Sunday, 12 May 2013

DAILY HOLY SLOKAS 13.05.13 TO 19.05.13

 

 


வாழ்வின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் உன்னதமான நாள் அட்சயதிரிதியை. "அக்ஷய' என்றால் வளர்வது, குறைவில்லாதது என பொருள். இந்நாளில் தான் கிருஷ்ணரின் அருளால் குசேலர் வீட்டில் செல்வம் செழித்தது. கோவிந்தநாமம் ஜெபித்த திரவுபதியின் ஆடை இடை விடாமல் வளர்ந்தது. முதலாவது யுகமான கிருதயுகத்தின் தொடக்கநாள் அட்சயதிரிதியை அன்று அமைந்தது. திருமாலின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமர் இந்நாளில் அவதரித்தார். கிருஷ்ணரின் சகோதரர் பலராமர் இந்நாளில் பிறந்ததாக சொல்வதுண்டு. லட்சுமியைக் கிருஷ்ணர்
திருமணம் செய்ததும் இந்நாளில் தான். வளர்ச்சிக்கான இந்நாளில் செய்யும் வழிபாட்டிற்கு பலன் அதிகம். இந்த நாளின் பெருமையை உத்தரகாலமிருதம் என்ற வடமொழிநூல் கூறுகிறது. வீட்டில் செல்வ வளம் கொழிக்க வேண்டும் என்பதற்காக லட்சுமியின் அம்சமான பொன்பொருள், ஆபரணங்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் வீட்டுத் தேவைக்கான அனைத்து பொருட்களையும் வாங்க நல்ல நாளாகக் கருதப்படுகிறது.
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் இவளை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்நாளில்,வடமாநிலங்களில் வியா
பாரிகள் லட்சுமிபூஜை செய்வர். இன்று காலை அல்லது மாலை குபேரலட்சுமியை பூஜிப்பது மிகுந்த நன்மை தரும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு, வெள்ளை நிற வாசனை மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, சாம்பிராணி, நவதானியம் ஆகிய பொருட்களை லட்சுமி பூஜையின் போது படைக்க வேண்டும். "ஓம் குபேராய நமஹ' "ஓம் மகாலட்சுமியை நமஹ' ஆகிய மந்திரங்களை 108 முறை ஜெபிக்கவேண்டும். லட்சுமி அஷ்டோத்திரத்தைப் பாராயணம் செய்யலாம். "வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லட்சுமிகரம்' என்பர். இன்று காலை அல்லது மாலை வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட்டால் வீட்டில் திருமகள் நித்யவாசம் செய்வாள். பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை "பஞ்ச
லட்சுமி திரவியங்கள்' என்று குறிப்பிடுவர். இவற்றைத் தானமாக அளித்தால் திருமகள் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பாலை குழந்தைகளுக்கும், தாமரையை ஆலய வழிபாட்டுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், நாணயத்தை ஏழைகளுக்கும் தானமாக வழங்கவேண்டும். தயிர்ச்சாதமும் வழங்கலாம். இவற்றைத் தானம் செய்வதால், லட்சுமியின் அருளால் செல்வந்தர்களாக வாழும்
பாக்கியம் உண்டாகும்.

எட்டுமுறை படிங்க....

வேத வியாசரால் அர்ஜூனனுக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரம் லட்சுமி ஹ்ருதயம். இதை ஜெபித்தே அர்ஜூனன் சுபத்ரையை திருமணம் செய்யும் பேறு பெற்றான். அதர்வண ரகசியத்தின் உத்தர பாகத்தில் லட்சுமி ஹ்ருதயம் ஸ்லோகம் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபமேற்றி மகாலட்சுமியை தியானித்தபடி லட்சுமி ஹ்ருதயத்தை எட்டு முறை படித்தால் வீட்டில் விரைவில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.


தங்கத்தை பராமரிப்பது எப்படி


வாங்கும்போது தங்க ஆபரணங்கள் "பள, பள' என கண்ணைப் பறிக்கும். இந்த ஜொலிப்பு தொடர்ந்து இருக்க வேண்டுமானால், சில பராமரிப்புகளை மேற்க்கொண்டால் போதும்.
தங்க ஆபரணங்களை அணிந்த பின், கழற்றி வைக்கும் போது சோப்பு நுரையில் அலசி, காட்டன் துணியில் துடைத்து வைத்தால், பளபளப்புடன் இருக்கும்.
பயன்படுத்தாமல் அதிக நாள் பெட்டியில் வைக்கப்படும் நகைகள், செம்மை நிறத்தில் இருக்கும். அதை அப்படியே அணியாமல், தண்ணீரில் அலசி அணிய வேண்டும். தொடர்ந்து அணிந்து
கொண்டிருக்கும் வளையல்கள், கம்மல், மூக்குத்தி போன்றவற்றையும் இது போல் செய்தால், புதிது போல் மாறி விடும். ஏதேனும் ஒரு நாள் அணியும் ஆபரணங்களான நெக்லஸ், கல் வளையல் போன்றவற்றை ஒன்றொடு ஒன்று உரசாமல், அதற்கென உள்ள பெட்டிகளில் வைப்பது நல்லது.நகைகளை வைக்க பெட்டி இல்லையென்றால், பனியன் போன்ற காட்டன் துணியில் சுற்றி, பீரோ லாக்கரில் வைக்கவும்.


