Monday 10 June 2013

Daily Holy Slokas






Om shadaananaaya Vidhmahe' shakthihastaaya Dheemahi
Thanno Skandah Pracho Dhayaath

அழகு, இளமை, செல்வம் தரும் அரம்பையர்!
ரம்பா திரிதியை- 14-6-2010
பொற்குன்றம் சுகந்தன்



                        தேவலோகத்தில் உமையவளுக்குத் தோழிகளாக இருக்கும் அரம்பையர்கள், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது தோன்றியதாகப் புராணம் சொல்கிறது.

இவர்கள் தாங்கள் என்றும் இளமை மாறாத கன்னியர்களாகத் திகழ வேண்டும்; தங்களுக்கென்று தனி உலகம் வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினார்கள். சிவபெருமானும் அவர்களுக்காக ஓர் உலகத் தைப் படைத்தார். அது "அப்சரஸ் லோகம்' எனப்பட்டது. அந்த உலகத்தில் பாற்கடலில் தோன்றிய அறுபதாயிரம் அப்சரஸ் பெண் களும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு தலைவியாக இருந்தவள் ரம்பை.

அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற் கொள்பவர்களாகத் திகழ்ந்ததுடன் உமைய வளுக்கும் தோழியராகவும் இருந்தார்கள். இவர்களில் ரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, கலாநிதி, கனகை, மேனகை, திலோத் தமை, சந்திரலேகை என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள். இவர்களை அப்சகணம் என்று சொல்வர்.

இந்த அழகான அப்சரஸ்கள் பல வகை யான இசைக் கருவிகளை மீட்டியபடி இனிய குரலில் பாடுவார்கள். ஆடல் கலையில் வல்லவர்கள்.

"பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணம் சொல்கிறது.

ஆனி மாதத் திரிதியை இவர்களுக்குரிய நாள். இந்நாளில் அப்சரஸ்களை வழிபடும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது.

தற்பொழுது, வடநாட்டில் இந்நாளில் ஸ்ரீலட்சுமி பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

அரம்பையர்கள் தேவலோகத்தில் மட்டுமல்ல; பூலோகத்திலும் உமையவள் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார்கள்.

ஆனி மாதத்தில் வரும் திரிதியை அன்று அந்தந்த திருத்தலங்களில் அருள்புரியும் இறைவனையும் அம்பாளையும் வழிபட்டால் அரம்பையர்கள் மனமகிழ்ந்து வாழ்த்துவார்கள். இதனால் அழகு கூடும்; செல்வ வளம் பெருகும்; கலை களில் சிறந்து விளங்கலாம்.

உமையவள் சில காரணங்களுக்காக சிவபெருமானைப் பிரிந்து தவம் செய்திருக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அங்கெல்லாம் அரம்பையர்கள் உமையவளுக்குப் பலவிதங் களில் தொண்டு செய்வது வழக்கம்.

திருச்சி மணச்சநல்லூர் அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலி (எமன் கோவில் என்றும் சொல்வர்) திருத்தலத்தில் பார்வதி சிவபூஜை செய்தபோது, அரம்பையர்கள் வாழை மரங் களாக மாறி பார்வதிக்கு நிழல் கொடுத்தி ருக்கிறார்கள். இன்றும் இத்தலத்தில் வாழை மரங்கள் தலமரமாக உள்ளன. திலோத்தமை திருக்கழுக்குன்றத்தில் சிவபூஜை செய்து சிறப்புப் பெற்றிருக்கிறாள். காசியில் மேனகை யும் ஊர்வசியும் சிவபெருமானை வழிபட்டு தங்கள் தோஷத்தைப் போக்கிக் கொண்ட தாகப் புராணம் சொல்கிறது. திருநீலக்குடி, பந்தநல்லூர் ஆகிய திருத்தலங்களும் அரம்பை யர்கள் வழிபட்ட திருத்தலங்களாகும்.

ஆனி மாத வளர்பிறை திரிதியை அன்று ரம்பா திரிதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட் டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்து வார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள்.

கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன்  பெயரும் புகழும் கிட்டும் என்பர்.



Om akhudwajaaya Vidhmahe' vakra tundaaya Dheemahi
Thanno Vighnah Pracho Dhayaath



Om Digambaraaya Vidhmahe' Avadhoothaaya Dheemahi
Thanno Dattah Pracho Dhayaath

சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் தலத்தில் தூய அந்தணர் மரபிலே பிறந்தவர் தான் மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினார். இவரது திருமேனியிலே எந்நேரமும் திருவெண்ணீறு துலங்கும். நாவிலே நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். பாதங்கள் சிவ ஆலயங்களை எந்நேரமும் வலம் வரும். இவ்வாறு நலம் தரும் நாயகனை நாளெல்லாம் போற்றிப் பணிந்தார் அடிகளார். இறைவனின் திருவடி நீழலையே பற்றி வீடு பேற்றை அடைவதற்கான ஒப்பற்ற வேள்விகள் பல நடத்தி வந்தார். இவர் நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும் சோம வேள்விதான் மிக மிகச் சிறந்தது. எண்ணற்ற சோம வேள்விகளைச் செய்தமையால்தான்  இவருக்குச் சோமாசி மாறர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். ஒருமுறை திருவாரூரை அடைந்து தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு திருவாரூருக்கு எழுந்தருளியிருந்தார். அவர்களைக் கண்டதும் நாயனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! சோமாசி மாற நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இவருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பும் அருளும் கிடைத்தது. இவ்வாறு சிவதொண்டு பல புரிந்து வாழ்ந்து வந்த சோமாசி மாற நாயனார் திருவைந்தெழுத்து மகிமையால் விடையில் எழுந்தருளும் சடைமுடிப் பெருமானின் திருவருளைப் பெற்று வாழும் அருந்தவப் பேற்றினைப் பெற்றார்.
குருபூஜை: சோமாசிமாற நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


Om Mahaasenaaya Vidhmahe' Shadaananaaya Dheemahi
Thanno Skandah Pracho Dhayaath

Shashti falls on the sixth day after Amavasi (no moon) and Pournami (full moon) in a traditional Hindu calendar. The Sashti day after Amavasi is considered highly auspicious by Muruga devotees and many observe a fast on the day.
Shasti Fasting is considered highly auspicious and many Muruga devotees observe a 24-hour fast, while some take a single meal on the day.
Muruga is also known as Skanda, Shanmugha and Subramanian. In North India, Lord Muruga is known as Kartik or Kartikeya.
On Sashti day, devotees visit Lord Muruga temples from early morning and some people only eat the Prasadam given from the temple.
Some temples conduct special pujas and spiritual discourse on the day.
Also read :
http://www.hindu-blog.com/2008/03/shasti-fasting-how-to-observe-muruga.html



Om Vaivaswataaya Vidhmahe' Pangupaadaaya Dheemahi
Thanno Mandah Pracho Dhayaath


Om Bhaaskaraaya Vidhmahe' Mahaatejaaya Dheemahi
Tannah Suryah prachodayath.



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment