Monday, 6 February 2012

தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும்.


பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன.

சித்தாந்தம். தெய்வம்..

1.) சைவம். சிவன்..

2.) வைணவம். விஸ்ணு..

3.) சாக்தம். சக்தி..

4.) சௌரம். சூரியன்..

5.) கணாபத்தியம். கணபதி..

6.) கௌமாரம். முருகன்..

இவற்றுள் முருகனை முக்கிய தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் உட்பிரிவு கௌமாரம் ஆகும். முருகக் கடவுளின் வழிபாட்டிற்கான விரத, திருவிழா நாட்களில் முக்கியமான ஒன்று தைப்பூசம் ஆகும். விழா என்றால் விழித்திருந்து செய்வது என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும். இந்த நாட்களெல்லாம் சிறப்புமிக்க விழா நாட்களாகும். .

மாதம் நட்சத்திரம். .

1.) தை. பூசம். .

2.) மாசி. மகம்..

3.) பங்குனி. உத்தரம். .

4.) சித்திரை. சித்திரை..

5.) வைகாசி. விசாகம். .

6.) ஆனி. கேட்டை..

7.) ஆடி. உத்திராடம். .

8.) ஆவணி. அவிட்டம்..

9.) புரட்டாசி. பூரட்டாதி. .

10.) ஐப்பசி. அசுவினி..

11.) கார்த்திகை. கார்த்திகை. .

12.) மார்கழி. திருவாதிரை..

இதில் தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவரிற்கு செலுத்தி பூசிப்பது தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும். முருகப்பெருமானிற்கு கடியுண் கடவுள் என்றும் ஒரு பெயர் உள்ளத. புதியதை உண்பவர் என்று இதற்கு பொருளாகும். வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதிற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும் (இவற்றை பலியிடுவதற்கு அல்ல ,அர்ப்பணிப்பதற்கு மட்டும், அதாவது நேர்ந்து கோவிலில் விடுதல் என்பர்.) பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும். முருகனின் அறுபடை வீடுகளில் பழனியிற்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்டு செல்வது வழக்கமாகிவிட்டது..

அறுபடை விடுகளில் பழனியிலே மிகச் சிறப்பாக தைப்பூச விருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.சிவபெருமான் அன்னை உமாதேவியாருடன் கூடி ஞானசபையில் ஆனந்த நடனம் ஆடியதும் தைப்பூசத்திருநாளில்த்தான் தில்லை மூவாயிரவர்க்கும், இரணியவர்மனிற்கும் நடராஜர் தரிசனம் தந்து அருள் பாலித்ததும் தைப்பூசத்திருநாளில்த்தான்.

முருகன் தனக்கு ஞானப்பழம் கிடைக்காததால் தாய், தந்தையுடன் கோபித்துக் கொண்டு சென்று தனித்து நின்ற இடம் தான் பழனி. கையில் தண்டுடன் நின்ற காரணத்தினால் இங்கிருக்கும் மூலவரிற்கு தண்டாயுதபாணி என்று பெயர். (அதாவது தண்டை ஆயுதமாகக் கொண்டவர்) இங்கிருக்கும் மூலவர் விக்கிரகம் நவபாசாணத்தினாலானது. பாசாணம் என்றால் கொடிய விசம் ஆகும். ஒன்பது வகை கொடிய விசப்பொருட்களின் விசத்தன்மையை சில அரிய மூலிகைச்சாறுகளின் மூலம் நீக்கி எந்த நோயையும் நீக்கும் அருமருந்தாக ஆக்கி அதனைக்கொண்டு போகர் என்ற சித்தரினால் செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டதே பழனியிலுள்ள மூலவர் ஆகும். பழனி மூலவரிற்கு அபிசேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தத்தையுண்டால் எந்தப்பெரிய நோயானுலும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். பஞ்சாமிர்தம் பஞ்ச அமிர்தம் அதாவது ஐந்து வகை அமிர்தம் ஆகும். .

இது அமிலத்தன்மையுடையது. அதாவது அரிக்கும் இயல்புடையது. இதன் மூலம் அபிசேகம் செய்யப்படும் போது மூலவரில் இருக்கும் நவபாசாண மருந்து பஞசாமிர்தத்தில்கலக்கிறது. அதனையுண்ணும் போது நோய்கள் குணமாகின்றன. பழனித்திருக்கோவிலின் பிரசாதம் இந்தச் சிறப்பு பஞசாமிர்தமாகும்..

இங்கிருக்கும் முருகன் துறவு நிலையில்யுள்ளவர். போகர் சித்தர் சமாதியானதும் இத்திருத்தலத்திலேயே. .
மலேசியாவில் தைப்பூசம் : : http://murugan.org/temples/batumalai.htm
 
Malaysia Pathumalai (Batu Cave) Sri Murugan Temple Thai Pusam Festival will be live telecast by Vasanth TV on February 7 2012 (Tuesday) from 3.30 pm IST Indian Time (6 pm Malaysia Time)


Live Streaming, webcast, podcast, online stream of the festival can be seen in the official website http://vasanth.tv/livetv.php
 
 
 
 
சிங்கப்பூர் தைப்பூசம் :
 
 
Finally Visit : 
 
http://www.tamilkalanjiyam.com/religions/religion_articles/thai-poosam.html

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment