Tuesday, 16 September 2014

புரட்டாசி மாதம்

ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.

மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது நாளை மறுநாளில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர்.

இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர்.

இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் அக்-4) மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம்.

முடியாதவர் ஒரு நாள் மஹாலயம் செய்து மற்ற நாள்களில் தர்ப்பணம் (எள்ளுத் தண்ணீர் விடுதல்) செய்யலாம். ஆவணியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய நாம், புரட்டாசியிலும் விநாயகர் பூஜையைத் தொடர்வது சிறப்பான பலனைத் தரும். ஏனெனில், புரட்டாசி கன்னி மாதமாக இருக்கிறது.

தென்மேற்கு திசையை, "கன்னி மூலை' என்பர். இதனால் தான், கோவில்களில் இந்த திசையில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். ஏதாவது வேண்டுதல் வைத்து, இந்த புரட்டாசி மாதம் முழுவதும் கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், எண்ணியது ஈடேறும். நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் செய்யப்படும்.

அதில், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒருநாள். (இவ்வாண்டில் அக்-3). அன்று மாலை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும். இம்மாதத்து சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் (செப்.21, 28, அக்.6, 13) பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக் டோபர் முதல்வாரம்) கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ்வாண்டு அக்.5, 13) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம்.

தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.

சரஸ்வதி பூஜை:

நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் இருக்கும் போது சரஸ்வதியை எழுந்தருளச் செய்ய வேண்டும். இது தேவியின் அவதார நாள். திருவோண (சிரவண) நட்சத்திரம் உச்சமாகும் நாளில் சரஸ்வதி பூஜை நிறைவு பெறுகிறது. அன்றே விஜயதசமி.

ஆயுத பூஜை:

தொழில் புரிகின்றவர்கள் கொண்டாடுவது ஆயுத பூஜை. இவர்கள் மிகச் சிறிய ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய இயந்திரங்கள் வரை அனைத்தையும் பூவும், பொட்டுமிட்டு வழிபடுகின்றனர். காரணம், செய்யும் தொழிலே தெய்வம். அத் தொழில் எத்தொழிலாயினும் வணக் கத்துக்கும், வழிபாட்டுக்கும் உரியதே.

இந்த அடிப்படைகளை உணர்த்தும் வழிபாடுகளே நவராத்திரியின் போது, முப்பெரும் சக்திகளுக்குள் அடங்கியிருக்கும் ஒன்பது சக்திகளையும் வழிபட வேண்டும். அப்போது ஒரு சக்தியை முதன்மையாகவும், மற்ற எட்டுச் சக்திகளைப் பரிவாரச் சக்திகளாகவும் கருத வேண்டும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாகக் கருதி வழிபடுவது வழக்கம்.

நவராத்திரியின் எட்டாம் நாளை மகாஅஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடு கின்றனர். நவராத்திரி ஒன்பது நாள்களும் வழிபட முடியாதவர்கள் இந்த நாள்களில் வழிபடலாம். நவராத்திரி வழிபாடு முழுக்க முழுக்கப் பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவங்களுடைய பெண்கள் அனைவரும் வழிபாட்டில் பங்கேற்கின்றனர்.

இந்த வழிபாட்டால் கன்னிகள் திருமணப்பலன் பெறுவார்கள். இளைய சுமங்களிகள் பெறுவது மகப்பேற்றுப் பலன். எல்லாச் சுமங்களிகளும் பெறுவது மாங்கல்ய பலன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி- மன அமைதி- அனைத்திலும் மன நிறைவு. எனவே, நவராத்திரியை எல்லாப்பெண்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

தமிழகத்தின் முக்கிய அம்பாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடக்கும். இந்நேரத்தில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைப்பது சிறப்பம்சம். சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடுகின்றனர். இந்நாட்களில், சில அம்பாள் கோவில்களில், "பாரிவேட்டை' எனும் வெற்றித் திருவிழா நடத்தப்படும்.

புரட்டாசி மாத வளர்பிறையில் வரும் தசமியே விஜயதசமி. துர்க்கை, எருமைத் தலையைக் கொண்ட மகிஷா சுரனோடு ஒன்பது இரவுகள் போரிட்டாள். இந்த இரவுகளே நவராத்திரி என்ற பெயரைப் பெற்றன. அவனை வதைத்த பத்தாம் நாள் விஜய தசமி. விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் பத்தாம் நாள்.

ஆணவம் அடியோடு அழிந்த நாள். அறியாமையை அறிவு வென்ற நாளைக் குறிக்கிறது. விஜயதசமி, பல குழந்தைகளின் பள்ளிக் கல்வி இன்றுதான் ஆரம்பமாகும். இன்று தொடங்குகிற அனைத்து நற்காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.

பழைய பெருமைகளும், சிறப்புகளும், சற்றும் குன்றாமல் தசரா பண்டிகை இப்போதும் உயர்வாகவும் பல சிறப்புகளுடனும் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் தசரா மிக கோலாகலமாக நடத்தப்படுகிறது. முருகனுக்கும் இம்மாதத்தில் விழா உண்டு.

திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் சன்னிதி குடைவரையாக உள்ளதால், அவர் முன்புள்ள வேலுக்கே பாலபிஷேகம் செய்யப்படும். இந்த வேல், புரட்டாசி பவுர்ணமியன்று மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அபிஷேகம் நடக்கும். அங்குள்ள காசி விஸ்வநாதரை, முருகப் பெருமான் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.

புதன்கிழமை கிரிவலம் : 

இன்று(புதன்கிழமை) கிரிவலம் செய்பவர்க்கு ஸ்ரீபூத நாராயணப் பெருமாளே ஏதேனும் ஒரு வடிவில் துணை வந்து கிரிவலம் முழுவதும் வழிகாட்டிச் செல்வாராம். இன்றைய கிரிவலத்தால் கலைகளெல்லாம் கசடற கற்கும் திறன் பெறுவார்கள்.

நியாயமான உத்தியோக உயர்வும், தொழில் திறமையும் ஏற்படும். வாராக்கடனும் வசூலாகும் பெண்களுக்குத் தீர்க்க சுமங்கலித்துவமும் சந்தான பாக்கியமும் இந்தப் புதன் கிரிவலத்தால் கிட்டும்.

 திருவேங்கடமுடையான்

வேங்கடேச சுப்ரபாதத்தில் வரும் ஒரு  ஸ்லோகம் இது
ஸ்ரீவைகுண்ட வ்ரக்தாய ஸ்வாமி புஷ்கரணி தடே
ரமயா ரம மாணாய  வேங்கடேசாய மங்களம்
பரமபதத்தில் பரவாசுதேவன் ரூபத்தில் இருந்துகொண்டு பக்தரக்ஷணம் எண்ணும் தன் காரியத்தை நன்கு நிறைவேற்ற இயலாமல் (இந்த  கலியுகத்தில்) எம்பெருமான் திருமலையில்  ஸ்வாமி புஷ்கரிணி தீரத்தில் திருவேங்கடமுடையான் ரூபத்தில் அர்ச்சையாய் எழுந்தருளியிருந்து பக்தரக்ஷணம் எனும் காரியத்தை நன்கு நிறைவேற்றுகிறான். மஹா லக்ஷ்மியும் திருமலையில் தனிக் கோயில் கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமார்பையே தன் கோவிலாகக் அமைத்துக் கொண்டாள் அத்தகைய திருவேங்கடையமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

இவ்வாறு கண்கண்ட தெய்வம், கலியுக வரதன், ஏழுமலை வாசன், ஸ்ரீநிவாசன், நெடியோனாகிய திருவேங்கடவன் திருமலையில் இந்த கலியில் நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளியது புரட்டாசி மாதம் திருவோணத்தன்றுதான். ஆகவே புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம். இதை பெருமாள் மாதம் என்றும் அழைப்பர். அதுவும் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை அவரை வழிபட மிகவும் உகந்தது.

பலர் இந்த மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பர். இன்னும் சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து பெருமாளை வழிபடுவர். பலர் இல்லங்களில் சனிக்கிழமையன்று வேங்கடேச பெருமாளுக்கு மாவிளக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுவர். 

சிறு வயதில் நாங்கள் நெற்றியில் திருமண் தரித்து, சொம்பு கையில் ஏந்தி வீடு வீடாக சென்று “நாராயண மூர்த்திக்கு” என்று  அரிசி பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு வந்து அதில் மாவிளக்கு செய்து பெருமாளுக்கு படைத்து வழிபடுவோம். அன்று அவ்வாறு பிச்சை கேட்டு வருபவர்களுக்கு அரிசி பிச்சையும் போடுவோம்.

பார்த்தசாரதிப் பெருமாள்

நம்முடைய பாவங்களை எல்லாம் பொசுக்கும் திருவேங்கடமாம் ஏழுமலையில்  செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமால், நெடியானான திருவேங்கடவன் "புரட்டாசி மாத திருவோண நாளை" தீர்த்தநாளாகக் கொண்டு ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் கண்டருளுகின்றார். ஆதி காலத்தில் பிரம்மாவே இந்த உற்சவத்தை நடத்தியதாக ஐதீகம். பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும் மலையப்பசுவாமி காலையும் மாலையும் சிறப்பு அலங்காரத்தில்  பல் வேறு வாகன சேவை தந்தருளுகின்றார். இந்த பிரம்மோற்சவத்தின் சிறப்பு ஐந்தாம் நாள் இரவின் கருட சேவையாகும். அன்றைய தினம் மூலவருக்குரிய மகர கண்டி, லக்ஷ்மி ஹாரம், வைர முடி தாங்கி சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் அணிந்து அனுப்பிய மாலையில்  மூலவராகவே மாட வீதீ வலம் வந்து  சேவை சாதிக்கின்றார் மலையப்ப சுவாமி.  

மூலவராக மலையப்பசுவாமி கருட சேவை

புரட்டாசி மாதத்தில் புதன் உச்சம் புதனின் அதி தேவதை பெருமாள் ஆவார். ஆகவே  புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு மிகவும் நன்மை பயக்கும். நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர்.  இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். இவர் பிறந்ததும் புரட்டாசி சனி அன்றுதான்.  அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த  உகந்த நாள்  ஆயிற்று.


புரட்டாசி  விரதத்தை உண்மையான பக்தியுடன் அனுசரித்த ஒரு பக்தரின் அனுபவம் மிகவும் சுவையானது    தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார்.

திருமலைக்கு அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், ஏழு மலையானின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார். ஆனால், இதற்கு பலனாக, “மிக உயர்ந்த செல்வம்…’ வேண்டும் என, அவர் பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். அது என்ன தெரியுமா? பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக  இருந்து சேவை செய்ய வேண்டும் என்பது தான் இந்த கோரிக்கை.



மலையப்ப சுவாமி

இவர் தினமும் மண்பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்கமல். அந்த மண்ணைக் கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார். திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு, ”ஏடுகொண்டலு வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, கோவிந்தா…’ 
ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, கோவிந்தா, கோவிந்தா”,  என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களையே உண்மையான மலர் தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்.



வடுவூர் இராமர் 

அப்போது, திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தார் தொண்டைமான் என்னும் சக்கரவர்த்தி. அவர் பெருமாளின் பக்தர் மட்டுமல்ல பெருமாளின் அருளுக்கு பாத்திரமான ஒருவர்.   ஒருநாள் அவர்  ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றார். பெருமாளுக்கு  அர்ச்சனை செய்வதற்காக  அவர் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தார்.  அவர் அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாகக்  இருந்ததை கவனித்தார். தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டார். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டார்.

மறுநாளும் அவர் திருவேங்கடவனின்  சன்னிதிக்கு வந்த சமயம், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்ததைக் கண்டு  குழம்பிப் போனார்.  அவரது கனவில், சீனிவாசப் பெருமாள் தோன்றினார். “மன்னா… பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்களால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன…’ என்றார்.

மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றானர் மன்னன் . அவர், பெருமாளின் மண் சிலைக்கு மண் பூக்களால் அர்ச்சனை செய்து  கொண்டிருந்ததைக் கண்டார் “எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்துப் பூக்கள் கூட கிடைக்கவில்லையா?’ என்றார் தொண்டைமான் சக்கரவர்த்தி.

அதற்கு அந்த பக்தர் “அரசே… நானோ பரம ஏழை. இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் வாடும். எனவே தான், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்…’ என்றார்.

இதைக் கேட்ட தொண்டைமான் மன்னன்  மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு  செல்வம்  அளித்தார்.  குசேலனைப் போல  ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர். நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார். இதனால் தான், இப்போதும் அவர் நினைவாக  திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

. புரட்டாசி சனிக்கிழமையின் போது பல இல்லங்களில் கருடபத்து சேவிப்பது வழக்கம்.  “கருடன் மீதீல் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே” என்று இந்த கருடப்பத்தில் வருவதால் அன்று.. “ஆதி மூலமே”  என்றழைத்த யானைக்கு கருடன் மீதில் அமர்ந்து வந்த காத்தருளிய கண்ணன் நம்மையும் காத்தருள்வான் என்பது திண்ணம். இதோ கருட பத்து.


ஸ்ரீ:
கருடப்பத்து
ஓம் பூரணனே பதினாறு திங்கள் சேரும் பொருந்தியேய ருக்கன் பதினெட்டுஞ் சேரும் 
காரணனே கருமுகில் பொன்மேனி சேருங் கருணைபெரு மஷ்டாக்ஷரங் கலந்து வாழும் 
வாரணனே லட்சுமியோடெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயா நேயா
ஆரணனே ரகுராமா கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (1)


மந்திரமோ அஷ்டசித்து மெட்டுஞ்சேரும் வாழ் கிரக மொன்பதுமே வந்து சேரும்
கந்தர்வர் கணநாத ராசி வர்க்கம் கலைக்கியான நூல் வேதங் கலந்து வாழும்        
நந்தி முதல் தேவர்களுங் கவனயோகம் நமஸ்கரித் துன்பாதம் நாளும் போற்ற 
ந்தரமாய் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (2)


மூலமுதலோரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுத்து மொழியலாமோ 
சீல முதல் ஓம் அங் உங் மங் றீங் கென்றே சிவனுடைய திருநாமம் நீதானாகும் 
காலமுதல் ஓம் அங் உங் மங் றீங் கென்றே கருணை பெருமிவ்வெழுத்து நீர்தானாகும்
ஆலவிஷங் கையேந்துங் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (3)


நவ்வென்றும் கிலியென்றும் ஓம் சிவாய வென்றும் நமநம சிவசிவ ராரா வென்றும்
சவ்வென்றும் ஓங்காரரீங்காரமாகித் தவமுடைய இவ்வெழுத்தும் நீதானாகும்,
ஒவ்வொன்றும் ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித் துகந்துபோற்ற 
அவ்வென்று ரகுராமா கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (4)

உதிக்கின்ற சிவசொரூப முனக்கேயாகும் ஓம் அவ்வும் உவ்வும் கிலியுமென்றே 
பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில் விட்டே பச்சைமுகில் மேனியனே பனிந்தெனுன்னை                                                     
விதிக்கிசைந்த மெய்ப்பொருளே அரிகோவிந்த விளக்கொளி போல் மெய்தவமே விரும்பித்தாதா அதற்கிசைந்த நடம் புரியுங் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் புரிவாயே. (5)

வேதமுதலாயிருந்த சிங்கரூபம் விளங்குகின்ற விரணியனை வதையே செய்தாய் 
பூதமுதலாம் பிறவும் புண்ணியநேயா புகழ்ந்தவர்க்குத் துணை வருவாய் யசோதைபுத்ரா 
நாதமுதல் வித்துவா யுயிர்க்கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் 
வாதபிரமயாதவன் போல் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே.(6)

முக்கோண
நாற்கோண மொழிந்தைங்கோண முச்சுடரேயறு கோண மெண்கோண மாகும்
ஷட்கோண நாற்பத்து மூன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகலசித்தும்  
இக்கோணம் இது முதலாய் வகாரமட்டும் இறைவனாய்த் தானிருந்துரட்சித்தாலும்           அக்கோண மீதிருந்து கருடன் மீதில் அன்புடனே ஏறிவந்தருள் செய்வாயே. (7)

பச்சை முகில் மேனியனே உனக்கு இந்த பார்தனிலே பத்தவதாரமுண்டு       
மச்யமென்றும் கூர்மமென்றும் வராக மென்றும் வாம(ன) மென்றும் ராமன் என்றும் பவித்யமென்றும் துஷ்டரையடக்க மோகினி வேடங் கொண்டு தோன்றினாயுன் சொரூபமெல்லாம் அறிவாருண்டோ அச்சந்தீர்த்தெனையாளக் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே.(8)

வேதியனாய்த் தோன்றி வந்தாய் மாபலிக்கு விண்ணவர்க்காய் நரசிங்கரூபமானாய் சாதியிலே யாதவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து வந்திருப்பாய் தரணி வாழ்க                  சோதனைகள் பார்த்திடுவோர் துடிப்போர் தம்மை துஷ்டரையும் வதைசெய்து லோகமாள்வாய் ஆதிமுதலோரெழுத்தே நீ கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (9)

மாயவனே ரகுராமா அருகே வாவா வஞ்சனைகள் பறந்தோட நெஞ்சில் வாவா                              காயம் பூ நிறமுடனே கனவில் வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா           நாயகனே யென்னாவிலிருக்க வாவா நாள்தோறு முன்பாதந் துதிக்க வாவா                 ஆயர் குலத்துதித்தவனே கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (10)

முப்புரத்தை யெரித்தவனே இப்போ வாவா முகில் நிறத்தவனே ஜகந்நாதா முன்னே வாவா
எப்பொழுதுந் துதிப்பவர் பங்கில் வாவா ஏழைபங்கிலிருப்பவனே இறங்கி வாவா                            ஒப்பிலா மணி விளக்கே யொளிபோல் வாவா ஓம் நமோ நாராயணாவுகந்து வாவா   
அப்பனே ரகுராமா கருடன் மீதில் அன்புடன் ஏறி வந்தருள் செய்வாயே. (11)

துளசிமணி மார்பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்ப்பொருளே வரத்தைத் தாதா                      களப கஸ்தூரியனே கடாட்சந்தாதா கஞ்சனைமுன் வென்றவனே கருணை தாதா                          பரம் பொருளே சிவஜோதி பாக்கியந் தாதா பக்தி முக்தி சித்தி செய்யவுன் பாதந் தாதா         அளவிலா மெய்ப்பொருளே கருடன் மீதில் அன்புடனே ஏறிவந்தருள் செய்வாயே.(12)



சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம் இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது அன்று “அகல்கில்லேன் இறையும் என்றும் அலர்மேல் மங்கை உறை மார்பனாம் திருவேங்கடவனின் திருப்பாதம் சரண் அடைந்து”,  விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும், நீண்ட ஆயுளும் இறுதியாக வைகுண்டப் பதவியும்  பெறுவர்.

Thursday, 3 July 2014

ஆனித் திருமஞ்சன விழா 04.07.2014 மகாசுவாமிகள் - நீ, மகிழஞ்சேரி நடராஜாவைப் பார்த்திருக்கியோ?

ஆனித் திருமஞ்சன விழா 04.07.2014 மகாசுவாமிகள் - நீ, மகிழஞ்சேரி நடராஜாவைப் பார்த்திருக்கியோ?
 
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா. ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். இன்றைய தினத்தில் தான் நடராஜர் சன்னதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரைத் தரிசிக்க வேண்டும்.
கோயில் என்பது எல்லா கோயிலுக்கும் பொதுப்பெயர் என்றாலும், சிவத்தலங்களில் சிதம்பரம் மட்டுமே கோயில் என்று குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. தில்லைவனம், பெரும்பற்றப்புலியூர், சிதாகாசம், ஞானாகாசம், பொன்னம்பலம், பூலோககைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் போன்ற பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. சிதம்பரம், பழநி, பாபநாசம், குற்றாலம், ஸ்ரீரங்கம்(ன்) போன்ற திருத்தலங்களின் பெயரை குழந்தைகளுக்கு இடும் வழக்கம் உண்டு. அதுபோல சிதம்பரம், பொன்னம்பலம் என்று பெயரிடும் வழக்கமும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.  இங்கு முதல் நாள் முதல் எட்டாம் திருவிழா வரை உற்ஸவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ் கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் வாகனங்களில் எழுந்தருள்வர். ஒன்பதாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் அனைவரும் ஐந்து தேர்களில் பவனி வருவார்கள். நடராஜப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலாவந்த பின்னர் இரவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார். ஆனிஉத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாம சுந்தரியும் ஆனந்த நடனம் செய்தபடியே, ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வர். பெருமாளும், சிவகாமி அம்மனும் மாறி மாறி நடனம் செய்து சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சி அனுக்கிரக தரிசனமாகும். அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில் கடாபிஷேகம் நடைபெறும்.
நடராஜப் பெருமானுக்கு ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம். சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் ஆனித் திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும். அன்று சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும். ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் சிறப்பாக நடக்கும். அதில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.
தேர் வீதியுலா ஆயிரம் கால் மண்டபம் வந்தடைய நடு இரவாகிவிடும். இந்த மண்டபத்திற்கு ராஜசபை என்றும், அரசம்பலம் என்றும் பெயர். இரவு நடராஜரும் சிவகாமியம்மையும் இம்மண்டபத்தில் தங்குவார்கள். மறுநாள் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். அங்கு கடாபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் விடையாற்றி உற்சவம் முடிந்தபின் கொடியிறக்கம் கண்டு விழா இனிதே நிறைவுறும்.
ஆடல் காணீரோ...திருவிளையாடல் காணீரோ: ஆடலரசனான நடராஜப் பெருமான் ஆடிய அற்புதத் தாண்டவங்களில் 108 தாண்டவங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவத்திற்கும் புராண வரலாறு உண்டு. அந்த வகையில் சில திருத்தலங்களில் ஆடிய தாண்டவங்கள் மிகவும் சிறப்பிக்கப்படுகின்றன. திருநெல்வேலியில் தாமிர சபையில் இறைவன் ஆடும் தாண்டவம் படைத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இதனை காளிகா தாண்டவம் என்பர்; முனி தாண்டவம் என்றும் சொல்வர். மதுரை திருப்பத்தூரில் ஆடும் தாண்டவம் கவுரி தாண்டவம் மற்றும் சந்தியா தாண்டவமாகும். இது காத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இருண்ட நள்ளிரவில் சிவபெருமான் ஆடும் சங்கார தாண்டவம் அழித்தல் தொழிலைக் காட்டக்கூடியது. மறைத்தல் தொழிலை திருக்குற்றாலத்தில் சித்திரசபையில் இறைவன் ஆடும் தாண்டவம் ஆனந்த தாண்டவம் என்பர். சிதம்பரத்தில் இறைவன் ஆடும் தாண்டவம் ஆனந்த தாண்டவம். இவை ஐந்து தொழில்களைக் காட்டக் கூடியவை என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் தாண்டவமாடும் முதன்மைச் சபைகள் ஐந்து. பதஞ்சலி, வியாக்ரபாதருக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இது சிதம்பரம் திருத்தலத்தில் நடந்தது - இது பொன்னம்பலம் ஆகும்.
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வந்த பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் வேண்டிக் கொண்டதால், சிவபெருமான் திருமண விருந்திற்கு முன் ஆடிக்காட்டிய நடனம் மதுரை வெள்ளியம் பலத்தில் நடைபெற்றது. இங்கு, ராஜசேகரபாண்டியன் என்னும் மன்னனின் வேண்டுதலுக்கிணங்க சிவபெருமான் கால் மாறி - வலது காலைத் தூக்கி ஆடினார். இதேபோல் திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ள கீழ்வேளூர் திருத்தலத்தில் அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமணக் காட்சியைக் கொடுத்தபோது, அகத்தியரின் வேண்டுதலுக்கு இணங்கி இறைவன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினார். இறைவனின் வலது பாத தரிசனத்தை அகத்தியர் கண்டார். சிவபெருமான் வலக்காலை உடலோடு ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம். இந்த நிகழ்ச்சி திருவாலங்காட்டில் நடந்தது. இத்தலத்தில் ரத்தின சபை அமைந்துள்ளது. வேணுவனமாகிய நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இறைவன் தாமிரசபையில் நடனமாடுகிறார். திரிகூடமலைக்கு வந்து திருமாலும், பிரம்மாவும், தேவர்களும் தவம் செய்ய, அவர்களுக்காக இறைவன் திருக்கூத்து தரிசனம் தந்தார். திரிகூடமலையான திருக்குற்றாலத்தில் உள்ளது சித்திரசபை. இங்கு இறைவன் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் உள்ளது. திருவெண்காடு சுவேதாரண்யர் திருக்கோயிலில் உள்ள நடன சபையை ஆதிசபை என்று போற்றுவர். இங்கு சுவேதகேது என்ற மன்னன் இறைவனை வேண்டியதால் நவதாண்டவங்களை ஆடி மகிழ்வித்தார். இதற்குப் பிறகுதான் இறைவன் சிதம்பரத்தில் ஆடினார் என்று புராணம் கூறுகிறது. திருவாரூரில் திருமாலின் மார்பிலே இருந்த ஈசன் அவர் மூச்சுக்காற்றுக்கு ஏற்ப ஆடிய நடனம் அஜபா நடனம் எனப்படுகிறது. திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்காறாயிலில், நடராஜரின் அம்சமாகிய ஆதிவிடங்கர் குக்குட நடனம் ஆடுகிறார். சண்டைக்குச் செல்லும் கோழியைப் போன்று இடமும் வலமும் சாய்த்துப் பார்த்து முன்னேறி, நிதானித்து, சுழன்று ஆடினார். தேனடையில் வண்டு ஒலித்துக் கொண்டே முன்னும் பின்னும் மேலும் கீழுமாக ஆடுவதைப் போன்று ஆடும் இறைவனின் பிரமர தாண்டவத்தை திருக்குவளையில் தரிசிக்கலாம். திருநள்ளாற்றுத் தலத்தில் பித்தேறியவனைப் போல் மனம் போனபடியெல்லாம் இறைவன் ஆடிய நடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகை வேதாரண்யத்தில் புவனிவிடங்கர் ஆடும் நடனம், அம்சபாத நடனம் எனப்படுகிறது. அன்னப்பறவை அடிமேல் அடியெடுத்து வைத்து அழகாக நடப்பது போன்ற தோற்றமாகும். 
