Thursday, 17 November 2011

KAALABAIRAVAASHTAMI 18-11-2011

Kalashtami, or Mahakaal Bhairavashtami, is the most auspicious day dedicated to Lord Kaala Bhairava – a manifestation of Lord Shiva. Kal Bhairava is the God of Time – Kal means ‘time’ and ‘Bhairava’ the manifestation of Shiva. Ashtami after Purnima, the eighth day after full moon, is considered the ideal day to propitiate Kala Bhairav. In 2011, Kala Bhairav Ashtami and Kal Bhairav Jayanti is on November 18.
It must be noted that Kalashtami is observed on the eighth day after full moon on all months by Shiva devotees.

Legend has it that it Lord Shiva in the form of Mahakaleshwar chopped off the fifth head of Brahma and performed penance on this day. There are several legends regarding the reason for chopping of the fifth head of Brahma. Once legend has it that the Trimurti – Brahma, Vishnu and Shiva once had an argument over who is the most powerful. During the argument, Brahma uttered a remark which enraged Shiva. Suddenly, he produced Bhairava from his body and ordered to chop the head of Brahma.

This terrified the demigods (Devas) and humans and this form of Shiva is believed to punish sinners and he carries a ‘Danda’ – a rod to punish.

The most popular Bhairava Ashtami is observed on the eighth day during the waning phase of moon in Margashirsha month in traditional Hindi calendar.

Kal Bhairava’s vehicle is a black dog and in some places dogs are fed on the day.

Shiva devotees take morning bath and perform pujas. Special pujas are also offered to dead ancestors in the morning. Staunch devotees keep vigil at night and narrate stories of Mahakaleshwar.

கால பைரவர் - காசி : ( kaala Bhairavar )

காலனின் பயத்தைப் போக்குபவர், எமனின் பயத்திலிருந்து நம்மைக் காப்பவர் - காலபைரவர் ஆவார். இவரும் பரமேஸ்வரனின் அம்சமே எனக்கூறும் வரலாறும் உண்டு அதாவது  பிரமனின் உச்சியில் உள்ள சிரம் கொய்த பொழுது பிரமனின் கபாலம் பிரம்மஹத்தியாக பைரவரின் கரத்தைப் பற்றிக்கொண்டது, கூடவே பசி, தாகமும் பற்றிக்கொண்டது. உண்ணவும் முடியாமல், பசியைத் தாஙகவும் முடியாமல் பல ஷேத்திரங்கள் சுற்றித் திரிந்த பைரவர் கடைசியில் காசி வந்தபோது  அன்னபூரணி இட்ட அன்னப் பிட்சையால் பசி விலகியதோடு பிரமனின் கபாலமும் விலகியது. அன்றுமுதல் காசியிலேயே கால பைரவர் எனும் திருப்பெயரோடு ஷேத்ரபாலகராக, காக்கும் தெய்வமாக விளங்குகிறார் பைரவர்.

காசியில் அனைத்து ஆலயங்களையும் தரிசனம் செய்த பின்னர், இக்கால பைரவரை தரிசித்து அனுமதி பெற்ற பின்னரே பயணிகள் ஊர் திரும்புவது வழக்கம். இங்கே பூசாரிகள் " கால பைரவாஷ்டகம் " கூறி ரட்சையாகக் கறுப்புக் கயிரைக் கட்டி விடுவது வழக்கம்.

ஆந்திராவின் ராமகிரி ( சித்தூர் மாவட்டம் ), சீர்காழி - அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் ( இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.  ), உஜ்ஜயினி, தக்கோலம், காட்மாண்டு ( காவல் பைரவர் ), திருமீயச்சூர் - கொடியனூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் ( இங்கு பைரவர் ஸ்தானத்தில் வீற்றிருப்பவர் எமன். இங்கு இவரருகில் எமதர்மனின் சகோதரன் சனீஸ்வரனும் பைரவரும் வீற்றிருக்கின்றனர். ) ஆகிய இடங்களில் கால பைரவர் வழிபாடு மிக பிரசித்தம்.



பைரவமூர்த்தி திருவுருவ நெறி - ஒன்று : -
  
பெரும் பயங்கரமான தோற்றம் வாய்ந்த உருவம் இது என்பதைப் பெயரே குறிப்பிடுகின்றது. கருணை வடிவான இறைவன் பயங்கரமான தோற்றம் கொண்ட சமயங்களும் இருக்கின்றன. வலிமை மிக்க ஞானமூர்த்தியாக பைரவரை சிருஷ்டித்து உலகைக்காக்கும் பொறுப்பை அளித்தார் ர் சிவனார். எதிரிகளுக்குப் பயத்தையும், தன்னை வேண்டியவர்க்கு அருளையும் தரும் சிவமூர்த்தி இவர்.

