறு நாமங்களில் (பெயர்கள்) பதினோராவது நாமமாக வருவது பாலச்சந்தர். வடமொழியில் ப வரிசையில் நான்குவித எழுத்துகள் உண்டு. இதில் நான்காவதாக வரும் பவில் தொடங்குவது பாலச்சந்தர். இதற்கு நெற்றியில் நிலாவைச் சூடியவர் என்று பொருள். விநாயகர் பார்வதியில் இருந்து தோன்றியவர் என்றாலும், தந்தையின் குணாதிசயமும் வேண்டும் என்பதற்காக, சிவனைப் போல் நெற்றியில் பிறைநிலா சூடியுள்ளார்.

தடங்கல் நீக்கும் மந்திரம்
பழங்காலத்தில் சுவடிகள் எழுதத் துவங்கும்போது பிள்ளையார்சுழிக்குப் பதிலாக விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று எழுதினர். இவ்வாறு சொல்லியோ அல்லது எழுதியோ தொடங்கும் பணிகள் விநாயகர் அருளால் தடங்கலின்றி விரைவில் நிறைவேறும் என்பர்.

வலம்புரி விநாயகருக்கு என்ன விசேஷம்?
விநாயகரின் தும்பிக்கை இடதுபக்கமாகத்தான் வளைந்திருக்கும். ஒரு சில இடங்களில் மட்டுமே வலப்புறமாக வளைந்த வலம்புரி விநாயகரைத் தரிசிக்கலாம். கும்பகோணம் அருகிலுள்ள ஒரு தலத்துக்கே திருவலஞ்சுழி என்ற பெயர் இருக்கிறது. இங்கு வலம்புரி விநாயகர் சந்நிதி உள்ளது. வலம்புரி விநாயகர் வடிவத்தில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இந்த வளைவு ஓம் என்ற மந்திரத்தை ஒத்துள்ளது. இடதுபக்கமாக தும்பிக்கை சுழிந்திருந்தால் ஓம் என்ற பிரணவ வடிவம் கிடைக்காது. வலம்புரிக்கு இத்தகைய சிறப்பு உண்டு. அவரது வாயின் வலதுஓரம் ஆரம்பித்து, கன்னம், மத்தகம் (சிரசு) ஆகியவற்றை சுற்றிக் கொண்டு, இடதுபக்கம் தும்பிக்கை வழியாக இறங்கி, அதன் சுழிந்த முடிவுக்கு வருவது ஓம் என்பதை ஒத்திருக்கும். இதனால் தான் வலம்புரி விநாயகருக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

தொந்திக்கு இன்னொரு வார்த்தை
டுண்டி என்ற சொல்லுக்கு தொந்திவயிறு என்று பொருள். காசியில் இருக்கும் விநாயகரை டுண்டி ராஜகணபதி என்பர். வடக்கே டுண்டி என்ற சொல் போல, தெற்கே ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்ற ஊர் இருக்கிறது. இங்கிருக்கும் விநாயகர் ராமரால் வழிபாடு செய்யப்பட்டவர். இலங்கைக்கு தொண்டியிலிருந்து பாலம் கட்ட திட்டமிட்ட ராமர், முதலில் விநாயகரை பூஜித்தார். அவருக்கு காட்சியளித்த விநாயகர் தொண்டியில் இருந்து கட்டாமல் இன்னும் தெற்காக சேதுக்கரையில் கட்டினால் இலங்கை கோட்டையின் வாசலை அடையலாம் என்று யோசனை வழங்கினார். வாழ்வில் வரும் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கும் வழி காட்டியாக தொண்டிவிநாயகர் இருக்கிறார். வெயில், மழை என பாராமல் மனைவியை தேடி அலைந்து திரிந்த சிரமப்பட்ட மாமாவின்(திருமாலின் அம்சமான ராமர்) மீது கொண்ட அன்பின் காரணமாக, இங்கு விநாயகரும் கூரை இல்லாமல் வெட்டவெளியில் அமர்ந்திருப்பதாக ஐதீகம். இந்த தொண்டிவிநாயகர் மீது ஆதிசங்கரர், கணேச பஞ்ச ரத்தினம் என்னும் பாடலைப் பாடினார்.

பெண்களுக்கு துன்பம் செய்தால்....
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகரை பிரம்மஹத்தி விநாயகர் என்பர். இந்த உலகத்திலேயே கொடிய பாவங்கள் எனக்கருதப்படுபவை பசுவையும், பிராமணர்களையும், சாதுக்களையும் கொலை செய்வது, நம்பிக்கை துரோகம் செய்வது, பெண்களை ஏமாற்றியோ, வலுக்கட்டாயமாகவோ கெடுப்பது ஆகியவை. இந்தச் செயல்களைச் செய்தோருக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் பாவம் தீராது. அவர்களது சந்ததியும் நன்றாக இருக்காது. இத்தகைய கொடிய பாவங்களுக்கும் தீர்வளிக்கிறார் பிரம்மஹத்தி விநாயகர். எங்கள் முன்னோரில் யாரோ செய்த தவறுக்காக எங்களை சோதிக்காதே என இவரிடம் மனமுருகி கேட்டு பிரார்த்திக்கலாம். முன்னோர்களால் பாதிக்கப் பட்ட குடும்பங்களின் வாரிசு இருந்தால் அவர்களுக்கு வேண்டிய உதவி செய்யலாம். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தோஷம் விலகும்.

ஒலி வடிவானவர்: ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள்; நவம் என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம், ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.

விநாயகர் சதுர்த்தியை அறிமுகப்படுத்தியவர்: விநாயகர் சதுர்த்தி விழா ஆதிகாலம் முதல் இருந்துவந்தாலும், அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர்தான். 1893-ல் விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பூனாவில் அமைந்துள்ள தகடுசேத் கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா முதன்முதலாக விசேஷமாக கொண்டாடப்பட்டது.

விநாயகரின் பஞ்ச பூதத் தலங்கள்: பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐந்து தலங்களில் எழுந்தருளியுள்ளார் விநாயகர். காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலிலுள்ள விநாயகர் நிலத்தையும், திருவானைக்கா விநாயகர் நீரையும், திருவண்ணாமலை விநாயகர் நெருப்பையும், திருக்காளத்தி பாதாள விநாயகர் வாயுவையும், தில்லை சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர் ஆகாயத்தையும் குறிக்கின்றனர். இவர்களை வழிபட ஐம்பூதங்களால் ஏற்படும் அல்லல் விலகும்.

அபீஷ்ட வரத கணபதி
ஸ்ரீ அபீஷ்ட வரத மஹாகணபதி திருவையாறு மேட்டுத் தெருவில் கோவில் கொண்டுள்ளார். திருவையாறு வழியாக வந்த காவேரி அவ்வூரின் அழகு கண்டு அங்கேயே தங்கிவிட, அபீஷ்ட வரத மஹாகணபதியை பூஜித்தே சமுத்திரராஜன் திருமணத்தை நடத்தி வைத்தவர் என்பதால், இக் கணபதியை தரிசித்தால் திருமணத் தடை நீங்கி விடும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்த பின்தான் அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருகைலாயக் காட்சி கொடுத்தார் என்று தலபுராணம் கூறுகிறது.
கச்சேரி விநாயகர்
காஞ்சிபுரம் மாவட்டம்,மதுராந்தகத்திலிருந்து 26 A.e. தொலைவில் உள்ளது சேயூர். இங்கே, பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள விநாயகர், கச்சேரி விநாயகர் எனும் வித்தியாசமான பெயர் கொண்டவர். அருகே காவல் நிலையம் இருப்பதும் (காவல் நிலையத்தை கச்சேரி என்பது பழைய வழக்கம்) ஒரு புறமாக சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் இவர் காணப்படுவதும், இவரது பெயருக்குக் காரணமாய்க் கூறப்படுகிறது. கோடை அபிஷேகம் என்ற பெயரில் சித்திரை மாதம் முழுவதும், தினசரி இளநீர் அபிஷேகமும் தயிர்க்காப்பும் சாத்தப் பெற்று குளுகுளுவென்று காட்சியளிப்பார் இவ்விநாயகர்.
சிலம்பணி விநாயகர்
தேவகோட்டையில் உள்ள ஆலயம் ஒன்றில் விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவரைச் சிலம்பணி விநாயகர் என்றழைக்கின்றனர்.
சர்ப்ப விநாயகர்
சர்ப்ப விநாயகர், பாப நாசம் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது உடல் முழுவதும் சர்ப்பங்கள் அணி செய்கின்றன. இராகு, கேது தோஷங்களிலிருந்து விடுபட இவரை வணங்கி அருள் பெறலாம் என்று கூறப்படுகிறது.

