ஆதிசங்கரர் அருளிய த்வாதச லிங்க ஸ்தோத்திரம்
ஸௌராஷ்ட்ர தேசே வஸுதாவகாரே
ஜ்யோதிர்மயம் சந்த்ர கலாவதம்ஸம்
பக்திப்ராதாய க்ருதாவதாரம்
தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே
மிகவும் புண்ணியம் வாய்ந்ததான ஸௌராஷ்ட்ர தேசத்தில், ஒளிரும் பிறைமதியை சிரசில் தாங்கிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக அவதரித்த சோமநாதரை நான் சரணமடைகிறேன்.
ஸ்ரீசைலச்ருங்கே விவிதப்ரஸங்கே
சேஷாத்ரி ச்ருங்கேபி ஸதாவஸந்தம்
தமர்ஜுதம் மல்லிகா பூர்வதம்
நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும்
பல நல்ல அம்சங்கள் கைவரப்பெற்ற ஸ்ரீ சைலமலையின் உச்சியிலும் சேஷாத்ரி மலையுச்சியிலும் எப்போதும் வாசம் செய்பவரும் இறப்பு, பிறப்பு எனும் இரு நிகழ்வுகளுடன் கூடிய சம்சாரம் எனும் கடலில் தத்தளிக்கும் பக்தர்களுக்கு கரையாக உள்ளவருமான மல்லிகார்ஜுனரை நமஸ்கரிக்கிறேன்.
அவந்திகாயாம் விஹிதாமதாரம்
முக்திப்ரதாய ச ஸஜ்ஜநாநாம்
அகாலம்ருத்யோ பரிரக்ஷணார்த்தம்
வந்தே மஹாகாலமஹம் ஸுரேஸம்
அவந்தி என்னும் முக்தியை அளிக்கக் கூடியதும் அகால மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடியதும் ஆகிய உஜ்ஜயினியில் ஆட்சிபுரிபவரும் தேவர்களின் தலைவருமான மகாகாளேஸ்வரரை மனதாலும் வாக்காலும் வணங்குகிறேன்.
காவேரிகா நர்மதாயோ பவித்ரே
ஸமாகமே ஸஜ்ஜநதாரணாய
ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம்
ஓங்காரமீசம் சிவமேக பீடே
காவேரி (நர்மதையுடன் சேரும் ஒரு ஆறு. தென்னிந்திய காவேரி வேறு), நர்மதை ஆகிய நதிகள் சங்கமிக்கும் தூய்மையான மாந்தாத்ருபுரம் என்னுமிடத்தில் உறைபவரும் பக்தர்களைக் கரையேற்றுபவருமான ஓங்காரேஸ்வரரின் பாதங்களைத் தொழுகிறேன்.
பூர்வாத்தரே பாரவிகாபிதா நே
ஸதாசிவம் தன் கிரிஜாஸமேதம்
ஸுராஸுராராதித பாத பத்மம்
ஸ்ரீவைத்ய நாதம் ஸததம் நமாமி
வடகிழக்கில் பாரவி என்னும் தலத்தில் மலைமகளோடு கூடிய சதாசிவனாக, தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட அழகிய பாதத் தாமரைகளைக் கொண்ட ஸ்ரீ வைத்யநாதரை நமஸ்காரம் செய்கிறேன்.
ஆமர்த ஸம்ஜ்ஞே நகரேச ரம்யே
விபூஷிதாங்கம் விவிதை: க போகை
ஸித் புக்திமுக்தி ப்ரதமீக மேகம்
ஸ்ரீநாகநாதம் சரணம்ப்ரபத்யே
தாருகாவனம் எனும் ஆமர்த தலத்தில் பல்வேறு வகையான நாகங்களை அணிகலன்களாகக் கொண்டு, தர்மத்திற்கு விரோதமல்லாத போகமும் மோட்சமும் தரக்கூடிய ஈசனாக மேனியெங்கும் திருநீறு பூசிக்கொண்டருளும் பரமேஸ்வரனான நாகநாதனை வணங்குகிறேன்.