பிரமனை ஒறுக்கும் வேளை தோன்றிய உருவமே இது. பிரமன் ஐந்து முகங்களுடன் விளங்கிய காலத்தே பரமன் போன்று தானும் ஒரே தோற்றத்தினன் என்று தன்னை அவருடன் சம நிலையில் வைத்து இறுமாந்தான். பிரமனது அகங்காரத்தை அடக்க பரமன் உக்கிரத் தோற்றங்கொண்டு தன் நகத்தினால் பிரமனின் உச்சியில் உள்ள சிரம் கொய்த பொழுது பிரமன் நான்முகனாயினன். பிரமனின் மண்டையோட்டை ஏந்தி நிற்கும் இவருக்கு " கபாலி " எனும் சிறப்புப் பெயரும் உண்டு.

Kaala Bhairavar

பைரவமூர்த்தி திருவுருவ நெறி - இரண்டு : -

இறைவன்,பிரமனிடம் கோபம் கொண்ட பொழுது அவன் தலையினைக் கொய்யும் வண்ணம் பைரவரைப் பணித்ததான வரலாறும் உண்டு. சிவனின் ஆதி அந்தம் காண முடியாத பிரம்மா, தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி  திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாகத் தாழம்பூவையும் பொய்யுரைக்க வைத்தார். குறிப்பாக பிரமனின் ஐந்தாம் தலை இப்பொய்யை திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்க சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு செய்தார். " பைரவனே ! பொய்யுரைத்த பிரமனின் தலைகளை அறுத்தெறி "  என உத்தரவிட, உச்சந்தலையை அறுதெறிந்த பைரவர் பின் மற்ற தலைகளையும் அறுக்க முற்பட அங்கு தோன்றிய திருமால்,  " முன்னர் பிரமன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அருளினீர், இப்போது அவனை நீரே நான்முகனாக்கிவிடீர், அனவே அவனை மன்னியுங்கள் ! " என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்புக் கேட்டார்.

வேதம் ஓதுபவருக்கு இனி நீரே அரசன், அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு, யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு " என அருளினார் ஈசன். பைரவரையும், வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுகின்றன.

அடிப்படைத் தோற்றங்கள் :-

பெருந்தொந்தி, உருண்ட கண்கள், இரு கடைவாய்களிலும் கோரப் பற்கள், அகன்ற மூக்குத் துவாரங்கள், கபால மாலை, பாம்பினாலான அணிகலன்கள், யானைத்தோலாடை ஆகியன பைரவமூர்த்தியில் நாம் காணும் சிறந்த அம்சங்கள். ஆடையெதுவுமற்ற நிலையிலேயே இவர் பெரும்பாலும் வடிக்கப்படுவர்.
அறுபத்து நான்கு வேறுபட்ட நிலைகளில் பைரவரை உருவாக்குவார்கள். இவாறு நான்கு வேறுபாடுகளும் பைரவரின் எட்டு அடிப்படைத் தோற்றங்களின் விரிவு. இவ்வெட்டுவகை மூல பைரவர்கள்,



1.அசிதாங்க பைரவர்




2.ருரு பைரவர்





3. சண்ட பைரவர்





4. குரோத பைரவர்


5. உன்மத்த பைரவர்



6. கபால பைரவர்



7. பீஷண பைரவர்

8. சம்ஹார பைரவர்






என்பனவர்களாம்.








விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு :




இத்தகைய ஸ்தோத்திரங்களினால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்தோத்திரங்கள். ஆனால் இவற்றைத் துதிக்கும் முன் கீழ்கண்டவை சரியாக இருந்தால்தான் பூரண பலன் கிட்டும்.
1. இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
2. தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் தொழ வேண்டும்.
3. புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக அவசியம்.
4. தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் நிச்சயம்.
5. மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து  அதன் படி பாராயணம் செய்யவும்.




எட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை.

இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு.  இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது.  ஞாயிறு பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் - திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.

நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில்  மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லதி நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

தீராத் நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும்.

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.

.


1. ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்
தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..          

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

          பல ச்ருதி ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..
2. ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

No comments:

Post a Comment