Thursday, 12 November 2015

ஸ்ரீ கந்தர் கவசங்கள் ஆறு - தேவராய சுவாமிகள்



ஸ்ரீ கந்தர் கவசங்கள் ஆறு - தேவராய சுவாமிகள்

காப்பு: 

குறள் வெண்பா
அமரர் இடர்தீர அமரம் புரிந்த 
குமரன் அடி நெஞ்சே குறி. 

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற் 
பதிப்போர்க்குக் செல்வம் பலித்து கதித்து ஓங்கும் 
நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் 
சஷ்டி கவசந் தனை. 



திருப்பரங்குன்றம் - தெய்வானை மணாளன்    *

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே 
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா 
குறுக்குத்துறையுறை குமரனே அரனே 
இருக்கும் குருபரா ஏரகப்பொருளே 
வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே 
ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ 
ஐயா குமரா அருளே நமோ நமோ 
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ 
பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ 
மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ 
விராலிமலையுறை விமலா நமோ நமோ 
மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ 
சூரசங் காரா துரையே நமோ நமோ 
வீரவேலேந்தும் வேளே நமோ நமோ 
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ 
கண்களீராறுடை கந்தா நமோ நமோ 
கோழிக்கொடியுடைக் கோவே நமோ நமோ 
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ 
சசச சசச ஓம் ரீம் 
ரரர ரரர ரீம்ரீம் 
வவவ வவவ ஆம் ஹோம் 
ணணண ணணண வாம்ஹோம் 
பபப பபப சாம் சூம் 
வவவ வவவ கெளம் ஓம் 
லல லிலி லுலு நாட்டிய அட்சரம் 
கக கக கக கந்தனே வருக 
இக இக இக ஈசனே வருக 
தக தக தக சற்குரு வருக 
பக பக பக பரந்தாமா வருக 
வருக வருகவென் வள்ளலே வருக 
வருக வருக நிஷ்களங்கனே வருக 
தாயென நின்னிருதாள் பணிந்தேன் எனைச் 
சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே 
அல்லும் பகலும் அனுதினமும் என்னை 
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை 
வல்லவிடங்கள் வாராமல் தடுத்து 
நல்ல மனத்துடன் ஞானகுரு உனை 
வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள் 
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும் 
கந்தா கடம்பா கார்த்தி கேயா 
நந்தன் மருகா நாரணி சேயே 
என்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை 
தண்ணளி அளிக்கும் சாமிநாதா 
சிவகிரி கயிலை திருப்பதி வேளூர் 
தவக்கதிர்காமம் சார்திரு வேரகம் 
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர் 
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல் 
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு 
சன்னதி யாய்வளர் சரவண பவனே 
அகத்திய முனிவனுக்(கு) அன்புடன் தமிழைச் 
செகத்தொர் அறியச் செப்பிய கோவே 
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம் 
நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம் 
வித்தாய் நின்ற மெய்ப்பொருளோனே ! 
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே 
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி 
பக்திசெய் தேவர் பயனே போற்றி 
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி 
அத்தன் அரி அயன் அம்பிகை லட்சுமி 
வாணி யுடனே வரைமாக் கலைகளும் 
தானே நானென்று சண்முகமாகத் 
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப் 
பூரண கிருபை புரிபவா போற்றி 
பூதலத்துள்ள புண்ய தீர்த்தங்கள் 
ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில் 
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய் 
பண்ணும் நிஷ்டைகள் பலபல வெல்லாம் 
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம் 
எள்ளினுள் எண்ணெய் போலெழிலுடை உன்னை 
அல்லும் பகலும் ஆசாரத்துடன் 
சல்லாப மாய்உனைத் தானுறச் செய்தால் 
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி 
பல்லா யிரநூல் பகர்ந்தருள்வாயே 
செந்தில்நகர் உறை தெய்வானை வள்ளி 
சந்ததம் மகிழும் தயாபர குகனே ! 
சரணம் சரணம் சரஹணபவ ஓம் 
அரன்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம் 
சரணம் சரணம் சரஹணபவ ஓம் 
சரணம் சரணம் சண்முகா சரணம் 