ஸாநந்தமாநந்தவநே வஸந்தம்
ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம்
வாரணாஸி நாதமநாத நாதம்
ஸ்ரீ விஸ்வநாதம் சரணம் ப்ரபத்யே
ஆனந்தவனம், வாரணாசி எனும் அதியற்புதமான பெயர்களால் வழங்கப்படும் காசித்தலத்தில் பக்தர்களின் பாவங்களை அழிப்பவரும் ஆனந்தத்தை அளிப்பவரும் ஆதரவற்றவர்களுக்கு அபயமளிப்பதையே கடமையாகக் கொண்டவரும் ஆன காசி விஸ்வநாத மூர்த்தியை சரணடைகிறேன்.
ஸ்ரீதாம்ரபர்ணி ஜலராசியோகே
நிப்த்யஸேதும் நிசிபில்வபத்ரை:
ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்ச்சிதம் தம்
ராமேஸ்வராக்யம் ஸததாம் நமாமி
புனிதமான தாமிரபரணி ஆற்றின் நீர் கடலில் சங்கமமாகும் இடத்தில் அணைகட்டி ராமச்சந்திரமூர்த்தியினால் வில்வதளங்களால் அர்ச்சிக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதரை அனவரதமும் நமஸ்காரம் செய்கிறேன்.
ஸிம்ஹாத்ரி பார்ச்வேபி தடே ரமந்தம்
கோதாவரீ பவித்ர தேசே
யந்தர்சனாத் பாதகஜாதநா:
ப்ரஜாய தே த்ரயம்பகமிமீடே
ஸிம்ஹாத்ரி மலையின் தாழ்வறையில் இனிமையாக சஞ்சரிப்பவரும், மிகப் புனிதமான தக்ஷிண கங்கை என்னும் கோதாவரி நதிக்கரையில் இருப்பவரும், எவரைக் கண்ட மாத்திரத்திலேயே பாவங்கள் விலகி ஓடிடுமோ அந்த த்ரயம்பகேஸ்வரரை வணங்குகிறேன்.
ஹிமாத்ரிபார்ச்வேபி தடே ரமந்தம்
ஸம்பூஜ்யமானம் ஸததம்முனீந்த்ரை:
ஸுராஸுரையக்ஷ மஹோரகாத்யை
கேதாரஸம்ஜ்ஞயம் சிவமீச மீடே
ஹிமாச்சலத்தின் தாழ்வறையில் சஞ்சரிப்பதை விரும்பு
பவரும் சிறந்த முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், உரகர்கள் மற்றும் முனிவர்களால் எப்போதும் ஆராதிக்கப்படுபவரும் ஈசன் என்று போற்றப்படுபவருமான கேதாரேஸ்வரரை நமஸ்கரிக்கிறேன்.
ஏலாபுரி ரம்ய சிவாலயேஸ்மிந்
ஸமுல்லஸந்தாம் த்ரிஜகத்வரேண்யம்
வந்தே மஹோதாரத்ர ஸ்வபாவம்
ஸதாசிவம் தம் திஷணேச்வராக்யம்
ஏலாபுரம் எனும் எல்லோராவில் உள்ள அழகிய சிவாலயத்தில் அருளாட்சி புரிந்து வருபவரும் மூன்று உலகில் உள்ளோராலும் போற்றப்படுபவரும், மிக மிக உயர்ந்த உவமை சொல்ல இயலாத குணத்தைக் கொண்டவரும், திஷணேஸ்வரரான சிவபெருமானை வணங்குகிறேன்.
ஏதா நி லிங்கா நி ஸதைவ மர்த்யா
ப்ராத: படந்த: அமல மா நசாஸ்ச
தே புத்ர பௌத்ரைர்ச்ச தநைருதாரை:
ஸத்கீர்த்திபாஜ: ஸுகிநோ பவந்தி
இந்தப் பன்னிரு ஜோதிர் லிங்கங்களின் துதியை தூயமனதுடன் தினமும் காலையில் துதித்தால் தலைமுறை தலைமுறையாக செல்வம், புகழ் போன்றவை விருத்தியாகும். கார்த்திகையன்று இத்துதியை பாராயணம் செய்பவர் வாழ்வு தீபம் போல் பிரகாசிக்கும்
Jyotirlinga sthothram Audio :
http://www.youtube.com/watch?v=a_9JasTsBMU
Click the following link to read Shanmuga Kavasam(and its mahimai) by Pamban Swamigal.
http://www.dheivamurasu.org/shanmuga-kavasam.htm
http://www.youtube.com/watch?v=N0ACRwib-nM
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களை யாராலும் வெல்ல முடியாது.
நிரஞ்சனா
காலையில் எழுபவனை யாராலும் செல்ல முடியாது
என்கிறது சாஸ்திரம். விடியற்காலையில் சேவலும் கோழியும் விழிக்கிறது. அதை
பிரியாணி செய்துவிடுகிறார்களே என்று விதண்டாவாதம் பேசுபவர்களும் உண்டு.
புனிதமான கடலுக்குள்ளே இருக்கும் ஜீவராசிகளுக்கு, சிப்பிக்குள் இருக்கும்
முத்தால் லாபம் இல்லை. அதுபோல்தான் கோழி, சேவல் போன்றவையும். காலையில்
எழுந்தாலும் இறைவனுடைய நாமத்தை அது உச்சரிக்குமா?. அதனால் மனிதன்
விடியற்காலையில் எழுந்து இறைவனுடைய நாமத்தை உச்சரிப்பதும் அந்த நாமத்தை
நினைப்பதுமாக இருக்க வேண்டும். காலை பொழுதில் எழுந்து தெய்வத்தை நினைத்து
வணங்கினால், அவர்களை யாராலும் செல்ல முடியாது.
இரவு பணி செய்பவர்களுக்கு சாஸ்திரம் என்ன சொல்கிறது?
இரவு பணிசெய்பவர்கள் எப்படி
விடியற்காலையில் எழுந்திருக்க முடியும்.? ஆகவே அவர்களுக்கு இந்த அறிவுரை
பொருந்தாது. ஆரோக்கியமான மனநிலைக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க
வேண்டும். அதைவிட குறைவான நேரம் தூங்கினால் மனநல பாதிப்பு ஏற்படுகிறது
என்கிறார்கள் மருத்துவர்கள். இரவு பணி செய்பவர்களுக்கு விடியற்காலை
எழுந்திருக்க வேண்டிய சாஸ்திர கட்டாயம் இல்லை. நிம்மதியாக தூங்குபவர்கள்
“நித்திராதேவி”யின் அருள் பெற்றவர்கள் என்கிறது சாஸ்திரம்.
ஆனால் இதுதான் சாக்கு என்று இரவில் சரியான
நேரத்தில் உறங்குபவர்கள் காலை எட்டு மணிவரை தூங்க கூடாது. பொதுவாக பிரம்ம
முகூர்த்தம் என்கிற நேரமான காலை 3 மணி முதல் 5 மணிக்குள் எழுந்திருக்க
வேண்டும். முடியாதவர்கள் ஆறு மணிக்காவது எழுந்திருக்க வேண்டும். இந்த
நேரத்தில் எழுந்தால் அவர்களின் உடல் உற்சாகம், வலிமை பெரும். கண்களுக்கும்
நல்லது. காலை பொழுது “உஷத்காலம்” என்கிறோம். “உஷத்” என்றால் “உஷஸ்”
என்ற பெண் தேவதை. இவள் ஒரு அதிர்ஷ்ட தேவதை. இவள் எழுந்து பூமியை நோக்கி
வந்த பிறகுதான் சூரியனே தோன்றுகிறார் என்கிறது ரிக் வேதம். இதனால்தான்
பிரம்ம முகூர்த்தத்தில் நாமும் எழுந்து இறைவனுக்கு உகந்த காயத்திரி
மந்திரத்தை உச்சரித்தால், அப்படி மந்திரத்தை உச்சரிப்பவர்களின் வாழ்க்கை,
சூரியனை போன்று பிரகாசமாக இருக்கும். அதிர்ஷ்ட தேவதையின் ஆசி அவர்களுக்கு
கிடைக்கும். அவர்களை யாராலும் வெல்ல முடியாது என்கிறது சாஸ்திரம்.
ஏழையை பணக்காரன் ஆக்கிய மந்திரம்
மன்னர் அக்பரும் பீர்பாலும் நகர்வலம்
சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது ஒருவர் அக்பரிடம், “அய்யா எனக்கு உதவ
முடியுமா.?” என்றார். இதை கேட்ட அக்பர், அவருடைய குடும்ப கஷ்டத்தை கேட்டு,
“தினமும் நான் உனக்கு பணம் தருகிறேன். நீ யாரிடமும் கை ஏந்தாதே” என்றார்.
ஆனால் பீர்பாலுக்கு இது பிடிக்கவில்லை. “அந்த ஏழைக்கு ஒரு நல்ல வேலையை
அரசர் தந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு தினமும் அரசரிடம் யாசகம் கேட்பது
ஒரு மனிதனுக்கு அவமானம் அல்லவா” என்று மனம் வருந்தினார்.