திருவாரூர், திருக்குவளைக்கு வடக்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருவாய்மூரில் நீலவிடங்கர் ஆடும் நடனம் கமல நடனமாகும். இறைவன் காலனை அழித்த பின் ஆடிய காலசம்ஹார தாண்டவத்தை மயிலாடு துறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் தலத்தில் தரிசிக்கலாம். ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில், சித்ரா பவுர்ணமியன்று பரத்வாஜ முனிவருக்காக இறைவன் ஆடிய நடனத்தை சித்திர நடனம் என்று போற்றுவர். ஆடலரசனான நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் உச்சிக் காலத்திலும், ஆனித் திருமஞ்சனம் உத்திர நட்சத்திரத்தில் பிரதோஷ காலத்திலும், ஆவணி மாதம் சதுர்த்தசி திதியன்று சாயரட்சை காலத்திலும், புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் அர்த்த ஜாமத்திலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்தன்று நள்ளிரவிலும், மாசி மாதம் சதுர்த்தசி திதியில் கால சந்தியிலும் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று போற்றுவர். தாண்டவங்கள் பல ஆடிய இறைவனான நடராஜப் பெருமான் சில திருத்தலங்களில் வித்தியாசமான திருக்கோலத்திலும் அருள்புரிகிறார். திருச்சியை அடுத்துள்ள திருவாச்சி என்னும் திருத்தலத்தில் விரிந்த செஞ்சடையின்றி, முயலகனுமின்றி ஒரு சர்ப்பத்தின் மேல் ஆடும் கோலத்தில் உள்ளார். திருச்சிக்கு அருகிலுள்ள வயலூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர் திருமேனி விக்கிரகத்தில் திருவாச்சி இல்லை. திரிசடை ஜடாமுடி இல்லை. கிரீடம் மட்டும் அணிந்துள்ளார். இடது மேல் கையில் அக்னியும், வலது மேல் கையில் உடுக்கையும், வலது கீழ்க்கரம் அபயம் தரும் நிலையிலும், இடது கீழ்க்கரம் வலது பாதத்தைக் காண்பிக்கும் நிலையில் தொங்கவிட்டும் எழுந்தருளியுள்ளார். மேலும் இவரது காலடியில் முயலகன் மிதிபடவில்லை. முயலகன் இல்லாத அற்புதத்திருமேனி என்று போற்றுவர். கால்தூக்கி ஆடாமல் நடனக் கோலத்தில் சற்று நளினமாகக் காட்சி தரும் இத்திருமேனியை சுந்தரத் தாண்டவத் திருமேனி என்றும் உமாநடன வடிவம் என்றும் போற்றுவர்.
சிவாலயங்களில் பஞ்சலோகத் திருமேனியில் காட்சிதரும் நடராஜப் பெருமான், ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் மரகதக் கல் (பச்சைக் கல்) திருவுருவில் எழுந்தருளியுள்ளார். இத்திருமேனிக்கு சந்தனக்கலவை பூசியிருப்பார்கள். நடராஜருக்கு மட்டுமின்றி ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கும் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான பள்ளிகொண்ட ரங்கநாதருக்குத் திருமஞ்சனம் மிகச்சிறப்பாக நடைபெறும். இதனை ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றுவர். இத்திருமஞ்சனத்தின் போது பெருமாளின் திருக் கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெறும். இதை சேவிப்பது மிகவும் விசேஷம். இதனை பெரிய திருமஞ்சனம் என்பர். ஸ்ரீரங்கம் கோயிலின் தென்புறத்தில் ஓடும் காவிரி நதியில் வேத மந்திரங்கள் முழங்க நீர் சேகரிப்பார்கள். தங்கக் குடத்தில் நிறைத்த நீரை யானையின் மீதும்; வெள்ளிக்குடங்களில் நிறைத்த நீரை கோயில் பரிசாரகர்கள் தலையில் சுமந்தும் திருமஞ்சனத்திற்கு எடுத்து வருவார்கள். திருமஞ்சனம் நடைபெற்றதும் பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு இடுவார்கள். திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை இந்த நாளில் தரிசிக்க முடியாமல் திரையிட்டிருப்பார்கள். திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் கோயிலில் பெருமாளுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க பிரசாதத்தை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்தபின் பக்தர்களுக்கு அளிப்பார்கள். ஆனித் திருமஞ்சன அபிஷேகத்தின்போது நடராஜப் பெருமானையும், ரங்கநாதப் பெருமாளையும் தரிசிப்போர் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதில் ஐயமில்லை!
ஆனித் திருமஞ்சனம் காணும் நடராஜர்: ஆனந்த நடனம்: சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களுக்கு நடன தரிசனம் அருள சிவன் இசைந்தார். இதனை அறிந்த இந்திராதிதேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, திரிசகஸ்ர முனிவர்கள், உபமன்யுமுனிவர் என்று அனைவரும் கூடினர். அங்கே பேரொளி ஒன்று தோன்றியதும், தேவதுந்துபி வேகமாக முழங்கியது. நந்தீகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாமசுந்தரியாகவும் காட்சியளித்ததும் சிவசிவ என்று கோஷமெழுப்பி அனைவரும் கரம்குவித்து நின்றனர். நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. அந்த நடன தரிசனத்தை இன்றும் நமக்கு சிதம்பரத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
அங்கப்பிரதட்சணம் செய்த அப்பர்: சிவனடியார்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிதம்பரம் கோயிலின் நான்கு கோபுரவாசல் வழியாக நுழைந்துள்ளனர். கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கில் திருநாவுக்கரசரும், வடக்கில் சுந்தரரும், தெற்கில் திருஞானசம்பந்தரும் வந்ததாகச் சொல்வர். இவர்களில் அப்பர் எனப்பட்ட நாவுக்கரசர், தேரோடும் வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்து நடராஜரை வழிபட்டார். திருநாளைப்போவார் என்னும் நந்தனார், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம், நீலகண்டர், சேந்தனார் போன்ற அடியார்களின் வாழ்க்கையோடும் இக்கோயில் தொடர்புடையது.
நடராஜர் அபிஷேகங்கள்
தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது மார்கழி, காலைச் சந்திக்குச் சமமானது மாசி. உச்சிக்காலத்திற்குச் சித்திரை, மாலைக்காலத்திற்குச் சமமானது ஆனி. இரவுக்கு ஆவணி, அர்த்தயாமத்துக்குப் புரட்டாசி, ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்திலன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் படும்.
தில்லையில் ஐந்து சபைகள்
1. சித்சபை  சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை. இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம், சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள்.
2. கனகசபை  சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.
3. தேவசபை  பேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.
4. நிருத்த சபை  தேர் அம்பலம், நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம்.
5. ராஜசபை  ஆயிரங்கால் மண்டபம், மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.
 
மடவார் விளாகம் நடராஜர்
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாண்டிநாட்டு கோயில்களில் காணப்பெறுவது போல ஒரே கல்லால் செய்யப்பெற்ற நடராஜரின் அற்புதக் கலைப் படைப்பு உள்ளது.

மேலைச் சிதம்பரம்
பேரூர் பட்டீஸ்வரர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளிமையால் இறைவனை குடகத்தில்லை அம்பலவாணன் என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் என வழங்குவதற்கு இந்நிகழ்ச்சியே காரணமாகும்.
மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர். ஆனிமாத உத்திர நட்சத்திர நாளில் இவ்விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முக்கிய சிவாலயங்களில் பத்துநாள் விழா நடக்கும்.  ஒன்பதாம் நாள் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் தேர்களில் வலம் வருவர். பத்தாம் நாள் நடராஜருக்கு திருமஞ்சனம் என்னும் சிறப்பு நீராடல் விழா நடக்கும். அபிஷேகத்துக்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். உச்சிவேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார். அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பாள். பின் மகாதீபாராதனை நடக்கும். அன்று இரவு கொடி இறக்கப்படும்.
உதயத்திற்கு முன்பே: தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், விசேஷ கால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம். நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடக்கும். இதில் இரண்டு அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அவை மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம். இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் செய்து முடிப்பர்.
இதயக்கோயிலில் ஆனந்த நடனம்: வியாக்ரபாதர், பதஞ்சலி இருவரும் சிதம்பரத்தில் ஈசனின் நடனம் கண்டு மகிழ்ந்தனர். நடராஜரின் திருப்பாதங்களில் வேதங்கள் சிலம்பாக ஒலிக்கிறது. வலக்கை டமருகம் இசைக்கிறது. இடக்கை அக்னியைத் தாங்கியிருக்கிறது. அவரின் சிவந்த இதழ்கள் புன்முறுவலைக் காட்டுகின்றது. பால் போல வெண்ணீறு காற்றில் நறுமணம் பரப்புகிறது. செஞ்சடை எட்டுத் திசைகளிலும் விரிந்தாடுகிறது. வலக்கால் அசுரனை மிதித்து நிற்கிறது. இடக்கால் குஞ்சித பாதமாக (தொங்கிய நிலையில்) நமக்கு அருள்செய்கிறது. இதயம் என்னும் கோயிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார். இதை கண்டு தரிசித்தால் வாழ்வில் எப்போதும் நமக்கு ஆனந்தமே.
மூன்று வழிபாடு: சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் வழிபடப்படுகிறார். அருவம் என்பது உருவமற்றநிலை, உருவம் என்பது கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை, அருவுருவம் என்பது உருவமும் அருவமும் கலந்த நிலை. இம் மூன்று நிலைகளும் உள்ள தலமாக சிதம்பரம் உள்ளது. அருவநிலைக்கு சிதம்பர ரகசியமும், உருவநிலைக்கு நடராஜரும், அருவுருவ நிலைக்கு மூலவர் மூலட்டானேஸ்வர் லிங்க வடிவிலும் இங்கு அமைந்துள்ளனர்.

பஞ்ச சபைகள்:
ரத்தின சபை  திருவாலங்காடு
கனகசபை  சிதம்பரம்
ரஜிதசபை  (வெள்ளி சபை)  மதுரை
தாமிரசபை  திருநெல்வேலி
சித்திரசபை  திருக்குற்றாலம்
பஞ்ச தாண்டவ தலங்கள்
ஆனந்த தாண்டவம்  சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம்  திருவாரூர்
சுந்தரத் தாண்டவம்  மதுரை
ஊர்த்துவ தாண்டவம்  அவிநாசி
பிரம்ம தாண்டவம்  திருமுருகன்பூண்டி
காட்டிடை ஆடும் கடவுள்
திருவாலங்காடு  ஆலங்காடு
திருவெண்பாக்கம்  இலந்தைக்காடு
திருவெவ்வூர்  ஈக்காடு
திருப்பாரூர்  மூங்கிற்காடு
திருவிற்கோலம்  தர்ப்பைக்காடு
ஆனந்தத் தாண்டவம்
படைத்தல்  காளிகாதாண்டவம்  திருநெல்வேலி, தாமிரசபை.
காத்தல்  கவுரிதாண்டவம்  திருப்புத்தூர், சிற்சபை.
அழித்தல்  சங்கார தாண்டவம்  நள்ளிரவில்.
மறைத்தல்  திரிபுர தாண்டவம், குற்றாலம், சித்திரசபை
அருளல்  ஊர்த்துவ தாண்டவம்  திருவாலங்காடு, ரத்தினசபை.
ஐந்தொழில்களையும் ஒருங்கே நடத்தும் ஆனந்தத்தாண்டவம் சிதம்பரத்தில்.





மகாசுவாமிகள் முன், கைகட்டி நின்றார் சுந்தரேசன்

“நீ, மகிழஞ்சேரி நடராஜாவைப் பார்த்திருக்கியோ?


புதுடில்லி சுந்தரேசனுக்கு நடராஜப் பெருமானிடம் அளவில்லாத ஈடுபாடு. நடராஜ தத்துவம் அவருடைய அறிவுக்கு விருந்து என்றால், நடராஜர் சிலைகள் அவருடைய கண்களுக்கும் நெஞ்சத்துக்கும் விருந்து.

‘கோனேரிராஜபுரம் நடராஜர் சிலையில் என்ன சிறப்பு? திருவாலங்காட்டு நடராஜர் எப்படிப்பட்டவர்? தில்லை நடராஜத் திருமேனியின் தனித்தன்மை என்ன? உலகிலேயே பெரிய நடராஜர் விக்ரஹம் நெய்வேலியில் தான் இருக்கிறது’ என்பது போன்ற ஏராளமான தகவல்களை அவர் கூறுவார்.

ஆடிக் கொண்டேயிருக்கும் தெய்வத்திடம் ஆராத பக்திகொண்ட சுந்தரேசருக்கு, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும் மகாப்பெரியவாளிடமும் அசைக்க முடியாத பக்தி.

மகாசுவாமிகள் முன், கைகட்டி நின்றார் சுந்தரேசன்

“நீ, மகிழஞ்சேரி நடராஜாவைப் பார்த்திருக்கியோ?
நடராஜரிடம் எனக்கு அந்தரங்கமான ஈடுபாடு என்று நான், பெரியவாளிடம் சொன்னதில்லையே? பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?”

’இல்லை’ என்று சொன்னார், சுந்தரேசன்.