திருச்செந்தூர்த் தேவசேனாபதி    *

சஷ்டியை நோக்கச் சரஹணபவனார் 
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்; 
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை 
கீதம் பாட கிண்கிணி யாட 
மைய நடஞ்செயும் மயில்வாகனனார் 
கையில் வேலால் எனைக்காக்கவென்று வந்து 
வரவர வேலாயுதனார் வருக 
வருக வருக மயிலோன் வருக 
இந்திரன் முதலா எண்டிசை போற்ற 
மந்திரவடிவேல் வருக வருக 
வாசவன் மருகா வருக வருக 
நேசக் குறமகள் நினைவோன் வருக ! 
ஆறுமுகம் படைத்த ஐயா வருக 
நீறிடும் வேலவன் நித்தம் வருக 
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக 
சரஹணபவனார் சடுதியில் வருக ! 
ரஹண பவச ரரரர ரரர 
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி 
விணபவ சரஹ வீரா நமோநம 
நிபவ சரஹண நிறநிற நிறென 
வசர ஹணப வருக வருக! 
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக 
என்னை ஆளும் இளையோன் கையில் 
பன்னிரண்டாயும் பாசாங் குசமும் ! 
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க 
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக 
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் 
உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும் 
கிலியுங் செளவும் கிளரொளியையும் 
நிலை பெற்றென்முன் நித்தமும் ஒளிரும் 
சண்முகன் றீ£யும் தனியொளி யொவ்வும் 
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக 
ஆறு முகமும் அணிமுடி ஆறும் 
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் 
பண்ணிரு கண்ணும் பவளச் செவ்வாயும் 
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் 
ஈராறு செவியில் இலகுகுண் டலமும் 
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் 
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து 
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் 
முப்புரி நூலும் முத்தணி மார்பும் 
செப்ப ழகுடைய திருவயி றுந்தியும் 
>
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் 
நவரத்னம் பதித்த நற் சீராவும் 
இருதொடை அழகும் இணைமுழந் தாளும் 
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க 
செககண செககண செககண செகண 
மொகமொக மொகமொக மொகமொக மொகென 
நகநக நகநக நகநக நகென 
டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண 
ரரரர ரரரர ரரரர ரரர 
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி 
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு 
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு 
விந்து விந்து மயிலோன் விந்து 
முந்து முந்து முருகவேள் முந்து 
என்றனை யாளும் ஏரகச் செல்வ ! 
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் 
லாலா லாலா லாலா வேசமும் 
லீலா லீலா லீலாவிநோத னென்று 
உன்றிருவடியை உறுதியென் றெண்ணும் 
என்றலை வைத்துன் இணையடி காக்க 
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க 
பன்னிரு விழியால் பாலனைக் காக்க 
அடியேன் வதனம் அழகுவேல் காக்க 
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க 
கதிர்வேல் இரண்டு கண்ணினைக்காக்க 
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க 
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க 
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க 
முப்பத் திருபல் முனைவேல் காக்க 
செப்பிய நாவை செவ்வேல் காக்க 
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க 
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க 
மார்பை இரத்தின வடிவேல் காக்க 
சேரிள முலைமார் திருவேல் காக்க 
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க 
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க 
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க 
பழுபதி னாறும் பருவேல் காக்க 
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க 
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க 
நாணாங்கயிற்றை நல்வேல் காக்க 
ஆண்குறியிரண்டும் அயில்வேல் காக்க 
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க 
வட்டக் குதத்தை வல்வேல் காக்க 
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க 
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க 
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க 
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க 
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க 
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க 
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக 
நாபிக் கமலம் நல்வேல் காக்க 
முப்பால் நாடியை முனைவேல் காக்க 
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க 
அடியேன் வசனம் அசைவுள நேரம் 
கடுகவே வந்து கனகவேல் காக்க 
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க 
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க 
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க 
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க 
காக்க காக்க கனகவேல் காக்க 
நோக்க நோக்க நொடியில் நோக்க 
தாக்க தாக்க தடையறத் தாக்க 
பார்க்க பார்க்க பாவம் பொடிபட 
பில்லி சூனியம் பெரும்பகை அகல 
வல்ல பூதம் வலாட்டிகப்பேய்கள் 
அல்லற்படுத்தும் அடங்காமுனியும் 
பிள்ளைகள் தின்னும் புழக்கடைமுனியும் 
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் 
பெண்களைத் தொடரும் பிரமராக் கருதரும் 
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட 
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் 
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் 