அவரவர் நட்சத்திரத்திற்கேற்ப ஆனைமுகனை அலங்கரிக்க

அஸ்வினி - வெள்ளிக்கலசம், தங்கக் கிரீடம் அறுகம்புல் மாலை.
பரணி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
கிருத்திகை - வெள்ளிக் கவசம், தங்கக் கிரீடம்.
ரோகினி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
மிருகசீரிஷம் - கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், அறுகம்புல் மாலை.
திருவாதிரை - தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை.
புனர்பூசம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.
பூசம் - கஸ்தூரி மஞ்சள், தங்கக் கிரீடம், அன்னம்.
உத்திரம் - திருநீறு அலங்காரம், அருகம்புல் மாலை.
ஹஸ்தம் - சந்தன அலங்காரம், அருகம்புல் மாலை.
சித்திரை - வெள்ளி கவசம், அறுகம்புல் மாலை.
சுவாதி - தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை.
விசாகம்- திருநீறு அலங்காரம்.
அனுஷம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை, ரோஜா மாலை.
கேட்டை - தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.
மூலம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.
பூராடம்- தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.
உத்திராடம்- அறுகம்புல் மாலை.
திருவோணம்- சுவர்ணம், அறுகம்புல் மாலை.
அவிட்டம் - மலர் அலங்காரம், வெள்ளிக் கவசம்.
சதயம் - குங்கும அலங்காரம், வெள்ளிக் கவசம்.
பூரட்டாதி- தங்கக் கிரீடம், அன்னம், அருகம்புல் மாலை.
உத்திரட்டாதி- ரோஜா மாலை அலங்காரம்.
ரேவதி- வெள்ளிக் கவசம், மலர் அலங்காரம், அருகம்புல் மாலை.
உலக விநாயகர்
மதுரை கே. புதூர் உலகநாதன் சேர்வை தெருவில் அமைந்துள்ளார். இந்த விநாயகரின் திருநாமம் உலகம் என்ற சொல்லை ஏற்றிருப்பதால் மக்கள் அனைவருக்கும் மகத்தான சக்தியை அளித்து வருகிறார். தேர்வுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், வேலை தேடிச்சேல்லும் இளைய சமூகத்தினர் வயதானோர், திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஆகியோர், இவரை வணங்கிச் சென்றால், அவர்கள் எண்ணம் நிறைவேற பரிபூரண ஆசி வழங்கி, சிறப்பான வாழ்கை அமைய அருள் புரிகிறார். ' உலக வினாயகர்'.
சித்தி அரசு விநாயகர்
சித்தத்தில் எண்ணியதை நிறைவேற்றி வைத்திடும் 'சித்தி அரசு விநாயகர்' அமைந்திருப்பது, வேதாரண்யம் தலத்திற்கு மேற்கே 8 A.e. தொலைவில் உள்ள, குரவப்புலம் எனும் கிராமத்தில்.
அம்மையாரின் அருட்கோலக் காட்சியாய் விளங்கும் லிங்கவடிவ ஆலயத்துள் அமைந்திருக்கிறார் இந்த விநாயகர். சங்கடங்கள் தீர்த்திட இவரது சன்னதிக்கு செல்வோர், தாங்களே இவருக்கு பூஜை செய்யலாம். இக்கோயில் வலம் வந்திட, உமாபதியோடு, கணபதியையும், வலம வந்த பலன்கிட்டும் என்கின்றணர்.
குழந்தை விநாயகர்
தவழும் கண்ணனைப் போல தவழும் விநாயகர் அமைந்திருப்பது, வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், இங்கு துதிக்கையில் கொழுக்கட்டையுடன், தவழ்ந்தபடியே பின்புறம் திரும்பிப் பார்க்கும் கோலத்தில் அமைந்துள்ளார் விநாயகர்.
வியாக்ர சக்தி விநாயகர்
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள தூண்களுல் ஒன்றில், விநாயகரின் விசித்திரமான உருவம் அமைக்கப்பட்டுள்ளது. முகம் யானை முகமாகவும் கழுத்திலிருந்து இடுப்பு வரை அழகிய பெண் உருவாகவும், இடுப்பிற்குக் கீழே உள்ள பகுதி புலியின் தோற்றமாகவும் காணப்படும் இவ்விநாயகரை, வியாக்ர சக்தி விநாயகர் என அழைக்கின்றனர்.
சுயம்பு விநாயகர்கள்
வேலூர் அருகேயுள்ள சேண்பாக்கத்தில் செல்வ விநாயகர் ஆலயத்தில் பதினொரு சுயம்பு கணபதிகள் அமைந்துள்ளனர். ஒம்கார வடிவில் அமைந்துள்ள இவ்விநாயகர்கள், விநாயகருக்கு உரிய முழு வடிவில் இல்லாது, உருண்டையான கல் உருவிலேயே அமைந்துள்ளனர். இவ்வாலயத்தில் தீட்டப்பட்டுள்ள ஒவிய வடிவில் இவ்விநாயகர்களின் பெயர்கள் 1. பாலகணபதி, 2. நடன கணபதி, 3. கற்பக கணபதி,
4. ஒங்கார கணபதி, 5. சிந்தாமணி கணபதி, 6. செல்வகணபதி, 7. மயூரகணபதி, 8. மூஷிக கணபதி, 9. வல்லப கணபதி, 10. சித்திபுத்தி கணபதி, 11. ஐம்முக கணபதி.

கேது தோஷம் நீக்கும் விநாயகர்
ஜோதிட ரீதியாக கேது ஒரு ஞான கிரகம். தத்துவ ஞானிகளையும், மஹான்களையும் உருவாக்குபவர் கேது. பாம்பு உருவம் பெற்ற கேது. ஒரு சமயம், பிள்ளையாரைப் பிடிக்கப் போனார். சூரியனையே பிடித்துவிட்ட எனக்கு இந்த பிள்ளையார் எம்மாத்திரம்?என்று இறுமாப்புடன் சென்ற அவரைப் பூணூலாக அணிந்து கொண்டார் பிள்ளையார். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், திங்கட்கிழமைதோறும் பிள்ளையாரை வழிபடுவது நல்லது. இதன் மூலம் கேதுவினால், வரக்கூடிய மாங்கல்ய தோஷம், புத்திரதோஷத்தையும் பிள்ளையார் அகற்றுவார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கேதுவை மோட்சகாரகன் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஞானத்தின் வடிவமான பிள்ளையாரை வழிபடுவதன் மூலம் அவரது அருளால் கேது தோஷம் நீங்கி மோட்சம் கிடைக்கும்.

இடுக்குப் பிள்ளையார்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், குபேரலிங்கத்தை அடுத்து இடுக்குப் பிள்ளையார் சன்னதி உள்ளது. அந்த மண்டபத்தில் மூன்று யந்திரங்களை பிரதிஷ்டை செய்துள்ளார் இடைக்காட்டுச் சித்தர். அந்த சந்நதி நாம் படுத்தநிலையில் ஊர்ந்து செல்லும்படியாக உள்ளது. அப்படிச் செல்லும்போது சித்தர் அமைத்த யந்திரங்கள் நம ¢உடலில் படுகின்றன. அவற்றிலிருந்து ஆகர்ஷண சக்தி உடலில் பரவி நரம்பு வியாதிகள் குணமாகிவிடும் என்கின்றனர். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் இருப்பின் நிவர்த்தி ஆகும் என்று நம்பிக்கை கொண்டு வழிபடுகிறார்கள். இடுக்குப் பிள்ளையாரை எத்தனை முறை நுழைந்து தரிசித்து வெளி வருகிறோமோ அத்தனை பிறவிகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.

விநாயகரின் வினோதப் பெயர்கள்
திருக்கச்சூர் - கருக்கடி விநாயகர்
திருமுருகன்பூண்டி - கூப்பிடுபிள்ளையார்
கொட்டையூர் - கோடி விநாயகர்
திருப்பனையூர் - துணையிருந்த பிள்ளையார்
திருவிழிமலை - படிக்காசு விநாயகர்
நாகப்பட்டினம் - மாவடிப் பிள்ளையார்
திருநெல்வேலி - சந்திப்பிள்ளையார்
ஸ்ரீவைகுண்டம் - தூண்டில் விநாயகர்
குன்றக்குடி - தோகையடி விநாயகர்
ஸ்ரீ பெரும்புதூர் - வழித்துணை விநாயகர்
பழநி - கோசல விநாயகர்
சிவகங்கை - கௌரி விநாயகர்
மயிலாடுதுறை - அகத்திய விநாயகர்
தென்காசி - அணுக்கை பிள்ளையார்
செங்கோட்டை - ஆதிசூர விநாயகர்
திருவிதாங்கோடு - உமை அர்தபாக விநாயகர்
திருவாதவூர் - கபில விநாயகர்
வயலூர் - கீழைப் பிள்ளையார்
சுசீந்திரம் - உதயமார்த்தாண்ட விநாயகர்
வடசேரி - ஆகசாலை விநாயகர்
பயபத்திடேட்டா
திருநாமம் : பிள்ளையார் (நிரந்தர முதல்வர்)
பிறந்தநாள் : ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி,
பெற்றோர் : பரமசிவன், பார்வதி
(மூலப் பொருளின் மூலமானவர்கள்)
சகோதரர்கள் : முருகன், ஐயப்பன்
( இருவரும் அப்பா பிள்ளைகள், விநாயகர் அம்மா பையன்)
மனைவியர் : கிரியாசக்தியான சித்தி, இச்சா சக்தியான புத்தி, ஞான சக்தியான வல்லபை (இவர்கள் தவிர மஹாவிஷ்ணுவின் புதல்வியரான, மோதை, பிரமோதை, சுமநசை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருஹாசை, சுமத்யமை, நந்தினி, சாமதை எனும் பன்னிருவரும் கூட கணபதியின் மனைவியரே ! )
மகன்கள் : க்ஷேமம், லாபம் (சித்ராங்கதன், புத்திராங்கதன் என்ற பெயர்களும் உண்டு)
மாமன் : மஹாவிஷ்ணு !
இருப்பிடம் : கரும்புச்சாறால் சூழப்பட்டதும், கயிலாயத்தின் ஒரு பகுதியுமான ஆனந்த புவனம் (குளக்கரை, மரத்தடி, முச்சந்தியும் கூட உறைவிடங்களே ! )
வாகனம் : கிருதயுகத்தில் சிங்கம், திரேதாயுகத்தில் மயில், துவாபர யுகத்தில் மூஞ்சூறு, கலியுகத்தில் குதிரை)
பிடித்த கனி : மாம்பழம் (அன்னையும் தந்தையும் உலகத்திற்கு சமமானவர்கள் என உணர்த்திப் பெற்றது.
பிடித்த பலகாரம் : கொழுக்கட்டை (பிடித்து வைக்கப்படுபவர்க்குப் பிடித்த பலகாரமும் பிடித்து வைக்கப்படுவது)
ஒடித்தது : தந்தம் (பாரதம் எழுதவும், கஜமுகனை அழிக்கவும் )
கொடுத்தது : காவேரி (தமிழகத்திற்காக அன்றே திறந்துவிடப்பட்ட ஆறு)
அருளியது : ஒளவைக்கு, அகத்தியருக்கு, அடியார்களுக்கு.
அழித்தது : ஆணவம், கன்மம், மாயை நிறைந்த அசுரர்களை.
அவதார நோக்கம் : தன்னை நினைத்து தொடங்கும் செயல்களில் குறுக்கிடும் தடைகளைத் தகர்த்து எண்ணிய எண்ணம் ஈடேற அருளுதல்.
* சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் கணேசரின் முன் காளை வாகனம் காணப்படுகிறது.
* திருமாலின் உறைவிடம் பாற்கடல் ! கணபதியின் உறைவிடத்தைச் சுற்றியிருப்பது கருப்பஞ்சாறு கடல்.
* ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்நத்தை எழுதியது திருவானைக்காவில் உள்ள விநாயகர் சன்னதியில்.
* கோவையிலுள்ள ஒரு விநாயகரின் பெயர் டிரான்ஸ்பர் விநாயகர்.
* சிவசக்தியருக்கு இடையே அமைந்த சோமகணபதி மூர்த்தம் தேனம்பாக்கத்தில் உள்ளது.
* மீனாட்சியம்மன் ஆலயத்தில் 108 விநாயகர் திருவுருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
* மங்கோலியர்கள் விநாயகரை தோத்கார் அவுன்காரகன் என்றழைக்கின்றனர்.
* ஆனைமுகனின் உறைவிடம் கயிலையின் ஒரு பகுதியான ஆனந்தபுவனம்.
* கணபதிக்கு திபத்தியர்கள் வைத்துள்ள பெயர் ட்ஸோக்ப்டாக்.
* திருவண்ணாமலை ஆலய நுழைவாயிலில் உள்ள விநாயகரின் பெயர் அல்லல் தீர்க்கும் பிள்ளையார்.
* சதுர்த்தியன்று மட்டுமே விநாயகரை துளசியால் பூஜிக்கலாம்.
* உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை கணபதி.
* ஜாவா தீவில் விநாயகர் கபால மாலையணிந்து காணப்படுகிறார்.
* பர்மாவில் கணபதி மகாபைனி என்றழைக்கப்படுகிறார்.
* அருணகிரிநாதர் விநாயகரை ஐந்துகரப் பண்டிதன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
* திருச்சி உச்சிப்பிள்ளையார் தலையில் விபீஷணன் குட்டிய வடு இன்னும் காணப்படுகிறதாம்.
* முக்குறுணி விநாயகருக்குரிய மோதகம் செய்யப்படுவது 24 படி அரிசியால்.
* ஆந்திரா ஸ்ரீ சைலத்தில் கணபதி கையில் புல்லாங்குழலுடன் காணப்படுகிறார்.
* திருப்பரங்குன்க்குறத்தில் கரும்பு வில் தாங்கிய கற்பக விநாயகர் காட்சியளிக்கின்றார்.
* ப்ராஹ்கெனேஸ் என்பது, கம்போடியாவில் கணேசருக்கு வழங்கும் பெயர்.



தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரது வீட்டில் வளர்ந்த பப்பாளி மரத்தில் 1 மாத காலமாக வினாயகர் வடிவில் வளர்ந்த பப்பாளியை   வினாயகர் கோயிலுக்கு வழங்கினார்கள்.

இங்கிலாந்து: கத்தரிக்காயில் உருவான விநாயகர் உருவம்- இந்துக்கள் பக்தி பரவசம்

இங்கிலாந்து: கத்தரிக்காயில் உருவான விநாயகர் உருவம்- இந்துக்கள் பக்தி பரவசம்

 
Click the following to see Female Ganapathi and know more about Vinaayagi....!!!

http://jaghamani.blogspot.com/2012/09/blog-post_17.html
 
 
 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God



Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪



Saturday, 31 August 2013

தினசரி ஸ்லோகங்கள் 01.09.13 முதல் 08.09.13 வரை


தினசரி ஸ்லோகங்கள் 01.09.13  முதல்  08.09.13 வரை


ஆவணி16 (செப்டம்பர்1)
மதியம் 12.31 வரை ஏகாதசி .  பின்னர் த்வாதசி .  புணர்பூசம் நள்ளிரவு 2.01 வரை
சிறப்பு: ஆவணி மூன்றாம் ஞாயிறு,ஏகாதசி விரதம், முகூர்த்தநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தல்,நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்

இன்றைய சுலோகம்
:
ஓம் பிரஜாவ்ருதியை ச வித்மஹே
அதிதி புத்ராய தீமஹி
தன்னோ புணர்வசு பிரசோதயாத்.


ஆவணி17 (செப்டம்பர்2)
பிற்பகல் 2.23க்கு மேல் திரயோதசி .  பூசம் மறுநாள் அதிகாலை   4.24 வரை
சிறப்பு:
பிரதோஷம், செருத்துணைநாயனார் குருபூஜை,சொத்து வாங்க நல்லநாள், முகூர்த்தநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு அருகம்புல், வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.
இன்றைய சுலோகம் :
ஓம் பிரமம வர்ச்சாய  வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய  பிரசோதயாத்.

செருத்துணை நாயனார்
அறம் வழுவாத நெறியினைக் கொண்ட பழங்குடி பெருமக்கள் வாழும் சீரும், செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றது தஞ்சாவூர். இத்தலத்தில் வீரமிகும் வேளாண் மரபில் செருத்துணை நாயனார் என்னும் சிவத்தொண்டர் வந்தார். இவரது  தூய வெண்ணீற்று உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை எல்லாம் எம்பெருமான் பாதகமலங்களின் மீது செலுத்தினார். ஆராக்காதலுடன் சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களைக் காப்பதில் பணிவோடு மிக்கத் துணிவையும் பெற்றிருந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அறிந்தோ அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார். ஆலயத்துள் நடைபெறும் இறைவழிபாடு எவ்வித இடையூறுமின்றி நடைபெற அரும் பாடுபட்டார். அடியார்களின் நலனுக்காகத் தம் <உடல்பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யவும் துணிந்த நெஞ்சுரம் படைத்தவர். இச்சிவனடியார் திருவாரூர்த்த தியாகேசப் பெருமானுக்கு இடையறாது எத்தனையோ வழிகளில் அருந்தொண்டாற்றி வந்தார். ஒருமுறை ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்து செருத்துணை நாயனார், பகவானுக்காக பூ தொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆலய வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவப் பேரரசன் காடவர்கோன் கழற்சிங்கனுடைய பட்டத்து ராணி மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அம்மண்டபத்தருகே அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த செருத்துணை நாயனார் அரசியாரின் செயலைக் கவனித்துச் சினங்கொண்டார். அரசியாயிற்றே என்றுகூடப் பார்க்காமல் அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காக பட்டத்துப் பெருந்தேவியாரின் கார்குழலைப் பற்றி இழுத்துக் கீழே தள்ளினார். வாளால் மூக்கை சீவிவிட்டார். அங்கு வந்த அரசரிடம் அஞ்சாமல் நடந்தவற்றைப் பற்றி உரைத்து தமது செயலின் திறத்தினை விளக்கினார். ஆண்டவன் மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலைவணங்கினான். ஆண்டவர் அடியார்களின் பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும், அடியார்க்கும் அருள் செய்தார். இவ்வாறு வால்மீகிநாதரின் தூய திருவடிகளுக்கு இடையறாது திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த செருத்துணை நாயனார் எம்பெருமானின் திருவடி நீழலில் ஒன்றினார்.
குருபூஜை: செருத்துணையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
மன்னவனாம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்.