’பனங்குடிக்குப் பக்கத்திலே இருக்கு, மகிழஞ்சேரி, அந்த கிராமத்திலே என்ன விசேஷம் தெரியுமோ? பெருமாள் கோவில்ல நித்யவாசம் பண்ணிண்டிருக்கார், நடராஜர் சிவம்! சிதம்பரத்தைக் காட்டிலும் அற்புதமான விக்ரஹம், போய்ப்பார் பார்த்துட்டு வந்து, என்ன ஸ்பெஷல்னு சொல்லு’

மறுநாளே மகிழஞ்சேரிக்குப் போன சுந்தரேசன், பட்டாசாரியரை அழைத்துக்கொண்டு பெருமாள் கோவிலுக்குப் போனார்.’பெரியவாள் உத்திரவு’ என்ற சொல்லைக் கேட்டதும், சுந்தரேசனை நடராஜரோடு ஐக்கியப்படுத்திவிட்டார் அவர்.

ஒவ்வொரு அங்குலமாக திருவாசி, விரிந்தசடை, உடுக்கு ஏந்திய கை, அனல்பறக்கும் திருக்கரம்,ஆனந்தப் புன்னகை நெளிந்தோடும் அழகு முகம் துடி இடை,தூக்கிய திருவடி, தரையில் பதிந்த பாதம் என்றிவ்வாறு துல்லியமாகப் பார்த்தார் சுந்தரேசன்.’பார்த்துட்டு வந்து என்ன ஸ்பெஷெல்னு சொல்லு என்றல்லவா, உத்தரவு?

பெரியவாளிடம் சொல்லணுமே?

ஓ! அந்த ஊமத்தம்பூ! அதுதான், சிலையின் தலைப்பகுதியில் தலைகீழாகக் கிடக்கிறது? அது நேராக இருப்பது தானே, நியாயம்? முன்னுச்சியைத் தொடுகிறாப் போல் சரிந்து காணப்படுகிறதே? ஏன்?

பத்து அடி தள்ளிநின்று பார்த்தார்,சுந்தரேசன். பின்புறம் சென்று, பின்னழகைக் கண்டு சொக்கிப்போனார். ஆனந்தத் தாண்டவத்தின் மெய்மறந்த நிலையை உணர்த்தும் வகையில் சிலை அமைக்கப்பட்டிருந்தது. ஆகா!

பெரியவாள் எதிரில் சுந்தரேசன்.

‘மகிழஞ்சேரி நடராஜர், மெய்மறந்து தாண்டவம் ஆடுகிறமாதிரி இல்லை?’

‘ஆமாம் தலையில் ஊமத்தம்பூ கூட நழுவி விழுகிறாப் போல, தத்ரூபமாக இருக்கு’

பேஷ்! நன்னா கவனிச்சிருக்கே! நடராஜர், ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் வெவ்வேறு வகையான நடனங்களை ஆடியிருக்கிறார். மகிழஞ்சேரியில், உன்மத்த நடனம் என்ற அபூர்வமான நடனம்?’

கேட்டுக் கொண்டிருந்த அன்பர்கள் மெய்மறந்து போனர்கள். ஆனால், பெரியவாள், மெய் உணர்ந்து, சிவானந்தப் பெருவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்!
Photo: புதுடில்லி சுந்தரேசனுக்கு நடராஜப் பெருமானிடம் அளவில்லாத ஈடுபாடு. நடராஜ தத்துவம் அவருடைய அறிவுக்கு விருந்து என்றால், நடராஜர் சிலைகள் அவருடைய கண்களுக்கும் நெஞ்சத்துக்கும் விருந்து.

‘கோனேரிராஜபுரம் நடராஜர் சிலையில் என்ன சிறப்பு? திருவாலங்காட்டு நடராஜர் எப்படிப்பட்டவர்? தில்லை நடராஜத் திருமேனியின் தனித்தன்மை என்ன? உலகிலேயே பெரிய நடராஜர் விக்ரஹம் நெய்வேலியில் தான் இருக்கிறது’ என்பது போன்ற ஏராளமான தகவல்களை அவர் கூறுவார்.

ஆடிக் கொண்டேயிருக்கும் தெய்வத்திடம் ஆராத பக்திகொண்ட சுந்தரேசருக்கு, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும் மகாப்பெரியவாளிடமும் அசைக்க முடியாத பக்தி. 

மகாசுவாமிகள் முன், கைகட்டி நின்றார் சுந்தரேசன்

“நீ, மகிழஞ்சேரி நடராஜாவைப் பார்த்திருக்கியோ?
நடராஜரிடம் எனக்கு அந்தரங்கமான ஈடுபாடு என்று நான், பெரியவாளிடம் சொன்னதில்லையே? பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?”

’இல்லை’ என்று சொன்னார், சுந்தரேசன்.

’பனங்குடிக்குப் பக்கத்திலே இருக்கு, மகிழஞ்சேரி, அந்த கிராமத்திலே என்ன விசேஷம் தெரியுமோ? பெருமாள் கோவில்ல நித்யவாசம் பண்ணிண்டிருக்கார், நடராஜர் சிவம்! சிதம்பரத்தைக் காட்டிலும் அற்புதமான விக்ரஹம், போய்ப்பார் பார்த்துட்டு வந்து, என்ன ஸ்பெஷல்னு சொல்லு’

மறுநாளே மகிழஞ்சேரிக்குப் போன சுந்தரேசன், பட்டாசாரியரை அழைத்துக்கொண்டு பெருமாள் கோவிலுக்குப் போனார்.’பெரியவாள் உத்திரவு’ என்ற சொல்லைக் கேட்டதும், சுந்தரேசனை நடராஜரோடு ஐக்கியப்படுத்திவிட்டார் அவர்.

ஒவ்வொரு அங்குலமாக திருவாசி, விரிந்தசடை, உடுக்கு ஏந்திய கை, அனல்பறக்கும் திருக்கரம்,ஆனந்தப் புன்னகை நெளிந்தோடும் அழகு முகம் துடி இடை,தூக்கிய திருவடி, தரையில் பதிந்த பாதம் என்றிவ்வாறு துல்லியமாகப் பார்த்தார் சுந்தரேசன்.’பார்த்துட்டு வந்து என்ன ஸ்பெஷெல்னு சொல்லு என்றல்லவா, உத்தரவு?

பெரியவாளிடம் சொல்லணுமே?

ஓ! அந்த ஊமத்தம்பூ! அதுதான், சிலையின் தலைப்பகுதியில் தலைகீழாகக் கிடக்கிறது? அது நேராக இருப்பது தானே, நியாயம்? முன்னுச்சியைத் தொடுகிறாப் போல் சரிந்து காணப்படுகிறதே? ஏன்?
            
பத்து அடி தள்ளிநின்று பார்த்தார்,சுந்தரேசன். பின்புறம் சென்று, பின்னழகைக் கண்டு சொக்கிப்போனார். ஆனந்தத் தாண்டவத்தின் மெய்மறந்த நிலையை உணர்த்தும் வகையில் சிலை அமைக்கப்பட்டிருந்தது. ஆகா!