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் 
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் 
தண்டியக்காரரும் சண்டா ளர்களும் 
என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட 
ஆனை அடியினில் அரும்பா வைகளும் 
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் 
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் 
பாவைக ளுடனே பலகலசத்துடன் 
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் 
ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும் 
காசும் பணமும் காவுடன் சோறும் 
ஓதும்அஞ் சனமும் ஒருவழிப் போக்கும் 
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட 
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட 
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட 
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட 
வாய்விட் டலறி மதிகெட் டோட 
படியினில் முட்டப் பாசக் கயிற்றால் 
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு 
கட்டி உருட்டு கால்கை முறியக் 
கட்டு கட்டு கதறிடக் கட்டு 
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட 
செக்குசெக்கு செதில் செதிலாக 
சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு 
குத்து குத்து கூர்வடி வேலால் 
பற்றுபற்று பகலவன் தணலெரி 
தணலெரி தணலெரி தணலதுவாக 
விடுவிடு வேலை வெருண்டது ஓடப் 
புலியும் நரியும் புன்னரி நாயும் 
எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோடத் 
தேளும் பாம்பும் செய்யான் பூரான் 
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் 
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க 
ஒளுப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் 
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் 
சூலையங் சயங்குன்மம் சொக்குச் சிறங்கு 
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி 
பக்கப் பிளவை படர்தொடை வாழை 
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி 
பற்குத்து அரணை பருஅரை ஆப்பும் 
எல்லாப்பிணியும் என்றனைக் கண்டால் 
நில்லாதோட நீயெனக் கருள்வாய் 
ஈரேழ் உலகமும் எனக்குற வாக 
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா 
மண்ணாளரசரும் மகிழ்ந்துற வாகவும் 
உன்னைத் துதிக்க உன்திரு நாமம் 
சரஹணபவனே சைலொளி பவனே 
திரிபுர பவனே திகழொளி பவனே 
பரிபுர பவனே பவமொளி பவனே 
அரிதிரு மருகா அமாராபதியைக் 
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் 
கந்தா குகனே கதிர் வேலவனே 
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை 
இடும்பனை அழித்த இனியவேல் முருகா 
தணிகா சலனே சங்கரன் புதல்வா 
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா 
பழநிப் பதிவாழ் பால குமாரா 
ஆவினன்குடிவாழ் அழகிய வேலா 
செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா 
சமராபுரிவாழ் சண்முகத் தரசே 
காரார் குழலாள் கலைமகள் நன்றாய் 
என் நாஇருக்க யானுனைப் பாட 
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் 
பாடினேன் ஆடினேன் பரவசமாக 
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை 
நேசமுடன் யான் நெற்றியில் அணியப் 
பாசவினைகள் பற்றது நீங்கி 
உன்பதம் பெறவே உன்னருளாக 
அன்புடன் இரக்ஷ¢ அன்னமுஞ் சொன்னமும் 
மெத்தமெத்தாக வேலா யுதனார் 
சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க 
வாழ்கவாழ்க மயிலோன் வாழ்க 
வாழ்கவாழ்க வடிவேல் வாழ்க 
வாழ்கவாழ்க மலைக்குரு வாழ்க 
வாழ்கவாழ்க மலைக்குற மகளுடன் 
வாழ்கவாழ்க வாரணத் துவஜம் 
வாழ்கவாழ்க என் வறுமைகள் நீங்க 
எத்தனைகுறைகள் எத்தனை பிழைகள் 
எத்தனை யடியேன் எத்தனை செயினும் 
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் 
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே 
பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து 
மைந்தனென்மீதுன் மனமகிழ்ந் தருளி 
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய் 
கந்தர் சஷ்டிகவசம் விரும்பிய 
பாலன் தேவராயன் பகர்ந்ததை 
காலையில் மாலையில் கருத்துடன் நாளும் 
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி 
நேசமுடனொரு நினைவதுமாகிக் 
கந்தர் சஷ்டிக்கவசமிதனைச் 
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் 
ஒருநாள் முப்பத்தாறுருக்கொண்டு 
ஓதியே செபித்து உகந்துநீ றணிய 
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் 
திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் 
மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர் 
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் 
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் 
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் 
கந்தர் கைவேலாம் கவசத் தடியை 
வழியாய்க்காண மெய்யாய் விளங்கும் 
விழியாற்காண வெருண்டிடும் பேய்கள் 
பொல்லா தவரைப் பொடிபொடியாக்கும் 
நல்லோர் நினைவில் நடனம் புரியும் 
சர்வ சத்துரு சங்கா ரத்தடி 
அறிந்தெனதுள்ளம் அட்டலட்சு மிகளில் 
வீரலட்சுமிக்கு விருந்துணவாகச் 
சூரபத்மாவைத் துணித்தகை அதனால் 
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த 
குருபரன் பழநிக் குன்றிலி ருக்கும் 
சின்னக் குழந்தை சேவடி போற்றி 
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் 
மேவிய வடிவுறும் வேலவா போற்றி 
தேவர்கள் சேனா பதியே போற்றி 
குறமகள் மனமகிழ்கோவே போற்றி 
திறமிகு திவ்விய தேகா போற்றி 
இடும்பா யுதனே இடும்பா போற்றி 
கடம்பா போற்றி கந்தா போற்றி 
வெட்சி புனையும் வேளே போற்றி 
உயர்கிரி கனகசபைக்கோ ரரசே 
மயில் நடமிடுவோய் மலரடி சரணம் 
சரணம் சரணம் சரஹண பவஓம் 
சரணம் சரணம் சண்முகா சரணம் ! 



திருவாவினன்குடி தெண்டபாணி    *

திருவாவினன்குடி சிறக்கும் முருகா 
குருபரா குமரா குழந்தைவே லாயுதா 
சரவணை சண்முகா சதாசிவன் பாலா 
இரவலர் தயாபரா ஏழைபங் காளா 
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா 
வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா 
இரண்டா யிரம் வெள்ளம் யோகம் படைத்தவா 
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா 
இலட்சத்திருநான்கு நற்றம்பி மாருடன் 
பட்சத்துடனே பராசக்தி வேலதாய் 
வீர வாகு மிகுதள கர்த்தனாய் 
சூர சங்காரா துஷ்ட நிஷ்டூரா 
கயிலாய மேவும் கனக சிம்மாசனா 
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா 
>
அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா 
சுகத்திரு முறுகாற் றுப்படை சொல்லிய 
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக் 
கைக்கீழ் வைக்கும் கனமிசைக் குதவா 
திருவருணகிரி திருப்புகழ் பாட 
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா 
ஆயிரத்தெட்டாம் அருள்சிவ தலத்தில் 
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா 
எண்ணா யிரம் சமண் எதிர்கழு வேற்றி 
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா 
குருவாம் பிரமனைக் கொடும்சிறை வைத்தே 
உருபொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன் 
கருதிமெய் யோகம்சொல்லியது ஒருமுகம் 
அருள்பெறு மயில்மீ(து) அமர்ந்த(து) ஒருமுகம் 
வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம் 
தெள்ளுநான்முகன் போல் சிருட்டிப்ப(து) ஒருமுகம் 
சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம் 
ஆரணம் ஓதும் அருமறை யடியார் 
தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம் 
ஞானமுதல்வருக்கு நற்பிள்ளை பழநி 
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம 
பொருட் செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம 
ஏரகம் தனில்வாழ் இறைவா நமோநம 
கூரகம் ஆவினன்குடியாய் நமோநம 
சர்வ சங்கரிக்குத் தனயா நமோநம 
உறுசோலைமலைமேல் உகந்தாய் நமோநம 
எல்லாக்கிரிக்கும் இறைவா நமோ நம 
சல்லாப மாக சண்முகத்துடனே 
எல்லாத் தலமும் இனிதெழுந்தருளி 
உல்லாசத்துறும் ஓங்கார வடிவே 
மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை 
சாலமுக்கோணத் தந்தமுச் சக்தியை 
வேலாயுதமுடன் விளங்கும் குகனைச் 
சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை 
கைலாச மேருவாகாசத்தில் கண்டு 
பைலாம் பூமியும் பங்கய பார்வதி 
மேலும் பகலும் விண்ணுரு வேத்தி 
நாற்கோணத்தில் நளினமாய் அர்ச்சனை 
கங்கையீசன் கருதிய நீர்புரை 
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை 
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன் 
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி 
வாய் அறுகோணம் மகேசுவரன் மகேசுவரி 
ஐயும் கருநெல்லி வெண்சாரைதன்மேல் 
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன் 
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை 
தந்திர அர்ச்சனை தலைமேல்கொண்டு 
மந்திர மூலத்தில் வாசியைக்கட்டி 
அக்கினி குதிரை ஆகாசத்தேவி 
மிக்கமாய்க் கருநெல்லிவெண்சாரை உண்பவர் 
பாகமாய் ரதமும் பகல்வழியாவர் 
சாகாவகையும் தன்னை அறிந்து 
ஐந்து ஜீவனுடன் ஐயஞ்சு கற்பமும் 
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி 
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி 
அந்திரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச் 
சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை 
மந்திர அர்ச்சனை வாசிவ என்று 
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில் 
ஆறுமுகமாய் அகத்துளே நின்று 
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து 
யோசனை ஐங்கரன் உடன் விளையாடி 
மேலைக்கருநெல்லி வெண்சாரை உண்டு 
வாலைக்குழந்தை வடிவையும் காட்டி 
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி 
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி 
மனத்தில்பிரியா வங்கண மாக 
நினைத்தபடிஎன் நெஞ்சத்திருந்து 
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி 
மதியருள் வேலும் மயிலுடன் வந்து 
நானே நீயெனும் லட்சணத் துடனே 
தேனே என்னுளம் சிவகிரி எனவே 
ஆறா தாரத்து ஆறு முகமும் 
மாறாதிருக்கும் வடிவையும் காட்டி 
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்கத் 
தனதென வந்து தயவுடன் இரங்கிச் 
சங்கொடு சக்கரம் சண்முக தரிசனம் 
எங்கு நினைத்தாலும் என்முன் னே வந்து 
அஷ்டாவ தானம் அறிந்துடன் சொல்லத் 
தட்டாத வாக்கும் சர்வா பரணமும் 
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத் 
துலக்கிய காவியம் சொற்பிரபந்தம் 
எழுத்துச் சொற்பொருள் யாப்பலங்காரம் 
வாழ்த்தும் என் நாவில்வந்தினி திருந்தே 
அமுத வாக்குடன் அடியார்க்கு வாக்கும் 
சமுசார சாரமும் தானே நிசமென 
வச்சிர சரீரம் மந்திர வசீகரம் 
அட்சரம் யாவும் அடியேனுக்குதவி 
வல்லமை யோகம் வசீகர சக்தி 
நல்ல உன் பாதமும் நாடியபொருளும் 
சகலகலை ஞானமும் தானெனக் கருளிச் 
செகதல வசீகரம் திருவருள் செய்து 
வந்த கலிபிணி வல்வினை மாற்றி 
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக் 
கிட்டவேவந்து கிருபை பாலிக்க 
அட்டதுட் டமுடன் அனேக மூர்க்கமாய் 
துட்டதே வதையும் துட்டப் பிசாசும் 
வெட்டுண்ட பேயும் விரிசடை பூதமும் 
வேதாளம் கூளிவிடும்பில்லி வஞ்சனை 
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுங்க 
பதைபதைத்தஞ்சிடப் பாசத்தால் கட்டி 
உதைத்து மிதித்(து) அங்கு உருட்டி நொறுக்கிச் 
சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி 
வேலா யுதத்தால் வீசிப்பருகி 
மழுவிட்டேவி வடவாக்கினி போல் 
தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச் 
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம் 
மதம்பெறும் காளி வல்ல சக்கரம் 
மதியணி சம்பு சதாசிவ சக்கரம் 
பதிகர்ம வீரபத்திரன் சக்கரம் 
திருவைகுண்டம் திருமால் சக்கரம் 
அருள்பெருந் திகிரி அக்கினி சக்கரம் 
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால் 
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும் 
ஏக ரூபமாய் என்முன்னே நின்று 
வாகனத் துடன் என் மனத்தில் இருந்து 
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம் 
இம்பமா கருடணம் மேவும்உச் சாடனம் 
வம்பதாம் பேதான்ம் வலிதரு(ம்) மாரணம் 
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடனம் 
தந்திர மந்திரம் தருமணி அட்சரம் 
உந்தன் விபூதி உடனே செபித்துக் 
கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க 
எந்தன் மனத்துள் ஏதுவேண் டியதும் 
தந்துரட் சித்தருள் தயாபரா சரணம் 
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம் 
சரணம் சரணம் சட்கோண இறைவா 
சரணம் சரணம் சத்துரு சங்காரா 
சரணம் சரணம் சரவணபவ ஓம் 
சரணம் சரணம் சண்முகா சரணம் 




Sunday, 11 October 2015

NAVARATHRI 2015

https://drive.google.com/file/d/0B4OFFbmU7VtPQmllTGg4VnJlZVE/view?ts=5619e810

Wednesday, 2 September 2015

ஆன்மீக உலா

ஆன்மீக உலா  
காபி , டிபன் , மதிய உணவு , மாலை தேநீர் உட்பட 
ஒரு நாள் சுற்றுலாக்கள் 

 
(ஒரு நாள் சுற்றுலாக்கள் அனைத்தும் மாடம்பாக்கம் மற்றும் அசோக் பில்லர் அஞ்சப்பர் ஹோட்டல் வாசலில் இருந்து புறப்படும். தாம்பரம் - அசோக் பில்லர் வரை உள்ள பேருந்து நிலையங்களிலும் pick up செய்யப்படும் )


17.10.2015 (சனி) :  ஸ்ரீ பெரும்புதூர் ,  திருப்புட்குழி , தாமல், திருப்பாற்கடல் ,  பாண்டவ தூத பெருமாள் , வைகுண்ட வாச பெருமாள் உட்பட. ரூ.630/-

25.10.2015 (ஞாயிறு) :  பிரதோஷம் - பஞ்சேஷ்டி , சிறுவாபுரி , ஆண்டார் குப்பம், சின்னக்காவனம், திருப்பாலைவனம் , பழவேற்காடு - காட்டூர். ரூ.630/-

14,15 .11.2015  (சனி, ஞாயிறு) :  புறவார் பனங்காட்டூர் , திருவதிகை, தன்வந்திரி, சயன நரசிம்மர், சீர்காழி சிவத் தலங்கள்  , மாயவரம் துலா (காவேரி) ஸ்நானம் , மாயவரம் சிவத் தலங்கள் , வைதீஸ்வரன் கோவில் உட்பட. உணவு நீங்கலாக. ரூ.999/-

28.11.2015 (சனி) :  கார்த்திகை தீப தரிசனத்துடன் திருஅண்ணாமலை கிரிவலம். ரூ.810/-

12,13 .12.2015 (சனி, ஞாயிறு) : நெய்வேலி - உலகின் மிகப் பெரிய நடராஜார் - ராகவேந்திர மேடம் - ஷீரடி பாபா திருக்கோயில், வடலூர், புவனகிரி (ராகவேந்திரரின் ஜன்ம ஸ்தலம்), சிதம்பரம் - அர்த்த ஜாம பூஜை உட்பட சிதம்பரத்திலுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்கள் தரிசனம். உணவு நீங்கலாக. ரூ.999/-

2016 ஜனவரி 26 - 30  : உடுப்பி , தர்மஸ்தலா , சுப்பிரமன்யா , கொல்லூர், சிருங்கேரி , ஹொரநாடு, கட்டீல் துர்கா , முருடேஷ்வர் , ஆனேகுட்டே, 300 சுயம்பு லிங்க கோட்டா அம்ருதேஸ்வரி உட்பட. உணவு நீங்கலாக. ரூ.5760/- (உடன் முன் பதிவு செய்க)



MONTHLY TOURS

         S H I R D I  by  A I R  (2 days)  :    Rs.9,999/- only!

   Mantralayam, Navabrindavanam, Panchamuki etc. Rs.1,980/-


                                            

MONTHLY TOURS

         S H I R D I  by  A I R  (2 days)  :    Rs.10,000/- only!

 

 

 Mantralayam, Navabrindavanam, Panchamuki etc. Rs.1,980/-
(by train 2 days)

 S H I V S A I    T O U R S
 2228 22 03
98842 43 095
99404 47 437  &   98847 18 324 ( 8 to 10pm only)


 பித்ரு  காரிய  காசி யாத்திரை - திரிவேணி  சங்கமம்  > கயா  > காசி - 3 நாட்கள் > ராமேஸ்வரம் உட்பட. ரூ.7>200/-  

 காசி - ராமேஸ்வர  யாத்திரையை  மேற்கொள்ள உடன் அனுகவும். 

 98840 68 001  , 98840 62 001

ஆன்மீக  செய்திகளுக்கு :

 www.aanmeegaula.blogspot.in ,  www.songsbyshanks.blogspot.in 

www.pondysidhargal.blogspot.in ,  www.chennaisidhargal.blogspot.in , 

   www.chennaishivatemples.blogspot.in


         
              EMAIL : madambakkamshanks@yahoo.com

mail to get aanmeega vishayangal thro' mail...

Friday, 17 July 2015

ஆடி மாத பண்டிகைகள்

தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கு கின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். 


ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது. 

இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும். 

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் இந்த ஆடி மாதம் வெள்ளிக்கிழமையிலேயே துவங்குகிறது.

ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

 
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாத‌ம் எ‌ன்பது அ‌ம்மனு‌க்கு உக‌ந்தது எ‌ன்றாலு‌ம், கு‌றி‌ப்பாக மா‌ரிய‌ம்ம‌ன் வ‌ழிபாடு இ‌ன்னு‌ம் ‌சிற‌ப்பாகு‌ம். ஞா‌யி‌ற்று‌க்‌கிழமைக‌ளி‌ல் மா‌‌ரிய‌ம்மனு‌க்கு கூ‌ழ் ஊ‌ற்‌றி ‌வீடுக‌ளி‌ல் ‌சிற‌ப்பு பூஜைக‌ள் செ‌ய்வா‌ர்க‌ள். 

ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும். 

ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள். 

அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். 

  
ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று. 

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும். 

ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும்.

அதாவது, ஆடி மாதத்தில் தம்பதியர் ஒன்று சேர்ந்து குழந்தை உண்டானால் சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த சமயத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.

எல்லாம் நன்மைக்கே என்று தம்பதிகள் பெருமூச்சு விடுவதும் இந்த ஆடி மாதம்தான்.

ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதி களுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை- பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை  மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத்  தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரை யில் குழந்தை பிறக்கும்; தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக் குத்தான் இவை). இதை இன்னமும் பின்பற்று கின்றனர். இதனால் "ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள். குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும். அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப் படுகிறது.

திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர்மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

ஆடி மாதப் பழமொழிகள் பல. "ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', "ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', "ஆடிக் கூழ் அமிர்தமாகும்.'

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

சேலம் ஏழு பேட்டை களில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம். ஒவ் வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா. இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவா கும். அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத வித மாக செருப்படித் திரு விழா நடக்கும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழாவாகும். உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா. இப்படி பல விழாக்கள் விதம்விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன. 

திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் இதுபோல் செய்வார் கள். அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள் ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.

கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நடுவே மகாலட்சுமி யும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளி படும். பகல் 12.00 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளி படும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம். ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் காய்கறி களால் அலங்காரம் செய்வர். ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார் கள். கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும். அதில் மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து, வரும் பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.

ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுர பைரவியையும், மற்ற தமிழகப் பகுதிகளில் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.

செஞ்சிக் கோட்டையருகேயுள்ள கமலக் கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் பெரிய அளவில் விழா நடைபெறும். அப்போது 10,000 பேருக்கு அன்னதானம் அளிப்பார்கள். அன்று மாலை அம்மன் புற்றுக் கோவிலிலிருந்து  புறப்பட்டு திருக்கோவிலுக்கு எழுந்தரு ளும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை அம்மன் பூங்கரக வடிவில் உலா வருவாள். ஆண்- பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.

அருகேயுள்ள பெரிய சடையம்மன் ஆலயத் திலும் சின்ன சடையம்மன் ஆலயத்திலும் பக்தர்கள் வேல் குத்தியும் எலுமிச்சைப் பழங்களை ஊசியில் குத்தியும் பிரார்த்தனை நிறைவேற்றுவர்.

 ஆடிச் செவ்வாய்

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண் டும். ஆடிச் செவ்வாய் அவ்வையாருக்குச் செய்யும் விரத பூஜையாகும். ஔவை நோன்பு கடைப்பிடிப் பதால் கன்னிப் பெண் களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர் களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பில் லாமல் செய்யும் கொழுக் கட்டைதான் நோன்பின் சிறப்பு பிரசாத மாகும். இதைப் பெண்கள் மட்டும்தான் செய்வார்கள். அன்று இரவு 10.00 மணியள வில் வீட்டில் உள்ள மூத்த வயதான பெண் தலைமையில் அத்தெருவில் உள்ள பெண்கள் அவர் வீட்டில் கூடுவார்கள். அதற்குமுன் ஆண்கள்- சிறு ஆண் பிள்ளை கள் உட்பட வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் பார்க்கவோ, கேட்கவோ, பிரசாதம் சாப்பிடவோ கூடாது.

பின் பூஜை நடைபெறும். ஔவையார் கதையையும் அம்மன் கதையையும் வயதான பெண்மணி கூறுவார். சிறு பெண் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் கலந்து கொண்டு பூஜை முடிப்பார்கள். பின் கொழுக்கட்டைகளை மீதமின்றி சாப்பிட்டு முடித்து, வீட்டைத் தூய்மைப் படுத்திய பின்தான் காலையில் ஆண்கள் அங்கு வர வேண்டும். இதுதான் ஔவை நோன்பு.

இந்த ஔவை வழிபாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளது. முப்பந்தல், தாழக்குடியருகே ஆதிச்ச நல்லூர், குறத்திமலை இங்கெல்லாம் ஔவை ஆலயங்கள் உள்ளன. அதியமானி டம் நெல்லிக்கனி பெற்ற ஔவைதான் இவள். பாரியின் மகள்களான அங்கவை, சங்கவைக்குத் திருமணம் செய்வித்தவள்.

தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.

 ஆடி வெள்ளி

அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, 

லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும். சில வருடங்களில் இது ஆவணியிலும்  அமைந்துவிடும். இவ்வாண்டு ஆவணி முதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறது. பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.

தருமபுர ஆதின தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள். ஒன்பது சிவாச்சாரி யார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.

நவசக்திகள் பராசக்தியின் ஒன்பது சக்தி அம்சங்களாகும். அவை சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்ரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரவுத்திரி, கேட்டை, வாமை என்பவைகளாகும். இதனை தீப்தை, சூட்சுமை, வாமை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை,  வியுக்தை, சர்வதோ முக்தை என்றும் அழைப்பார்கள். 

புதுச்சேரி அருகே வங்கக் கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் முதல் வெள்ளியிலிருந்து கடைசி வெள்ளி வரை எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும், விதம் விதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும். ஐந்தாம் வெள்ளி யன்று தேர்த் திருவிழா நடைபெறும். இதை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆடி மாதம் முழுதும் இவ்வூரில் விழாக்கோலம்தான்.

சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் 

ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்து கின்றனர். இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிகச் சிறப்பாகும். வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் குழுக்களாக 108, 1008 குத்துவிளக்குப் பூஜைகளைச் செய்யலாம். அம்மன் பூஜை செய்யும் இல்லத்தில் செல்வம் சேரும். திருவானைக்காவலில் ஆடி வெள்ளி யன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவி யாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதி யாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.

ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடம்முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும்.  குளித்தபின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.

 ஆடிப் பௌர்ணமி

திருநெல்வேலி காந்திமதி யம்மை ஆடித்தபசு, குரு பூர்ணிமா என்ற குரு பூஜை, ஹயக்ரீவ அவதார தினம் ஆகியவை இந்த நாளில் அமைகின்றன. ஈசன் தன் உடலின் ஒரு பாகத்தை உமைக்குக் கொடுத்து காட்சி அளித்த கோலம் அர்த்தநாரி உருவம். (திருச்செங்கோட்டு மூலவர்). ஈசன் தன் உடலின் ஒரு பாகத்தை விஷ்ணுவுக்குக் கொடுத்து காட்சி தந்த திருக் கோலம் சங்கர நாராயணர் கோலம். (திருநெல்வேலி). ஆடித் தபசு விழா திருநெல் வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் ஒன்று. அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் பொதிகை மலை புன்னை வனத்தில் தவம் புரியக் கூறினார். அம்மையும் ஊசிமுனையில் நின்று தவமியற்ற, இறைவன் ஆடிப் பௌர்ணமி உத்திராட நட்சத்திரத்தில் பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மால் ஒரு பாகனாக காட்சியளித்தார். ஆடி மாதம் இங்கு நடைபெறும் 12 நாள் திருவிழாவில் 11-ஆம் நாள் திருவிழாதான் ஆடித் தபசு.

ஆடிப் பௌர்ணமியன்று நடக்கும் ஆடித் தபசு விழாவில் காலை 9.00 மணிக்கு அம்பாளுக்கு விசேஷ ஆராதனை நடை பெறும். 12.00 மணிக்கு தங்க சப்பரத்தில் அம்பாள் வீதியுலா வந்து தபசு மண்டபத்தில் இறங்குவாள். மாலை 4.00 மணிக்கு சுவாமி சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் தெற்கு ரத வீதி காட்சி மண்டபப் பந்தலுக்கு வருகை தருவார்.

பின் தபசு மண்டபத்தில் இருந்து அம்பாள் காட்சிப் பந்தல் வந்து, பரிவட்ட மாலை மரியாதையுடன் சுவாமியை மூன்று முறை வலம் வருவாள். பின் 6.15 மணிக்குச் சென்று சங்கரநாராயணராகக் காட்சி தருகிறார். பின் அம்பாள், சுவாமி கோவில் சேர்வார்கள். இரவு யானை வாகனத்தில் சங்கர லிங்கராக புறப்பட்டு வருவார். பின் அம்பாள் திருக்கண் மாலை மாற்றிக் கொண்டபின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

இந்த ஆடிப் பௌர்ணமி அன்றுதான் திருச்சி அருகேயுள்ள உறையூர் பஞ்சவர்ணேஸ் வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஐவண்ணங் களைக் காட்டியருளியது. அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர்.

காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.

ஆடிப் பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது. இவர் கல்விக்குரிய கடவுள். இவர் வழிபாடு தொன்மையானது. திருமால் உடலிலிருந்து மதுகைடபர் என்பவர் வியர்வையில் தோன்றினர்.

இந்த அசுரர்கள் பிரம்மனிடமிருந்து வேதங்களை அபகரித்து குதிரை முகத் துடன் பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மா திருமாலிடம் முறையிட, திருமால் குதிரை முகம் கொண்டு அவர்களிடம் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

போரிட்டதால் பரிமுகக் கடவுளின் உக்ரம் தணியவில்லை. அதனால் திருமகள் மடியில் அமர, அவர் உக்ரம் தணிந்து லட்சுமி ஹயக்ரீவரானார்.

இவரின் திருவுருவை புதுவை முத்தியால் பேட்டை ஆலயத்திலும் கடலூர் அருகே திருவஹீந்திரபுரத்திலும் காணலாம். படிக்கும் மாணவர்கள் புத்தகம், பேனா வைத்து வணங்குகின்றனர்.

ஆடியின் சிறப்பு அளவில்லாதது; அனைத்து நலன்களையும் வழங்குவது!


DAILY HOLY SLOKAS 17.07.2015 TO 31.07.2015