மனிதனாய் பிறந்த குபேரன்

வேள்விதத்தன் என்பவனுக்கு குணநிதி என்ற பெயரில் மகனாகப் பிறந்தவர் குபேரன். இவர் செல்வத்தை தகாத வழிகளில் செலவழித் தார். குணநிதியின் தாய், பிள்ளைப் பாசத்தால் வேள்விதத்தனிடம் மகனைப் பற்றி தெரிவிக்காமல் இருந்தாள். விஷயம் அறிந்த தந்தை, மனைவி மகனைப் பிரிந்து வேறு பெண்ணை மணந்தார். ஏழ்மையால் வாடிய குணநிதி, ஒருநாள் சிவராத்திரியன்று சிவன் கோயில் ஒன்றில் தங்கினார். அங்கிருந்த பொருட்களை திருடி விற்றால் வறுமை தீருமே என எண்ணினார். கருவறை விளக்கை தூண்டிவிட்டு, அந்த வெளிச்சத்தில் பொருட்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த கோயில் பணியாளரின் காலில் இடறி கீழே விழுந்தார். அந்த பணியாளர் குணநிதியைப் பிடித்து கொன்று விட்டார். செய்தது திருட்டு என்றாலும், கோயில் விளக்கை தூண்டிய புண்ணியத்தால் அடுத்தபிறவியில் கலிங்கநாட்டில் தமன் என்னும் பெயரில் பிறந்தார். பூர்வஜென்ம வாசனையால் தீவிர சிவபக்தரானார். சிவனருளால், வடதிசைக் காவலராக நியமிக்கப்பட்டார். செல்வங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இவரிடம் வந்தது. அளகாபுரி என்னும் நகரை அமைத்து ஆட்சி செய்யத் தொடங்கினார். காசிக்காண்டத்தில் இந்த வரலாறு கூறப்பட்டு உள்ளது.


எரிய லட்சுமி பூஜை

புதுவீட்டில் குடியேறும்போது கோபூஜை செய்வது வழக்கம். இதனால் மனம் மகிழ்ந்து லட்சுமி நித்யவாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். பசுவை வணங்கும்போது, வாசனை மலர்கள், பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து, புல், கீரை, பழங்கள் கொடுத்து பசுவை உண்ணச் செய்யவேண்டும். மூன்று முறை வலம் வந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும். முன்னோர் சாபம், பிதுர்தோஷம் கோபூஜையால் நீங்கும். அனாவசிய செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும். ஆபரணங்கள், ஆடை வாங்கும் யோகம் உண்டாகும். அட்சயதிரிதியை நன்னாளில் லட்சுமியின் அம்சமான பசுவை வணங்குவது செல்வத்தை வாரி வழங்கும்.

அட்சய திரிதியை தினத்தில் ஸ்ரீவைபவ லட்சுமி வழிபாடு
 மே 13 ல், அட்ஷய திரிதியை தினம் அன்று தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கினால், வீடுகளில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தற்போது, தங்கத்தின் விலை குறைந்து வருவதால், அட்ஷய திரிதியை நாளில், நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத்தெரிகிறது. அந்நாளில், லட்சுமியை மட்டும் வணங்குவதை விட, தம்பதிகளாய் காட்சியளிக்கும், வைபவ லட்சுமி, விஷ்ணு பரமாத்மா படங்களை, வீட்டில் வைத்து, ஸ்ரீ வைபவ லட்சுமி சுலோகங்களை பாடி, வழிபட்டால், பொன்னும், பொருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். வட இந்தியாவில் ஸ்ரீ வைபவ லட்சுமி பூஜை என்பது காலம், காலமாக நடக்கும் விசேஷ பூஜை ஆகும்.

கண்ணனை வணங்குக
குபேரனின் மகன்களான நளகூபரன், மணிகிரீவன் இருவரும் கயிலாய மலைச்சாரலிலிலுள்ள குளத்தில் நீராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக நாரதர் வந்தார். அவரைப் பொருட்படுத்தாமல்
அலட்சியம் செய்தனர். கோபம் கொண்ட நாரதர், அவர்களை மருத மரமாக மாறும்படி சாபம் விடுத்தார். இருவரும் 36000 ஆண்டுகள் மரமாக நின்றனர். துவாபரயுகத்தில் ஆயர்பாடியில் நந்தகோபன் வீட்டு வாசலில் அந்த மரங்கள் இருந்தன. ஒருநாள் யசோதை, கண்ணனின் குறும்புகளைப் பொறுக்க முடியாமல் கயிறில் பிணைத்து உரலில் கட்டிப்போட்டாள். உரலை இழுத்துச் சென்ற கண்ணனின் திருவடி மருதமரங்களின் மீது பட்டது. சாபவிமோசனம் அடைந்து நளகூபரனும், மணிகிரீவனும் சுயவடிவம் பெற்றனர். குபேரனின் பிள்ளைகளுக்கு அருள்புரிந்த கண்ணனை அட்சயதிரிதியை நாளில் வணங்கினால் செல்வவளம் கிடைக்கும். முன்னோர் சாபம் தீரும்.

Also read :
http://www.maalaimalar.com/2013/05/11132734/akshaya-tritiya-worship.html


சந்தோஷி மாதா
(
திருமண தடை நீங்க)

ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்

காமதேனு
(
கேட்டது கிடைக்க)

ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்
மனோவியாதி, அச்சம் நீங்கி மனோ தைரியம் பெற
சுப்ரமண்யரின் வேல்மீது பாடல் (ஆதி சங்கரர்)
ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் !
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !!

குடும்ப ஒற்றுமைக்கு துர்காதேவி கவசம்

கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இச்சுலோகம் மிகவும் சிறந்தது.
ச்ருணு தேவி ப்ரவக்ஷ?யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

ஹனுமதஷ்டகம்

நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும். அன்பர்களின் ÷க்ஷமத்தைக் கருதி இந்த ஸ்தோத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.
வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய
தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே
ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே
திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய
தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே
பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
படுக்கும் போது சொல்ல வேண்டியது

அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல:
கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின:"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment