Click the link :
http://www.shaivam.org/siddhanta/Pradhosham.html
திங்களின் சுதனாம் தேவா
சுகமேலாம் வழங்கும் நேயா
தங்கிடும் ஞானம், விஞ்சை
தமர்களுக் கருளும் கோவே
எங்கிலும் சாந்தம் கொண்டு
ஈடிலா புலவனான
மங்கள புதனாம் தேவன்
மலரடி போற்றி போற்றி!வேதநூல் தர்ம சாஸ்திரம்
மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத்
தனிநாட்டின் இறைவன் ஆகி
சோதியாய் குருவுமாகி
சொர்க்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே நின்தாள்
அடைக்கலம் போற்றி போற்றி
பிருகுவின் சுதனேயானான்
பேரரக்கரின் குருவாய் மண்ணில்
தருகின்ற மழையுமாகி
அதை தடுப்பவள் தானேயாகி
கருவென விளங்கும் சாத்திரம்
கற்றவன் தானுமான
பெரியவன் சுக்ராச்சாரி
பொன்னடி போற்றி போற்றி!
வள்ளலாய் கொடுமை செய்யும்
மன்னாய் எவர்க்கும் செல்வம்
அள்ளியே கொடுப் போனாகி
அனைவரும் துதிக்க நின்று
தெள்ளிய தேவர் மூவர்
தெளிந்திட நடுங்க வைக்கும்
கள்ள மில்சனைச் சரன்
கழல்களே போற்றி போற்றி!
வாகுசேர் நெடுமால் முன்னம்
வானவர்க்கு அமுதம்
ஈயப்போகும் அக்காலை உன்றன்
புனற்பினாற் சிரமே யேற்று
பாகுசேர் மொழியான் பங்கன்
பரன்கையில் மீண்டும்.
பெற்ற ராகுவே உனைத்துதிப்பேன்
ரட்சிப்பாய் ரட்சிப்பாயே.
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
No comments:
Post a Comment