ஆவணி18 (செப்டம்பர்3)
பிற்பகல் 3.59   வரை திரயோதசி . பின்னர் சதுர்த்தசி. ஆயில்யம்.
சிறப்பு: மாதசிவராத்திரி, அதிபத்தநாயனார், புகழ்த்துணைநாயனார் குருபூஜை
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

இன்றைய சுலோகம் :
ஓம் சர்ப்பராஜாய  வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆஸ்லேஷ  பிரசோதயாத்.


புகழ்த்துணைநாயனார்

செருவல்லிப்புத்தூர் என்னும் தலத்திலே தோன்றியவர் தான் புகழ்த்துணையார் என்னும் சிவத்தொண்டர். இவர் செருவல்லிப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதி சிவாகம முறைப்படி வழிபட்டு வந்தார். ஒருமுறை நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட மக்கள் கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் எங்கே? என்று தேடித் தேடி அலைந்தனர். ஆனால், ஈசனடியில் நேசம் வைத்த புகழ்த்துணையார் மட்டும், பஞ்சத்தைப் பெரிதாக எண்ணாமல், எம்பெருமானை எப்பொழுதும் போல் பூசித்து வரலானார். ஒருநாள் இவ்வடியார் சிவலிங்கத்துக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகையில் உடல் தள்ளாமையினால் குடத்தைத் தவறவிட்டார். சிவலிங்கத்தின் மீது விழுந்தார். சிவலிங்கத்தின் மீது நாயனார் தலை மோதியதால் வலி தாங்காமல் மயக்கமுற்றார். எம்பெருமான் இவரது மயக்க நிலையை உறக்க நிலையாக்கினார். எம்பெருமான் நாயனாரது கனவிலே எழுந்தருளினார். பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் துறந்து சென்றபோதும் நீ மட்டும் எம்மையே அணைந்து எமக்காக வழிபட்டு பணியாற்றியமைக்காக யாம் உமக்கு பஞ்சம் நீங்கும்வரை எமது பீடத்தில் உமக்காகப் படிக்காசு ஒன்றை வைத்து  அருள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார் அரனார். துயிலெழுந்த தொண்டர் பீடத்திலிருந்த பொற்காசு கண்டு சிந்தை மகிழ்ந்து, சங்கரரின் சேவடியைப் பணிந்தார். முன்போல் இறைவனுக்குத் திருத்தொண்டு புரியலானார். பஞ்சம் வந்த காலத்தும் பக்தியில் நின்றும் சற்றும் வழுவாமல் வாழ்ந்த நாயனார், பல்லாண்டு காலம் பூவுலகில் வாழ்ந்து பகவானின் திருவடியைச் சேர்ந்தார். 
குருபூஜை: புகழ்த்துணையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
பொன்னடிக்கே மனம் வைத்த புகழ் துணைக்கும் அடியேன்.

அதிபத்தநாயனார்

  சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற நாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் நுழைப்பாடி என்ற இடம் அமைந்திருந்தது.இந்நகரில் வலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன் வியாபாரம் செய்து வந்ததோடு சங்கு, பவழம் போன்ற பொருள்களையும் விற்பனை செய்து வந்தனர்.ஆழ்கடலுள் சென்று மீன் பிடித்ததுவரும் அதிபத்தர் முதல் மீனை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவதைத் தலைசிறந்த இறை நியதியாகக் கொண்டிருந்தார்.எல்லையில்லாப் பக்தி காரணமாகத்தான் அதிபத்த நாயனார் இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்தார்.இவருடைய அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் இவரது புகழை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். முன்பெல்லாம் ஏராளமான மீன் பிடித்த நாயனாருக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு தான் வலை வீசிய போதும் ஒரே ஒரு மீனுக்கு மேல் கிடைப்பதில்லை. அந்த மீனையும் இறைவனுக்கு என்றே கடலுக்குள் வீசி விட்டு வெறுங்கையோடு வீட்டிற்குத் திரும்புவார்.  இதனால் இவரது வியாபாரம் தடைப்பட்டது. இதுகாறும் சேர்த்து வைத்திருந்த செல்வம் சிறுகச் சிறுகக் குறையத் தொடங்கியது.ஒருநாள் அதிபத்த நாயனார் வலை வீசிய போது அவரது வலையில் விசித்திரமான ஒரு மீன் கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அபபொன் மீன் நவமணி இழைத்த செதில்களைப் பெற்றிருந்தது. வலைஞர்கள் அதிபத்தரிடம் இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள். அதிபத்தர் அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும் செவிசாய்க்கவில்லை.எம்பெருமானுக்கு அளிக்கப் பொன் மீன் கிடைத்ததே என்ற மட்டில்லா மகிழ்ச்சியோடு இறைவனை நினைத்தவாறு அப்பொன் மீனைக் கடலிலே தூக்கி எறிந்தார்.அதிபத்தரது பக்தியின் திறத்தினைக் கண்டு அனைவரும் வியந்து நின்றனர். வானத்திலே பேரொளி பிறந்தது.இறைவன் உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார் எம்பெருமான். குருபூஜை: அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
கடல் நாகை அதிபத்தர்க்கு அடியேன்.