ஒருநாள் பீர்பால் அந்த ஏழையின் வீட்டுக்கு
சென்று, “தினமும் நீ பத்து முறை காயத்திரி மந்திரத்தை உச்சரித்தால், அரசர்
உனக்கு தரும் பணத்தை விட நான் உனக்கு இரண்டு மடங்கு பணம் தருகிறேன். ஆனால்
நீ தினமும் பத்து முறை காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.”
என்றார்.
பீர்பால் தருகிற பணத்துக்காக ஒருநாள் கூட
தவறாமல் காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வந்தான் அந்த ஏழை. பிறகு அதையே
வாடிக்கையாக உச்சரிக்க ஆரம்பித்தான்.
“தினமும் நம்மிடம் யாசகம் பெற ஒரு ஏழை
வருவானே. சில தினமாக அவன் வருவது இல்லையே. என்ன காரணம்?” என்று அறிய
விரும்பிய மன்னர் அக்பர், பீர்பாலை அழைத்து கொண்டு அந்த ஏழையின் வீட்டுக்கு
சென்றார்.
ஏழைக்கு கிடைத்த வாழ்க்கை
தன் வீட்டு திண்ணையில் அரசரிடம் உதவி
பெற்று வந்த அந்த ஏழை அமர்ந்திருந்தான். அந்த நபரை பார்த்தவுடன் மன்னர்
அக்பருக்கே வணங்க வேண்டும் போல் இருந்து. அந்த அளவு அந்த ஏழையின் முகத்தில்
ஒரு தெய்வீகக் கலை தெரிந்தது. அந்த ஏழையை சுற்றி மக்கள் கூட்டமாக
இருந்தார்கள். மக்களுக்கு அந்த ஏழை அருள் சொல்லுவதும் அவர்களுடைய
மனகஷ்டத்தை தீர்க்க நல்ல ஆலோசனைகளை சொல்வதுமாக ஒரு மகானை போல மாறி
இருந்தான் அந்த ஏழை.
இதை கண்ட அக்பர் ஒருவரை அழைத்து, “நீங்கள்
ஏன் அவரிடம் ஆசி பெறுகிறீர்கள்? என்றார். “அவர் சாதாரணமானவர் அல்ல. தெய்வ
பிறவி. அவர் சொல்வது எல்லாம் அப்படியே நடக்கும். அத்துடன் அவர் கைகளால்
திருநீறு வாங்கினால், தீராத வியாதியும் தீரும்.” என்றார்.
இதை கேட்ட அக்பருக்கு ஆச்சரியம். சில
மாதங்களுக்கு முன் நம்மிடம் கையேந்தி யாசகம் கேட்டவனுக்கு, எப்படி இவ்வளவு
சக்தி வந்தது?” என்று ஆச்சரியத்துடன் அந்த நபரிடமே நேரடியாக சென்று
கேட்டார் அக்பர்.
மன்னர் அக்பரையும், பீர்பாலையும் கண்டு மகிழ்ந்த அந்த நபர், தன் சக்தியின் ரகசியத்தை சொன்னார்.
“அரசே இந்த சக்தி எனக்கு வந்ததற்கு காரணம்
அமைச்சர் பீர்பால்தான். அவர் தினமும் என்னை காயத்ரி மந்திரத்தை பத்து முறை
உச்சரிக்க சொன்னார். அப்படி உச்சரித்தால் நீங்கள் எனக்கு கொடுத்த வந்த பண
உதவியை விட, அமைச்சர் பீர்பால் இரண்டு மடங்கு தருகிறேன் என்றார். அதனால்
அன்றுமுதல் கடமைக்காக காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்த நான், பிறகு
பக்தியுடனும் நம்பிக்கையுடனும் மனதிருப்தியுடன் உச்சரிக்க ஆரம்பித்தேன்.
இதன் பயனால் என்னையறியாமல் என் உடலுக்கு புது தேஜசும், அற்புதமான சக்தியும்
உண்டாவதை உணர்ந்தேன். அந்த ஆற்றலைதான் மக்களின் உடல்நல கோளாறு, மன கோளாறு
தீர ஆசி வழங்குகிறேன். மக்களும் பயன் பெறுகிறார்கள். நானும் முன்னேற்றம்
அடைகிறேன்.” என்றார் அந்த நபர்.
அதிகாலை வேலையில் காயத்ரி மந்திரத்தை
உச்சரித்தால் முகம் அழகு பெறும். உடல் நலம் பெறும். குடும்பத்தில்
லஷ்மிவாசம் செய்யும். எடுத்த எல்லா முயற்சியும் வெற்றி பெரும். ஒவ்வொரு
தெய்வத்துக்கும் காயத்ரி மந்திரம் இருக்கிறது. அத்தனையும் சொல்ல நேரம்
இல்லாதவர்கள், இங்கு நான் குறிப்பிட்டு இருக்கும் காயத்ரி மந்திரத்தை
சொல்லலாம்.
பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாமா?
பெண்கள் காயத்ரி மந்திரத்தை சொல்ல கூடாது
என்பார்கள். அப்படியல்ல. காயத்ரி தேவியே பெண்தான். ஆகவே பெண்களும் காயத்ரி
மந்திரத்தை சொல்லலாம். ஆனால் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்பவர்கள்,
குளிர்சியான மோர், குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும். காயத்ரி
மந்திரம் உஷ்ண தன்மை கொண்டது என்கிறது சாஸ்திரம். காயத்ரி மந்திரத்தின்
சிறப்பை உலகுக்கு தெரியப்படுத்தியவர் விஸ்வாமித்திரர்.
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களை
கண்திருஷ்டி நெருங்காது. துஷ்ட சக்திகளை-துஷ்ட எண்ணம் கொண்டு பழகுபவர்களை
பொசிக்கி விடும். காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்கள் நலமும் வளமும் பெற்று
வாழ்வார்கள்.
காயத்ரி மந்திரம்
ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
Bhishma Ekadasi is an auspicious occasion,observed on Shukla Ekadashi of Magh (Jan-Feb) month.It is the birth day of "Shri Vishnu Sahasra Nama Sthothram".This stotra was revealed to Pandavas by Bhishma Pitamaha ,while he was on 'Sharashaiyya' (on the bed of arrows) after the Mahabharatha war. Bhishma had great experiences of life and hence the Pandavas approached Bhishma Pitamaha,to learn from him the higher principles of life and wisdom.Bhishma revealed "Vishnu Sahasranama Stotra" to Pandavas,on Magha Suddha Ekadasi day,when Lord Krishna was present.
Pitamaha exclaimed that Shri.Vishnu is Lord of all Lords and praying Him with all 1000 names is all one can ever do to become more dear to Him which itself leads to salvation.Reciting it regularly or even listening to it is also a great achievement, that empowers one with the strength to overcome all the difficulties and get on to the right path of Salvation.
It is strongly beleived that he who chants "Shri Vshnu Saharanama Stotra" three times a day,regularly,is freed from all worries and gets moksha.Many scholars have written bhashyam on Vishnu saharanamam.which are Sankara bhasyam, and Ramanuja bhashyam while other bhashyam also exists.
On this day,in most of the temples,"Vishnu saharanama stotra" chanting continues for 24 four hours, with archana every hour or two.The Lord Vishnu is the essense of everything. He is panchanga- tithi, vaara, nakshatra, yoga and karana.He is time, space, and causation. He is the one who controls maya.
It is well known fact that, during the end rights of all poojas,only god Visnu is worshipped who gives moksha,which is his decision.We need to be Vishnumay,which is possible only when we get drowned ourself into the ocean of his "Sahasra Nama".One can also continuously listen to the audio CD of "Vishnu Sahasra Nama".
To VARAAHA DWAADASI :
LAKSHMI VARAHA GAYATHRI
Om Bhoovaraahaayei Vidhmahe' Rathneiswareicha DheemahiThanno Devi Pracho Dhayaath
To see full history of Varaha :
http://harekrishnacalendar.com/vaishnava-calendar/varaha-dvadasi-2015/
http://www.youtube.com/watch?v=vW7iD6N7HAM
Today SANI PRADHOSHAM...
VISIT www.pradhosham.com
Om Vethrahastaaya Vidhmahe' Dhanka hastaaya Dheemahi
Thanno Namdlhi Pracho Dhayaath.
Om Bhaaskaraaya Vidhmahe' Mahaajyothischakraaya Dheemahi
Thanno Suryah prachodayath.
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
No comments:
Post a Comment