பெரியவாள் எதிரில் சுந்தரேசன்.

‘மகிழஞ்சேரி நடராஜர், மெய்மறந்து தாண்டவம் ஆடுகிறமாதிரி இல்லை?’

‘ஆமாம் தலையில் ஊமத்தம்பூ கூட நழுவி விழுகிறாப் போல, தத்ரூபமாக இருக்கு’

பேஷ்! நன்னா கவனிச்சிருக்கே! நடராஜர், ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் வெவ்வேறு வகையான நடனங்களை ஆடியிருக்கிறார். மகிழஞ்சேரியில், உன்மத்த நடனம் என்ற அபூர்வமான நடனம்?’
            
கேட்டுக் கொண்டிருந்த அன்பர்கள் மெய்மறந்து போனர்கள். ஆனால், பெரியவாள், மெய் உணர்ந்து, சிவானந்தப் பெருவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்!

Yogitha Jaisankar Akhila Shasthry Venkatesan Sivaraman Ramachandran Skandaprasad Seetharaman Krishnan Soundararajan Suresh Santhanam Kalyanasundaram Ramachandaran


 

Saturday, 28 June 2014

ஏகாதசி விரத மகிமை

ஏகாதசி விரத மகிமை

காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; 


தாய்க்குச் சமமான தெய்வமில்லை; 


காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; 


ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது 


ஆன்றோரின் அருள்வாக்கு.


இந்து தர்ம சாஸ்திரங்கள், புராணங்களில் 

ஏகாதசி விரத மகிமை பற்றி 

சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் ஒன்றும் 

தேய்பிறையில் ஒன்றும் என இரண்டு ஏகாதசிகள் வரும். 

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 

11-ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. 

வளர்பிறை ஏகாதசி, சுக்லபட்ச ஏகாதசி, 

 தேய்பிறை ஏகாதசி,கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப்படுகின்றன

வடமொழியில் ஏகாதசி என்பதை தமிழாக்கம் செய்தால் 

அதன் அர்த்தம் பதினொன்று ஆகும். 

அதாவது பதினோராவது தினம் என்று பொருள்.

கர்ம இந்திரியங்கள் - 

ஞானேந்திரியங்கள் - 

இதனுடன் மனம் ஒன்று கூடினால் - 11 

இந்த பதினொன்றையும் பெருமாளுடன் 

ஐக்கியப்படுத்தி இருப்பதே விரதம்.

ஆக இந்த 11இந்திரியங்களால் 

தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் 

தீவினைகள் எல்லாம் இந்த 11வது திதி நாளில் 

விரதம் இருந்தால்அழிந்து விடுவது உறுதி 

ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்துக்கும் 

ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி "பாபமோஹினி' என்றும்; 


தேய்பிறை ஏகாதசி "காமதா' என்றும் அழைக்கப்படுகிறது.

சித்திரை விரதம் விரும்பிய பேறு உண்டாகும். 

வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி "வருதினி' என்றும்; 


தேய்பிறை ஏகாதசி "மோகினி' என்றும் குறிப்பிடப்படுகிறது.

வைகாசி விரதம் கயிலாய யாத்திரை மேற்கொண்டு 

பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். , 

ஆனி மாத வளர்பிறை ஏகாதசி "அபரா' என்றும்   ,

தேய்பிறை ஏகாதசி  "நிர்ஜலா' என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆனி விரதம்  சொர்க்கம் செல்லும் பாக்கியம்கிடைக்கும். 

ஆடி மாதவளர்பிறை ஏகாதசி "யோகினி' என்றும்   

தேய்பிறை ஏகாதசி "சயன' என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆடி விரதம் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு 

அன்னதானம் தந்த புண்ணியம் கிடைக்கும். 

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி"காமிகை'என்றும் 

தேய்பிறை ஏகாதசி "புத்திரதா' என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆவணி விரதம்  மக்கள் செல்வம் உண்டாகும், 

நோய் நொடிகள் நீங்கும், 

புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி "அஜா' என்றும்  

தேய்பிறைஏகாதசி  "பரிவர்த்தினி' என்றும் குறிப்பிடப்படுகிறது

புரட்டாசி விரதம் நிம்மதி கிட்டும்,  

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "இந்திரா' என்றும்      

தேய்பிறை ஏகாதசி "பராங்குசா' என்றும் குறிப்பிடப்படுகிறது

ஐப்பசி விரதம் சகல விஷயங்கள் கூடிவரும், 

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி "ரமா'என்றும்  

தேய்பிறை ஏகாதசி  "பிரமோதினி' என்றும் குறிப்பிடப்படுகிறது
         
கார்த்திகை விரதம் மகிழ்ச்சியான வாழ்வு தரும். 

மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி' என

சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். 

அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். 

இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலிலிருந்து விழித்தெழும் மாதம். 

ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. 

மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி'எனப்படுகிறது.

தை மாத வளர்பிறை ஏகாதசி "சுபலா' என்றும்    

தேய்பிறை ஏகாதசி "புத்ரதா' என்றும் குறிப்பிடப்படுகிறது
தை விரதம் பித்ருசாபம் நீங்கும்.

மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜெயா'  என்றும்   

தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா'  என்றும் குறிப்பிடப்படுகிறது

மாசி விரதம் பாவங்கள், தோஷங்கள் விலகும், 

பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி "விஜயா'  என்றும் 

தேய்பிறை ஏகாதசி "விமலகி' என்றும் குறிப்பிடப்படுகிறது.

இராமபிரான் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லும்முன், 

விஜயா ஏகாதசி விரதம் அனுஷ்டித்தார் என்பது புராண வரலாறு.

பங்குனி விரதம் தடைகள் நீங்கி வெற்றிகள் குவியும். 

ஏகாதசிகளில் சிறப்பு பெற்றதும், முக்தியை தரவல்லதுமாகிய

 மார்கழி மாத ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என வழங்கப்படுகிறது.

பெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கும் நந்நாள்.

பாற்கடலில் இருந்து பெற்ற அமுதத்தை

மோகினி வடிவெடுத்த விஷ்ணு

தேவர்களுக்கு வழங்கிய நாள் வைகுண்ட  ஏகாதசி.

கண்ணன், அர்ஜுனனுக்கு கீதையை

உபதேசித்த நாள் வைகுண்ட ஏகாதசி.

முரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக


தனது உடலில் இருந்து மோகினியை 


மகாவிஷ்ணு தோற்றுவித்தார். 


முரனை மோகினி சம்ஹரித்த நாளே ஏகாதசி. 


அன்றைய தினம் தன்னை வழிபடுபவர்களுக்கு


வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் அருளினார். 
 
For more details of Ekadasi :

http://www.tirumaladeva.in/2012/04/june-30-2012-devshayani-ekadashi-sayana.html