ஆவணி19 (செப்டம்பர்4)
மாலை 5.11 வரை சதுர்த்தசி .  காலை     6.19 க்கு பிறகு மகம் .
சிறப்பு: இளையன்குடிமாறர் குருபூஜை
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
இன்றைய சுலோகம் :
ஓம் மஹா அனகாய  வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மக  பிரசோதயாத்.

இளையன்குடிமாறர்
இளையான்குடி என்னும் நந்நகரம் இயற்கை வளத்தோடு, இறைவனின் அருள் வளமும் பரிபூரணமாக நிறையப் பெற்றிருந்தது. இந்நகரில் வேளாளர் மரபிலே உதித்தவர்தான் மாறனார். இளையான்குடியில் பிறந்த காரணத்தால் இளையாங்குடி மாறனார் என்று அழைக்கப் பெற்றார். இவர், பெருத்த வயல் வளம் உடையவராய் விளங்கினார். எந்நேரமும் எம்பெருமானின் நமச்சிவாய மந்திரத்தையே நினைத்துக் கொண்டிருப்பார் இளையான்குடி மாறனார். மாறனாரும், அவர் மனைவியாரும் வள்ளுவர், கூறும் விருந்தோம்பல் அறத்தை நன்கு உணர்ந்து, வாழ்ந்து வந்தனர். அடியார் தம் வீடு நோக்கி வரும் அன்பர்களை இன்முகங்காட்டி இன்சொல் பேசி வரவேற்பர். அடியார்களைக் கோலமிட்ட பலகையில் அமரச் செய்து, பாதபூஜை செய்து வணங்குவர். அடியார்களுக்கு அறுசுவை அமுதூட்டி உளம் மகிழ்வதையே தங்களது வாழ்க்கை பணியாகக் கொண்டிருந்தனர். இவர்கள் இல்லத்தில் இலக்குமி தேவி நிரந்தரமாய்க் குடியிருந்தாள். மாறனாரின் உயர்ந்த தன்மையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவனார். மாறனார், வளம் கொழிக்கும் காலத்து மட்டுமின்றி வறுமை வாட்டும் காலத்தும் அடியாரைப் போற்றி பேணும் உணர் நோக்குடையார் என்பதை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி, ஒரு சமயம் அவ்வள்ளலார்க்கு வறுமையை உண்டாக்கினார் எம்பெருமான் !

ஆவணி20 (செப்டம்பர்5)
அமாவாசை 5.57 வரை.  காலை 7.54க்குப் பிறகு பூரம்
சிறப்பு:
அமாவாசை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல். தக்ஷினாமூர்த்தி , ராகவேந்திரர் மற்றும் ஷீரடி சாயி பாபா போன்ற குருமார்கள் வழிபாடு .
இன்றைய சுலோகம் :
ஓம்  அரியம்னாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வ பால்குனி  பிரசோதயாத்.


ஆவணி21 (செப்டம்பர்6)
பிரதமை மாலை 6.12 வரை.  காலை 9.01   வரைபூரம். பிறகு உத்திரம் .
சிறப்பு:
மறைஞானசம்பந்தர் குருபூஜை
வழிபாடு: அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

இன்றைய சுலோகம் :
ஓம் மஹா பகாயை  வித்மஹே
மஹா ஸ்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்திர பால்குனி  பிரசோதயாத்.

மறைஞானசம்பந்தர்
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரை சமயக்குரவர் நால்வர் என அழைக்கப்படுவார்கள். அதேபோல் சந்தானக்குரவர்கள் என அழைக்கப்படுபவர்கள் மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர்.

மெய்கண்ட (உண்மை) சாத்திரங்கள் என்று போற்றப்படும், சைவசித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம்  தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இதை எழுதியவர் மெய்கண்டார். இவரைச் சார்ந்தே சந்தான குரவர் என்னும் சைவ மரபு தோன்றியது. மெய்கண்டாரின் மாணவர் அருணந்தி சிவாச்சாரியார். அவரது மாணவர் மறைஞானசம்பந்தர். வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் (கடலூர் மாவட்டம்) ஆவணி உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த இவர், அருணந்தி சிவாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றார். சிவதர்மம் என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தை தமிழில் மொழி பெயர்த்தார்.  இவருடைய வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு. ஒருமுறை சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றிய உமாபதி சிவாச்சாரியார் என்பவர் பூஜைகளை முடித்துக் கொண்டு, மேளதாளத்துடன் வீட்டுக்கு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். (அக்காலத்தில், கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை பல்லக்கில் கொண்டு சென்று வீட்டில் விடுவதும், பகலாக இருந்தாலும் தீவட்டி பிடித்துச் செல்வதும் வழக்கம்)  உச்சிவேளை... வெயில் நன்கு காய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பட்டப்பகல் நேரத்தில், பல்லக்கின் முன்னே ஒருவன் தீவட்டி பிடித்துச் சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார் மறைஞானசம்பந்தர். உமாபதியின் பல்லக்கையும், முன்னே தீவட்டியும் செல்வதைக் கண்ட அவர், பட்ட மரத்தில் பகல்குருடு போகுது பார் என்று அவருடைய காதில் படும்படி உரக்க சத்தமிட்டார். உமாபதி சிவாச்சாரியாரின் காதுகளில் இது கேட்டது. கற்பூரத்தில் பற்றிய நெருப்பு எப்படி கொழுந்து விட்டு எரியுமோ, அதுபோல அவரது மனதில், இந்த வார்த்தைகள் ஞானக்னியாக பற்றிக் கொண்டது.

சிவஜோதி அவருள் தனலாய் எழுந்தது. பல்லக்கிலிருந்து கீழே குதித்தார். மறைஞான சம்பந்தரிடம் ஓடினார், என்னை சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள், என்று அவரது திருவடிகளில் பணிந்தார். மறைஞானசம்பந்தர், அவரிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. திண்ணையில் இருந்து எழுந்தார். அப்படியே நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவமும் விடுவதாக இல்லை. அவரைப் பின்தொடர்ந்தார். மறைஞானசம்பந்தர் ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீட்டில் இருந்தவர்கள், காய்ச்சிய கூழை அவரது கைகளில் பிச்சையாக வார்த்தனர். சிவபிரசாதம் என்று சொல்லிக் கொண்டே மறைஞானசம்பந்தர் அதை அண்ணாந்து குடித்தார். அப்போது அவரது கையிடுக்கு வழியாக கூழ் ஒழுகத் தொடங்கியது. குருவாக ஏற்றுக் கொண்ட உமாபதி, சிந்திய கூழை குரு பிரசாதம் என்று சொல்லிக் குடித்தார். அதுமுதல் உமாபதிசிவாச்சாரியார், மறைஞானசம்பந்தரின் சீடரானார். உமாபதி சிவாச்சாரியாரோடு சந்தானக்குரவர் என்னும் மரபு முற்றுப்பெற்றது. சிந்தாந்த அட்டகம் என்னும் எட்டு நூல்களை எழுதினார். இதில் குருவின் மீது கொண்ட ஈடுபாட்டால் எழுதிய நூல் நெஞ்சுவிடு தூது என்பதாகும். சரி...உமாபதி சிவாச்சாரியாருக்கு ஞானத்தை ஏற்படுத்திய பட்டமரத்தில் பகல் குருடு போகுது பார் என்ற சொற்றொடரின் சூட்சுமம் தெரிய வேண்டாமா!பட்டமரத்தின் கட்டைகளால் செய்யப்பட்டது பல்லக்கு. அந்தப் பல்லக்கில் சென்றவர் <உமாபதி. பகலில் தீவட்டி ஏந்திச் சென்றதால், அவர் குருடாகிறார். அதாவது, பல்லக்கு, பரிவாரம் ஆகிய வசதிகளெல்லாம் தற்காலிகமானவை. இவை இறைவனை அடைவதற்குரிய சாதனங்கள் அல்ல. அதாவது, இறைவன் அருகில் இருந்து பூஜை செய்தால் மட்டும் ஆண்டவனை அறிய முடியாது. நிஜமான பக்தி இருந்தால், இறைவனை பாமரன் கூட அடைய முடியும் என்பதே இதன் சூட்சுமம்.


ஆவணி22 (செப்டம்பர் 7)
துவிதியை மாலை 5.56 வரை . காலை   9.37 வரை உத்திரம். பிறகு ஹஸ்தம்.
சிறப்பு:
சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

இன்றைய சுலோகம் :
ஓம் பிரயச்சதாயை  வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா  பிரசோதயாத்.

ஆவணி23 (செப்டம்பர்8)
திரிதியை மாலை 5.11  வரை.  ஹஸ்தம் காலை 9.44  வரை. பிறகு சித்திரை.
சிறப்பு:
ஆவணி நான்காம் ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தநாள், சுவாமி சிவானந்தர் பிறந்தநாள்.
இன்றைய சுலோகம் :
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
பிரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா  பிரசோதயாத்.

பூஜ்யஸ்ரீ  சுவாமி சிவானந்தர் (1887- 1963) ‘இமயஜோதி’ என்று புகழப்படுபவர்; ரிஷிகேஷத்தில் 1936-ல் ‘தெய்வீக வாழ்க்கை சங்கம்’ என்ற ஆன்மிக அமைப்பை நிறுவியவர்.  தமிழகத்தின் பத்தமடையில் பிறந்தவர்;  மகத்தான ஆன்மிக சாதனைகளை  நிகழ்த்தியவர். அவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர். அந்த காலத்திலேயே மருத்துவ படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராக பணிபுரிந்தார். அவர் கைராசியான டாக்டராக திகழ்ந்தார். நிறைய ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில வருடங்களில் ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவ பணியை துறந்து இந்தியா திரும்பி, கடுமையான தவத்திற்கு பிறகு ரிஷிகேஷத்தில் (Rishikesh) Divine Life Society (DLS) என்ற ஆஷ்ரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்கு, தன்னுடைய கருத்துக்களை புத்தகங்கள் வாயிலாகவும், சொற்பொழிவு மற்றும் சுற்றுபயணங்கள் மூலமாகவும் பரப்பினார்.
அந்த இமாலய சோதி, 1964-ம் வருடம் இறைவனோடு இரண்டறக் கலந்தது. இன்றும் DLS, சுவாமிஜி விட்டு சென்ற ஆன்மீக பணிகளை, அவர் காட்டிய வழியில் தொடர்ந்து செய்து வருகிறது. For More details, please visit http://www.sivanandaonline.org/

வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
visit my other blogs:
www.shivsaitours.blogspot.in
www.chennaisidhargal.blogspot.in
www.chennaishivatemples.blogspot.in
www.songsbyshanks.blogspot.in
www.pondysidhargal.blogspot.in

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God




Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